Wednesday, June 30, 2021

குழந்தை மித்ராவை காப்பாற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு வைகோ MP வேண்டுகோள்!

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, இன்று (30.06.2021) எழுதியுள்ள கடிதம்: 

அன்புள்ள பிரதமர் அவர்களுக்கு, 

வணக்கம். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த, 23 மாத பெண் குழந்தை மித்ரா,Autosomal Recessive Spinal Muscular Atropy (SMA)) என்ற, அரிய வகை மரபு அணு கோளாறு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். எனவே, நடக்க முடியாது. உரிய மருத்துவம் அளிக்க முடியாத நிலையில், உயிருக்கும் கேடு நேரும். 

இதற்கான ஒரே மருந்து zolgensma ஆகும். அதன் விலை ரூ 16 கோடி ரூபாய் ஆகும்.  அதற்கு மேல், இந்திய அரசின் வரிகள் தனி. அமெரிக்கா உள்ளிட்ட அயல்நாடுகளில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்ய முடியும்.

இந்த மருந்தை, குழந்தை இரண்டு வயது நிறைவு செய்வதற்குள் வழங்க வேண்டும். குழந்தையின் தந்தை சதீஷ், சிறுதொழில் செய்து வருகின்றார். இவ்வளவு பெரிய தொகையை, அவரால் திரட்ட இயலாது. 

இரண்டு வாரங்களுக்கு முன்பு, இதே நோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற, உத்தரப் பிரதேசம், மீரட்டைச் சேர்ந்த இஷானி என்ற பெண் குழந்தைக்கு, சுவிட்சர்லாந்து நாட்டின் நோவார்டிஸ் மருந்து நிறுவனம், இந்த மருந்தை, லாட்டரி குலுக்கலில் தேர்வு செய்து, எவ்விதக் கட்டணமும் இன்றி, இலவசமாகத் தருவதாக அறிவித்து இருக்கின்றது.  அந்தக் குழந்தை, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மருத்துவம் நடைபெற்று வருகின்றது. 

எனவே, அதே நோவார்டிஸ் நிறுவனத்திடம் இருந்து, zolgensma மருந்தை, தமிழ்நாட்டுக் குழந்தை மித்ராவுக்கும் பெற்றுத் தந்து, குழந்தையின் உயிரைக் காப்பாற்றுமாறு, தங்களை அன்புடன் வேண்டுகிறேன். 

இவ்வாறு, வைகோ தமது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
30.06.2021

Tuesday, June 29, 2021

தஞ்சை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் உதயகுமார் மறைந்தார். நெஞ்சில் துன்பத் தழல் விழுந்தது. வைகோ MP இரங்கல்!

மாணவப் பருவத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, போராட்டக் களங்களில் எல்லாம் பங்கேற்றுச் சிறை சென்றவர் உதயகுமார். அ.தி.மு.க. அரசு போட்ட பொய்வழக்கில், திருச்சி சிறையில் வாடினார். 

28 ஆண்டுகளாக, மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக் கழகத்திற்கு ஒளிதரும் சுடராகத் திகழ்ந்தார்.

அண்ணா பிறந்த நாள் ம.தி.மு.க. மாநில மாநாட்டை, தஞ்சாவூரில் பிரமாண்டமாக வெகு சிறப்பாக நடத்திக் காட்டினார். 

துடிப்பான செயல்வீரர். எப்போதும் சுறுசுறுப்புடன், மாறாத புன்முறுவலோடு இயங்குவார். 

என் மனதில் கவலைகள் சூழும்போது, அவற்றைப் போக்குவதற்கு, ஊக்கம் அளித்துப் பேசுவார். நெருக்கடியான அரசியல் சூழ்நிலைகளில் உடனுக்குடன் என்னைத் தொடர்பு கொண்டு பேசுவார்.  

மாவட்டச் செயலாளர்கள் கூட்டங்களில் எல்லாம் அவரது பேச்சு தனி முத்திரை பதித்தது.  உயிருக்கும் மேலாகக் கழகத்தை நேசித்து, அரும்பாடுபட்டு உழைத்தார். 

அவர் உடல் நலம் இல்லை என்றவுடன், திருச்சி மருத்துவமனையில் சேர்த்து, உயர்ந்த சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தோம். 

அந்த ஒளிச்சுடர் அணைந்து விட்டது. நெஞ்சிலே நெருப்பு விழுந்தது போல் துடிக்கின்றேன். இந்தத் துயரில் இருந்து நான் விடுபடுவது எளிது அல்ல. 

எனக்கு மட்டும் அல்ல, ம.தி.மு.க. தோழர்கள் அனைவருக்குமே, உதயகுமார் மறைவு, மிகப்பெரிய இழப்பு ஆகும்.என் கண்ணீரைத் துடைக்க எனக்குச் சக்தி இல்லை.

அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், தாங்க முடியாத வேதனையோடு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
28.06.2021

Monday, June 28, 2021

கழக‌ தஞ்சை‌ பெருந்தூண் சாய்ந்தது! ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை இரங்கல்!

தஞ்சை‌ மதிமுக மாவட்ட செயலாளர் அண்ணன் கோ உதயகுமார் தஞ்சை அவர்கள் கடந்த 2 வாரங்களாக திருச்சியில்  இருதய சிகிச்சை எடுத்து வந்தார். அன்பு தலைவர் வைகோ MP அவர்கள் முயற்சியில் திருச்சி கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தரமான சிகிச்சையளித்தனர்.

