Thursday, May 12, 2016

ஓமன் மதிமுக இணையதள அணியினர் வைகோவிடத்தில் தேர்தல் நிதி ₹60000/- கையளிப்பு!

அம்மா என்று அழைக்க, அன்பு காட்ட எந்த ஒரு சிறு தகுதி கூட இல்லாத ஊழலுக்காக இரண்டு முறை முதலமைச்சர் பதவியை இழந்து சிறை சென்ற ஊழல் ராணியையும், அந்த அடிமைகள் கூட்டத்தை அப்புறப்படுத்தவும், குடும்ப பிரச்சினைக்கு வழி தெரியாமல் விழி பிதுங்கியும், பட்டத்து இளவரசனை அரியணையில் அமர வைக்கவும், 2ஜி புகழ் திருடர் கழகத்தை மீண்டும் வர விடாமல் தடுக்கவும் மாற்று அரசியலுக்கு பதியமிட்டு முன்னேறிச் சென்ற மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக, தமாகா கட்சிகளை இணைத்து குருவை மிஞ்சி கெம்பீரமாக நிற்கும் கூட்டணி கட்சிகளின் பிதாமகனும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ அவர்களிடத்தில், நடைபெற இருக்கிற 2016 சட்டமன்ற தேர்தலுக்காக ஓமன் மதிமுக இணையதள அணியின் தேர்தல் நிதியான ரூபாய் ₹60000/- ஐ இன்று 12-05-2016 காலையில் கலிங்கப்பட்டியில்லுள்ள வைகோ அவர்களின் இல்லத்தில் வைத்து ஓமன் மதிமுக இணையதள அணியின் மறுமலர்ச்சி மைக்கேல், சீனிவாசகம் ஆகியோர் வைகோ அவர்களின் சூறாவளி பிரச்சாரத்தின் மத்தியிலும் நேரடியாக கையளித்தனர். அப்போது தலைவர் வைகோ அவர்கள் அன்போடு ஓமன் மதிமுக இணையதள அணியினரை விசாரித்து நன்றி தெரிவித்துக்கொண்டார்.

நாடு கடந்து வாழ்ந்தாலும் கழகத்தின் பால் கொண்ட கொள்கை பிடிப்பால் தமிழகம் தழைக்க மனமுவந்து கொடையளித்த ஓமன் மதிமுக இணையதள அணி உறுப்பினர்களின் விபரம்,

1.மறுமலர்ச்சி மைக்கேல்
2.வெங்கட்ராமன்
3.சக்தி
4.ஆனந்த்
5.ராதாகிருஷ்ணன்
6.ராஜகுரு
7.ராக்கப்பன்
8.வெங்கடேசன்
9.நவநீத கிருஷ்ணன்
10.குருசாமி
11.கணேசமூர்த்தி
12.கனகராஜ்
13.பரத்
14.விஸ்வநாதன்
15.கண்ணன் ராஜாராம்
16.பிரேம் ஜாஷ்பர்
17.சீனிவாசகம்
18.நாகேந்திரகுமார்
19.விஜயராகவன்
20.பாலகிருஷ்ணன்
21.வெங்கடாச்சலபதி
22.வேல்முருகன்

மக்களின் மனதில் மாற்றம் வேண்டுமென்ற எண்ண ஓட்டம் இருக்கிறது. ஏனவே மாற்று அரசியல், மாற்று பாதையை முன்னெடுத்திருக்கும் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி- தமாகா கூட்டணி கட்சிகள் கூட்டணி ஆட்சியை தமிழகத்தில் அறிமுகப்படுத்தும் நாள் தமிழகம் தலை நிமிரும் நாள் மே 19. வெற்றி நிச்சயம்.

ஓமன் மதிமுக இணையதள அணி