விரைவில் நலமோடு வீடு திரும்புவார் என்று கழகத்தினர் இருந்த நிலையில் பேரிடியாக அவர் மறைவு இருக்கிறது.

ஒரே முறை பேசியிருக்கிறேன். அவரின் அன்பு கலந்த‌ வார்த்தைகள் கழக தொண்டன் என்றதும் அளவிட முடியாதது. வெளிநாட்டிலும் கழகத்தை பரப்புவது பெருமையாக இருக்கிறது என நெகிழ்ந்தார்.

திராவிட இயக்கத்திற்கு வேராக இவரும் இருந்திருக்கிறார். தஞ்சை மண்ணில் திராவிட இயக்கம் இருக்கும் வரை அண்ணன் உதயகுமார் அவர்கள் புகழ் நிலைத்திருக்கும்.

ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
28-06-2021

Thursday, June 24, 2021

கலிங்கப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிறந்த தரச் சான்று தகுதி!

அர்ப்பணிப்புடன் செயல்படும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தேர்வு செய்து, இந்திய ஒன்றிய அரசின் நல்வாழ்வுத்துறை, தேசிய தரச் சான்றிதழ் (National Quality Assurance Standard) வழங்குகின்றது.

தூய்மையான மருத்துவ வளாகம், மக்கள் பயன்பாடு, மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய சேவை உள்ளிட்ட காரணிகள், வரையறுக்கப்பட்ட தேசியத் தரத்திற்கு இணையாக இருக்கின்ற வகையில் தகுதி பெற்ற மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, இந்தத் தரச் சான்று வழங்கப்படுகின்றது. நாடு முழுவதும் இதற்காக நேரடியாகக் கள ஆய்வு செய்கின்றார்கள்.
அவ்வாறு, கடந்த 2019 - 2020 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., அவர்களின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், தேசிய தகுதிச் சான்றிதழ் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இச்சான்றிதழ் பெற்ற, ஒரே அரசு மருத்துவமனை கலிங்கப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகும். இதனால், மேலும் சில வசதிகள் கிடைக்க இருக்கின்றன.
வைகோ அவர்களின் பெரு முயற்சியால் 3.4.1988 இல் தொடங்கப்பட்ட இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்குத் தேவையான நிலத்தை, கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் குடும்பத்தினர் வழங்கினர். சுற்று வட்டத்தில், பதினைந்து கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்குப் பயன் அளிக்கும் இதன் ஒவ்வொரு கட்ட வளர்ச்சிக்கும், வைகோ அவர்கள் அடித்தளமாக இருந்து வருகின்றார்.
தரச் சான்றிதழ் பெற்றதைத் தொடர்ந்து, இம்மருத்துவமனையின் மருத்துவர் மற்றும் ஊழியர்களை அலைபேசி வழியாகத் தொடர்புகொண்டு தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க
சென்னை - 8
‘தாயகம்’
24.06.2021

Sunday, June 20, 2021

மேகேதாட்டு அணை திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட உச்சநீதிமன்ற வழக்கை விரைவு படுத்துக! வைகோ MP வலியுறுத்தல்!

நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற 2014 ஆம் ஆண்டிலிருந்தே காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசின் அனுமதி பெறுவதற்கு கர்நாடக மாநிலம் தொடர்ச்சியாக முனைந்தது.

2014 ஆம் ஆண்டு டிசம்பர் 7 மற்றும் 8 தேதிகளில் கர்நாடகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. ஒன்றிய அமைச்சர் அனந்தகுமார் இல்லத்தில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம நடந்தது. இதில் அப்போதைய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் சதானந்த கவுடா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது ஒன்றிய பா.ஜ.க. அரசு, மேகேதாட்டு அணை கட்டுவதற்கு வெளிப்படையாக அனுமதி அளிக்காது என்றும், கர்நாடக மாநிலம் தடுப்பு அணை கட்டிக் கொள்ளலாம் என்றும் எழுதப்படாத உடனபாடு ஏற்பட்டதை 2015 ஜனவரி 20 இல் தஞ்சையில் காவிரி பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டபோது சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்தேன்.
தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்வதிலேயே குறியாக இருக்கின்ற மோடி அரசு, மேகேதாட்டு அணை கட்டுவதற்கான செயல்திட்ட அறிக்கையை கர்நாடக மாநில அரசு அனுப்பியதும், ஒன்றிய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை 2018 நவம்பர் 25 இல் ஆய்வு அனுமதியை வழங்கியது.
இதனை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழகமும் கொதித்தெழுந்த நிலையில்தான், 2018 டிசம்பர் 5 இல் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கர்நாடகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது.
கடந்த 2020 செப்டம்பர் 15 இல் கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கி ஹோலி, மேகேதாட்டு பகுதியில் அணை கட்டப்பட உள்ள இடத்தை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து 2020 செப்டம்பர் 18 இல் கர்நாடக முதல்வர் எடியூரப்பா டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபின், மேகேதாட்டு அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதியை வழங்கிவிடும்; உடனடியாகப் பணிகளைத் தொடங்குவோம் என்ற அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக 2020 நவம்பர் 18 ஆம் தேதி கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கி ஹோலியும், ஒன்றிய அரசின் நிலக்கரித்துறை அமைச்சரும் - கர்நாடகத்தைச் சேர்ந்தவருமான பிரகலாத் ஜோஷியும், ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தைச் சந்தித்தனர். அதன்பின்னர் கஜேந்திரசிங் ஷெகாவத், “கர்நாடக மாநில நீர் திடடங்களுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், மேகேதாட்டுப் பகுதியில் அணை கட்டுமானப் பணிகளுக்கான பொருட்களை கர்நாடக மாநில அரசு குவித்து வைத்திருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தானே முன்வந்து கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சிக்கு தடை விதித்து, அங்கு நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வழங்க ஒரு குழுவையும் அமைத்தது.
ஒன்றிய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அனுமதி பெறாமல், மேகேதாட்டில் தடுப்பணை கட்டும் முயற்சியில் கர்நாடகம் ஈடுபட்டுள்ளது என்றும் தீர்ப்பளித்தது. மேலும் இதுகுறித்து தமிழ்நாடு அரசும், கர்நாடக அரசும் தங்களது விளக்கங்களை வரும் ஜூலை 5 ஆம் தேதி தீர்ப்பாயத்தின் அமர்விற்கு வந்து தெரிவிக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்துள்ளது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு வழங்கிய இத்தீர்ப்பை இரத்து செய்யுமாறு டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமையகத்தில் கர்நாடக மாநில அரசு மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு நீதிபதி ஏ.கே.கோயல், தமிழ்நாடு அரசின் விளக்கங்களைக் கோராமல், கர்நாடகம் வைத்த கோரிக்கையை ஏற்று, தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆணையை இரத்து செய்து, ஜூன் 18, 2021 இல் தீர்ப்பளித்து இருக்கிறார்.
தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் அமர்வு ஜூலை 5, 2021 அன்று மேகேதாட்டு அணை தொடர்பாக தமிழ்நாடு - கர்நாடக மாநில அரசுகளின் கருத்துகளைத் தெரிவிக்க ஆணையிட்டிருந்த நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாய நீதிபதி ஏ.கே.கோயல் அதற்கு வாய்ப்பளிக்காமல், ஒருதலைபட்சமாக தீர்ப்பளித்தது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல.
இதன் பின்னணியில்தான் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மேகேதாட்டு அணை கட்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துவிட்டதாக கூறிக்கொண்டு, காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் பணியை விரைவில் தொடங்குவோம் என்று தெரிவித்து இருக்கிறார்.
காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பு, உச்சநீதிமன்றம் 2018 பிப்ரவரி 16 இல் அளித்த தீர்ப்பு ஆகியவற்றை கர்நாடக மாநிலம் அலட்சியப்படுத்துவதும், ஒன்றிய பா.ஜ.க. அரசு அதற்கு துணை போவதும் வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.
காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்படுமானால் தமிழ்நாட்டிற்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி வரவேண்டிய 177.25 டி.எம்.சி. நீர் வெறும் கானல் நீராகப் போய்விடும். இதற்கு ஒருபோதும் ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை ஜூன் 17 ஆம் தேதி சந்தித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமரிடமும் நேரில் வலியுறுத்தி உள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை தமிழ்நாடு அரசு உடனடியாக விரைவுபடுத்தி, மேகேதாட்டுவில் தடுப்பு அணை அமைக்கும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
20.06.2021

Saturday, June 19, 2021

மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல வாரியம் அமைத்திடுக. வைகோ MP கோரிக்கை!

தமிழ்நாடு முழுமையும் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடை மெல்லிசைக் கலைஞர்கள் இருக்கின்றார்கள். அவர்களுடன், குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கு கொள்கின்றார்கள்.  இசைத் தொழிலை நம்பியே வாழ்கின்றார்கள். 

கோவில் திருவிழாக்கள், திருமணம் மற்றும் மங்கல நிகழ்வுகள், அரசு விழாக்கள் அமைச்சர் பெருமக்கள் கலந்து கொள்கின்ற பொது நிகழ்ச்சிகள் இவைகளில் மேடை மெல்லிசைக் கச்சேரிகள் நடந்து வந்தன. கொரோனா பொது முடக்கம், அவர்களுடைய வாழ்க்கையை அடியோடு முடக்கி விட்டது. 

இந்தத் தொழிலைத் தவிர வேறு எந்தத் தொழிலும் செய்யமுடியாத செய்ய தெரியாத கலைஞர்கள், கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இசைநிகழ்ச்சிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு விட்டதால், அவர்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது.  உணவகங்களிலும் சிறு கடைகளிலும் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்கின்றார்கள். 

கலைகளை வளர்த்த தமிழகத்தில், இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கின்ற வகையில், காவல்துறையின் உரிய அனுமதியுடன் இசைக்கச்சேரிகள் நடத்துவதற்கு உரிய அனுமதி தர வேண்டும். 

தமிழ்நாடு மேடை மெல்லிசைக் கலைஞர்களுக்கு, உதவித் தொகைகள் கிடைத்திட வேண்டும்; அவர்களுக்குத் தனி நல வாரியம்அமைத்துத் தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
18.06.2021

Tuesday, June 15, 2021

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைத் தனியாருக்கு விற்கக் கூடாது. வைகோ MP அறிக்கை!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, 10.02.1937 இல், சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு, மு.சி.த.மு. சிதம்பரம் செட்டியார் அவர்களால் தொடங்கப்பட்டது. 1969 ஆம் ஆண்டு, நாட்டுடைமை ஆக்கப்பட்டது. தற்போது, தமிழ்நாட்டின் முன்னோடி வங்கியாகத் திகழ்கின்றது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள், குக்கிராமங்களில் 1500 கிளைகள் உள்ளன. 15 மண்டல அலுவலகங்களும்  உள்ளன. 

பிற வங்கிகளை ஒப்பிடுகையில், ஐஓபி வங்கியில், பிற கிளைகளுக்குப் பணம் செலுத்துதல், புத்தகம் வரவு வைத்தல் போன்ற சேவைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. எனவே, தமிழ்நாட்டில் ஐஓபி வங்கியில் கணக்கு வைத்துள்ள ஒருவர், இந்தியாவின் எந்த வங்கிக் கிளையிலும், சேவைக் கட்டணம் இல்லாமல், பணம் எடுக்க இயலும். பிற வங்கிகளில், இதற்குத் தனிக் கட்டணம் வாங்குகின்றார்கள். 

கிராமப்புற மக்களுக்கு, குறைந்த வட்டியில் விவசாய நகைக்கடன், பயிர்க்கடன், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு ஊதியம் முதலியவற்றை, ஐஓபி வழங்கி வருகின்றது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் கணக்குகள் ஐஓபி வங்கியில் உள்ளன. மாவட்ட நீதிமன்றங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மருத்துவக் கல்லூரிகளிலும் கிளைகள் உள்ளன. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில், கடந்த 50 ஆண்டுகளாக ஐ.ஓ.பி. வங்கிக் கிளை செயல்பட்டு வருகின்றது. 

கடந்த 2005 ஆம் ஆண்டு, ஐ.ஓ.பி. வங்கியை, வடமாநில வங்கியுடன் இணைக்கத் திட்டமிட்டபோது, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் கடும் எதிர்ப்புக் குரல் எழுப்பினார்கள். எனவே, அந்த முயற்சி அப்போது கைவிடப்பட்டது. 

ஆனால், இரண்டு பொதுத்துறை வங்கிகளை, தனியாருக்கு விற்கப் போகின்றோம் என, நிதி அமைச்சர் நிர்மலா, பிப்ரவரி 1 அன்று, நாடாளுமன்றத்தில் வரவு செலவுக் கணக்கு தாக்கல் செய்து ஆற்றிய உரையில் குறிப்பிட்டார். அவை எந்த வங்கிகள் என்பது குறித்து ஆய்வு நடைபெற்றதாகவும், நான்கு வங்கிகளின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டதாகவும் ஏடுகளில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அவற்றுள் ஒன்றாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பெயரும் இருப்பது, தமிழ்நாட்டு மக்களுக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. 

இதுவரை, ஒரு பொதுத்துறை நிறுவனத்தைக்கூட புதிதாகத் தோற்றுவிக்காத பாரதிய ஜனதா கட்சி அரசு, ஏற்கனவே இருக்கின்ற பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்கு விற்க முயற்சிப்பது, பெருங்கேடு ஆகும். தனியார் புதிய வங்கிகளைத் தொடங்குவற்கு எந்தத் தடையும் இல்லை.  அப்படி எத்தனையோ புதிய தனியார் வங்கிகள் தோன்றி இருக்கின்றன. அவர்களுடைய வங்கிகளில் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் கட்டணம் வாங்குகின்றார்கள்.   எந்தவிதமான, வட்டித் தள்ளுபடியும் தருவது இல்லை. மக்களைக் கசக்கிப் பிழிகின்றார்கள்

ஏற்கனவே, ‘பேங்க் ஆப் தமிழ்நாடு’ என்ற பெயரில் இயங்கி வந்த வங்கியை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் இணைத்தார்கள். இப்போது, ஐஓபியைத் தனியாருக்கு விற்க முயற்சிக்கின்றார்கள். தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கின்ற, 85 ஆண்டுகளாக இயங்கி வருகின்ற பெருமை மிக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என்ற பொதுத்துறை நிறுவனத்தை, தனியாரிடம் கொடுப்பதைத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
15.06.2021

ஐம்பத்தி ஐந்து வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணி வழங்குக! வைகோ வேண்டுகோள்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் கிராமப் பகுதிகளில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா இரண்டாம் அலை கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்தச் சூழலில், அதனைக்  கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கை அமல்படுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து உள்ளது. 

நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை, கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி தமிழக அரசின் ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் திரு.கே.எஸ்.பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டார்கள். 

அதில்  சளி, இருமல், காய்ச்சல் இருப்பவர்கள், சர்க்கரை மற்றும் இதயநோய் உள்ளவர்களை நூறு நாள் வேலைத்திட்டத்தில் பயன்படுத்தக் கூடாது, 55 வயதிற்கு மேற்பட்டவர்களை பணி செய்ய அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தால், கிராமப்புற ஏழை எளிய மக்கள் அதிக அளவில் பயன்பெற்று வருகின்றார்கள். பெரும்பாலும், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் நூறு நாள் வேலை வாய்ப்பை நம்பியே உள்ளது. 

ஐம்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தின்கீழ் பணியாற்ற முடியாது என்ற அறிவிப்பால், கணவன் மற்றும் குழந்தைகளை இழந்து வாழும் பெண்களும், வயதானவர்களும் வேலையில்லாமல் உணவுக்குக் கூட  வழியின்றி தவித்து வருகின்றார்கள். 

கொரோனாவால் ஏற்படும் மரணங்களை விட, உணவுக்கு வழியின்றி பசியால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நூறு நாள் வேலைத் திட்டத்தில் கிடைக்கும் ஊதியத்தை நம்பித்தான் பெரும்பாலான கிராம மக்களின் வீட்டில் அடுப்பு எரிகின்றது. 

தற்போது, தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகின்றது. 

ஆகவே, தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ், ஐம்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் பணியில் ஈடுபடக்கூடாது என்ற விதியை தமிழக அரசு உடனடியாக தளர்த்த வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும்  அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும். 

நூறு நாள் வேலைத்திட்டத்தை நம்பி வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கும் வயதானவர்கள், முதியவர்கள் படும் துயரத்தை கணக்கில் கொண்டு, ஐம்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர்களையும் உடனடியாகப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
15.06.2021

Monday, June 14, 2021

சிமெண்ட், கம்பி மற்றும் கட்டுமானப் பொருட்கள் விலை ஏற்றத்தைத் தடுத்து நிறுத்துக. வைகோ MP வலியுறுத்தல்!

கொரோனா பேரிடர் மக்களின் வாழ்வாதாரங்களைப் பறித்து, பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பொது முடக்கம் காரணமாக கட்டுமானப் பணிகள் தொடர முடியாத நிலையில், இலட்சக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வேலையும் இல்லை. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கட்டுமானப் பணிகளை தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம், கடந்த சில மாதங்களாக கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகும்.

கொரோனா பெருந்தொற்று, தமிழ்நாட்டு அரசின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, நடுத்தர எளிய மக்களின் பொருளாதாரத்தையும் சூறையாடி இருக்கிறது. இந்நிலையில், கட்டுமானப் பொருட்களின் தாறுமாறான விலையேற்றம் அதிர்ச்சி தருகிறது.

சில்லரை விற்பனையில் 410 ரூபாய் முதல் 430 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு மூட்டை சிமெண்ட் தற்போது ரூ.470 - 520 ஆக அதிகரித்துள்ளது.

இரும்புக் கம்பி ஒரு கிலோ ரூ. 60 லிருந்து ரூ. 70 - 75 ஆகவும், ரூபாய் 3600க்கு விற்கப்பட்ட எம்-சாண்ட் ஒரு யூனிட் 4000 ரூபாய் ஆகவும், ரூ.4600க்கு விற்பனையான  வி-சாண்ட் ஒரு யூனிட் ரூ.5100 ஆகவும் உயர்ந்துள்ளது.

23 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லோடு செங்கல் 28 ஆயிரம் ரூபாயாகவும், 3 யூனிட் கருங்கல் ஜல்லி ரூ. 8500 லிருந்து ரூ. 9500 ஆகவும் அதிகரித்துவிட்டன.

சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் எந்த அடிப்படையில் விலையை உயர்த்தி வருகின்றன? என்ற கேள்வி எழுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் காரணம் காட்ட முடியாது. ஏனெனில் டில்லியில் சிமெண்ட் விலை அதிகபட்சமாக ரூ. 350 ஆகவும், அண்டை மாநிலங்களான ஆந்திராவில் ரூ, 370 முதல் ரூ. 390 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ரூ. 520 அளவுக்கு சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டு இருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

சிமெண்ட், கம்பி தயாரிப்பு நிறுவனங்களின் விலை நிர்ணயத்தை தமிழ்நாடு அரசு கண்காணிக்க வேண்டும். கொரோனா காலத்தைப் பயன்படுத்தி கட்டுமானப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதையும் தடுத்து நிறுத்தி கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
14.06.2021

Sunday, June 13, 2021

தென் மாவட்ட குடிநீர் பற்றாக்குறையைப் போக்க விரைவான நடவடிக்கை மேற்கொள்க. அமைச்சர் கே.என்.நேருவுக்கு வைகோ கடிதம்!

மாண்புமிகு நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் உயர்திரு கே.என்.நேரு அவர்களுக்கு,

வணக்கம்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், புளியங்குடி நகராட்சிகள், திருவேங்கடம் பேரூராட்சி மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம், சிவகாசி, திருத்தங்கல் ஆகிய நகராட்சிப் பகுதிகளுக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து கூடுதலாக குடிநீர் வழங்க வழிவகை செய்யும் “சங்கரன்கோவில் கூட்டுக் குடிநீர் அபிவிருத்தித் திட்டம் பகுதி -1” எனும் திட்டத்திற்கு, தமிழக அரசால் 30.01.2017 இல் நிர்வாக உத்தரவு வழங்கப்பட்டு, 06.12.2017 முதல் வேலைகள் நடந்து வருகின்றன.

உலக வங்கி, தமிழ்நாடு நகர கட்டமைப்பு மேம்பாட்டு மையம் மற்றும் அம்ரூட் (AMRUT) திட்டத்தின் கீழ் ரூபாய் 543 கோடி நிதி உதவியுடன் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட ஐந்து நகராட்சிகள் மற்றும் ஒரு பேரூராட்சியைச் சேர்ந்த 1,14,045 குடியிருப்புகளில் வசிக்கும் 4,35,150 பேருக்குக் குடிநீர் வழங்குவதை இலக்காகக் கொண்ட இத்திட்டப் பணிகள் நிறைவுபெறும் போது அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கிடைக்கப் பெறும் என்பது இத்திட்டத்தின் இலக்கு ஆகும்.

இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீர் பற்றாக்குறை குறித்த தங்களின் குமுறல்களை நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது வேட்பாளர்களிடம் காட்டியதை அறிய முடிந்தது. 

குடிநீர் தட்டுப்பாடு நிலவும் இப்பகுதியில், திட்டப் பணிகளை குறிப்பிட்ட கால அளவு நிர்ணயித்து விரைந்து முடிக்க, குடிநீர் வடிகால் வாரியத்திற்கு தக்க உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் இத்திட்டத்தில் பயன்பெறும் திருவேங்கடம் பேரூராட்சிக்கு உட்பட்ட செல்லபட்டி, கீழத் திருவேங்கடம், புதுப்பட்டி, ஆவுடையார்புரம் ஆகிய நான்கு கிராமங்களுக்கும் புதிய குடிநீர் குழாய்கள் அமைத்து, இத்திட்டத்தில் கிடைக்கப் பெறும் தண்ணீரை வழங்கிடவும் வேண்டுகிறேன்.

அதேபோல், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நான் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது,  தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் பயன்பெறும் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக என் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.

அம்மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து உதவிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.”

வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் தி.சதன்  திருமலைக்குமார், தென்காசி மாவட்டப் பொறுப்பாளர் தி.மு.இராசேந்திரன் ஆகியோர் திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு அவர்களை  நேரில் சந்தித்து கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் கடிதத்தை வழங்கினார்கள்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
13.06.2021

Friday, June 11, 2021

திருவள்ளுவர் ஓவியத்திற்கு சிறப்புச் செய்க. தமிழக அரசுக்கு வைகோ MP வேண்டுகோள்!

1967 ஜூன் 23 அன்று, தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலான அரசு, வரலாற்றுச் சிறப்புமிக்க ஆணை ஒன்றை வெளியிட்டது. G.O.MS.1.1193.

அதன்படி, ஒவியப் பெருந்தகை, கே.ஆர். வேணுகோபால் சர்மா அவர்களால் வரையப்பட்டு, தமிழகத்தில் அரசியல், மொழி, கலை சார்ந்த அறிஞர் பெருமக்களால் ஒருமனதாக வழிமொழியப்பட்டு, ஒன்றிய-மாநில அரசுகளால் ஏற்பு அளிக்கப்பட்ட திருவள்ளுவர் திருஉருவப் படம், தமிழ்நாடு முழுமையும் அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், காவல்நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பேருந்துகள் ஆகியவற்றில் பொருத்தப்பட்டது. சாதி, மத பேதம் அற்ற பொதுநோக்கம், குறள்வழியில் நிலைநிறுத்தப்பட்டது. 

குறள் ஓவியம் தந்த, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைத்தார்; கன்னியாகுமரியில் வள்ளுவருக்கு சிலை நிறுவி, வள்ளுவத்தின் புகழை பார் அறியச் செய்தார். 

ஆனால், கடந்த அண்ணா தி.மு.க. ஆட்சிக்காலத்தில், திருவள்ளுவரின் உண்மை உருவத்தை படிப்படியாக மறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அமைச்சர்களின் அறைகளில் இருந்த, திருவள்ளுவரின் ஓவியம் காணாமல் போயிற்று. அரசு அச்சகத்திலும் புதிய படங்கள் அச்சிடுவது படிப்படியாகக் குறைக்கப்பட்டது.

அதன்பிறகு, மெல்லமெல்லத் தங்கள் சுயநல மத அரசியலை, திருவள்ளுவரின் மேல் போர்த்தத் துவங்கினர். திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூசத் தொடங்கினர். 

காப்பு உரிமை பெறப்பட்ட, ஒன்றிய, மாநில அரசுகளால் ஏற்பு அளிக்கப்பட்ட, அரசு உடைமை ஆக்கப்பட்ட அந்தத் திருவள்ளுவர் ஓவியம், அண்ணா, கலைஞர் ஆட்சிக்காலத்தில் பொலிவு பெற்று இருந்ததுபோல்,மீண்டும் பொலிவு பெற வேண்டும்; அனைத்து அமைச்சர்கள், அரசு அலுவலகங்கள், அரசுப் பேருந்துகளில் திருவள்ளுவர் ஓவியப் படம் இடம் பெறச் செய்திட வேண்டும் என, தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
11.06.2021

இலங்கையின் சீனச் சார்பு மற்றும் அமெரிக்க நாடாளுமன்றத் தீர்மானம்; தமிழ் ஈழம் அமைய பொது வாக்கு. பிரதமர் நரேந்திர மோடிக்கு, வைகோ கடிதம்!

(10 ஜூன் 2021)

அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு,

வணக்கம். 

தெற்கு ஆசியாவில், இந்தியப் பெருங்கடலில், இந்தியாவின் ஆளுமையை நிலைநிறுத்துவதற்கு, தமிழ் ஈழம் அமைந்தாக வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கின்றது. 
அதற்கான சூழ்நிலைகளை, தங்களின் கவனத்திற்குக் கொண்டு வர விழைகின்றேன். 

கடந்த காலங்களில், இந்தியாவின் நம்பிக்கைக்கு உரிய நாடாக இலங்கை இருந்தது இல்லை. அண்டை நாடு என்கின்ற முறையில், இந்தியா இலங்கைக்குக் கூடுதல் முன்னுரிமை வழங்கினாலும் கூட, இக்கட்டான வேளைகளில், அவர்கள் இந்தியாவின் காலை வாரி விடுகின்றார்கள். தாங்கள் ஒரு சீனச் சார்பு நாடு என்பதை, அவர்கள் பலமுறை எடுத்துக் காட்டி இருக்கின்றார்கள். 

மகிந்த இராஜபக்சே, இலங்கைக் குடி அரசின் தலைவராகப் பொறுப்பு ஏற்பதற்கு, இந்தியா மறைமுக ஆதரவு அளித்தது. ஆட்சிப் பொறுப்பு ஏற்ற அவர், அம்பாந்தோட்டை துறைமுகத்தில், சீன நீர்மூழ்கிக் கப்பல் நுழைய ஒப்புதல் வழங்கினார். இந்தியப் பெருங்கடலில், முதன்முறையாக, சீன நீர்மூழ்கிக் கப்பல் நுழைந்தது. அவருக்கு அடுத்து ஆட்சிப் பொறுப்பு ஏற்ற மைத்திரிபால சிறிசேனா, மற்றொரு சீன நீர்மூழ்கிக் கப்பலை, அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைய விட்டார். இலங்கைக்கு அளவுக்கு அதிகமான கடன் கொடுத்து, 99 ஆண்டுகள் குத்தகை என்ற பெயரில், அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா கைப்பற்றி விட்டது. 

இப்போது, ராஜபக்சே சகோதரர்களின் ஆட்சியில், இந்தியப் பெருங்கடலில் சீனமயமாக்கல் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இலங்கை தலைநகர் கொழும்புவில் ஒரு நிலப்பரப்பை, சீனாவுக்குக் கொடுத்து விட்டனர். இலங்கை நாடு முழுமையும், சீன உதவியுடன் நடைபெறுகின்ற கட்டுமானப் பணிகளில், ஐந்து இலட்சம் சீனத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றார்கள். அவர்களுள் ஒரு பகுதியினர், சீன உளவுத்துறையினர் என்பதில் ஐயம் இல்லை. அவர்களுக்காக, சீன மொழிப் பள்ளிகள், சீனக் கலை அமைப்புகள், சீனப் பயிற்சியாளர்களின் கராத்தே வகுப்புகள், இலங்கையில் தொடங்கப்பட்டுள்ளன. தெருக்கள், தொடர்வண்டி நிலையங்கள், விடுதிகளின் பெயர்ப் பலகைகளில், சீன மொழி எழுத்துகள் எழுதப்பட்டு வருகின்றன. 

தமிழ் ஈழப் பகுதிகளில், அனலைத் தீவு, நெடுந்தீவு, நயினா தீவு ஆகிய பகுதிகளில் அமைய இருக்கின்ற சூரிய மின்விசைத் திட்டமும், சீனாவுக்குத் தரப்பட இருக்கின்றது. வத்தலான் என்னும் சிற்றூரில், சிறுவர்களுக்கான பூங்காவை சீன முதலீட்டாளர்கள் வடிவமைத்து இருக்கின்றார்கள். பூங்காவின் நுழைவாயிலில், சீனர்களின் நெடும்பாம்பு (டிராகன்) சின்னத்தை வரைந்து இருக்கின்றார்கள். 

எனவே, இலங்கை நாடு சீனாவின் தளமாக மாறி வருகின்றது. இந்த நிலையில், இந்திய எல்லையை ஒட்டி இருக்கின்ற, தமிழ் ஈழம் மட்டுமே, இந்தியாவின் தளமாக இருக்க முடியும்.

கடந்த காலங்களில், இலங்கை சீனாவின் பக்கம் சாய்ந்த வேளைகளில், இலங்கையின் ஆட்சித்தலைமையை மாற்றும் அணுகுமுறையை இந்தியா கடைப்பிடித்தது. ஆனால், இனி அந்த அணுகுமுறை வெற்றி பெறாது.  

லண்டன் கிங்ஸ் கல்லூரியில், அனைத்து நாடுகள் உறவு மற்றும் பாதுகாப்பு ஆய்வுத்துறைப் பேராசிரியராகப் பணிபுரிகின்ற, ஆற்றல்மிக்க எழுத்தாளர் ஹர்ஷ் வி. பந்த் (Harsh V. Pant), 29.01.2015 ஆம் நாள், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை இங்கே தருகின்றேன். 

Indian policymakers will be mistaken if they think a change of regime in Colombo, will lead to a dampening of Sino-Sri Lanka ties. China’s role is now firmly embedded in Sri Lanka-economically as well as geopolitically. India will have  to  up it’s game, if it wants to  retain it’s leverage in Colombo.  

-Harsh V. Pant, Professor in International Relations, Department of Defence Studies, King’s college, London. 

இந்திய கொள்கை வகுப்பாளர்கள், இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த நினைத்தால், தவறாக முடியும்; அது சீன இலங்கை உறவுகளைச் சீர்குலைக்கும்; பொருளாதாரம் மற்றும் புவிசார் அடிப்படையில், இலங்கையில் இப்போது சீனாவின் பங்கு உறுதியாகி இருக்கின்றது; கொழும்பில் தன் செல்வாக்கை நிலைநிறுத்த இந்தியா விரும்பினால், ஒரு விளையாட்டு ஆடித்தான் ஆக வேண்டும்.   

எனவே, தமிழ் ஈழத்தைக் காக்கவும், ஈழத்தமிழர்களின் இறையாண்மையை நிலைநாட்டவும்  இந்தியா தவறினால், இந்தியப் பெருங்கடலில் ஆளுமையை இழக்க நேரிடும்; சீனாவுக்கு இடம் தருவதாக ஆகி விடும்.

அவ்வாறு, தமிழ் ஈழத்திற்குத் துணையாக நின்றால், சிங்கள இலங்கை அரசு, சீனாவின் முழு ஆதரவு நாடு ஆகி விடும் என்பது தவறான கணிப்பு ஆகும். தமிழ் ஈழம் அமைந்தால், இலங்கை வலு இழந்து விடும்; இந்தியாவைப் பகைத்துக் கொள்ள மாட்டார்கள். 

இலங்கை சீன ஆதரவு நாடு ஆகிவிடும் என்று, நமது அயல் உறவுக் கொள்கை வகுப்பாளர்கள் சிலர் கருதுவது, கால விரயம் ஆகும்; இப்போதும்கூட, இலங்கை, சீன ஆதரவு நாடுதான். இலங்கையில் சீனாவின் பிடி மேலும்மேலும் இறுக வாய்ப்பு அளிப்பது இந்தியாவுக்குக் கேடாகவே முடியும். எனவே, இந்தியப் பெருங்கடலில்,இந்தியாவின் உறுதிமிக்க ஆளுமை, அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரத் தளமாக, இறையாண்மை உள்ள தமிழ் ஈழம்தான் இருக்க முடியும்.

2021 மே 18 ஆம் நாள், அமெரிக்க நாடாளுமன்றத்தின் (House of Representatives) 117 ஆவது கூட்டத்தொடரின் முதலாவது அமர்வில், நிறைவேற்றப்பட்ட 413 ஆவது தீர்மானம், ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை விரிவாகப் பட்டியல் இட்டு, உலக நாடுகள் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து இருக்கின்றது. 

அந்தத் தீர்மானத்தின் சில பகுதிகளை, இங்கே மேற்கோள் காட்ட விழைகின்றேன். 

இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் இறந்தனர்; காணாமல் போயினர்; புலம் பெயர்ந்து சென்றனர்;

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு, 2019 ஆம் ஆண்டு, ராஜபக்சே அரசு பொறுப்பு ஏற்றதை அடுத்து, மனித உரிமைகள் மன்றத்தின் 30-1 தீர்மானத்தில் இருந்து இலங்கை விலகிக் கொண்டது; 

தமிழர்களின் மரபுவழித் தாயகமான, அந்த நாட்டின் வடகிழக்கு நிலப்பரப்பில், போரில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இடங்களில், படைகள் குவிக்கப்பட்டு, இரண்டு பொதுமக்களுக்கு ஒரு படை வீரர் என்ற வகையில் நிற்கின்றனர்; 

இலங்கையின் வடக்கு மாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்தில், ஆயுதப் போராட்டத்தின்போது இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை கோரியும், வடக்கு-கிழக்கு நிலப்பரப்பில், ஐ.நா.மன்றத்தின் மேற்பார்வையில், பொது வாக்குப்பதிவு நடத்தி நிலையான தீர்வு காணக் கோருகின்றது; 

இலங்கை அரசு, பல ஆண்டுகளாக, மாகாண சபைத் தேர்தல்களை நடத்தவில்லை; அதனால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மட்டும் அன்றி, ஒட்டுமொத்தமாக இலங்கை நாடு முழுமையும், ஊர் ஆட்சி மன்றங்களைத் தேர்ந்து எடுக்கின்ற உரிமை, மக்களுக்கு மறுக்கப்பட்டு இருக்கின்றது; 

2021 ஆம் ஆண்டு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வெளியிட்ட ஆய்வு அறிக்கையின்படி, கடந்த ஆண்டுகளில், இலங்கை அரசு-

(1) போர்க்குற்றங்கள் புரிந்தவர்களை உயர் பதவிகளில் அமர்த்தி இருக்கின்றது; 
(2) போர்க்குற்றம் இழைத்தவர் என அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு, பொது மன்னிப்பு வழங்கி இருக்கின்றது; 
(3) மக்கள் ஆட்சியை வலுப்படுத்துகின்ற சீர்திருத்த நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டு,  அனைத்து அதிகாரங்களையும், குடிஅரசின் தலைவரிடம் குவித்து இருக்கின்றது; 
(7) ஆட்சியாளர்களை எதிர்ப்பவர்களைக் கடத்துவதற்கும், துன்புறுத்துவதற்கும் பாதுகாப்புப் படையினரைப் பயன்படுத்துகின்றது; 

மேலும், போர்க்குற்றம் இழைத்தவர்கள் எனக் குற்றம் சாட்டப்படுவோரை, நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்தவர்களுக்கு எதிரான சான்றுகளைத் திரட்டுகின்ற முயற்சிகளுக்கும், அரசு தடைகளை ஏற்படுத்துகின்றது; சட்டத்தைப் புறந்தள்ளி, கைது செய்கின்றது. மேலும், வழக்கு ஒழிந்துபோன, மிகக் கடுமையான, வன்முறையாளர்களை அடக்குகின்ற சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, பன்னாட்டு நடைமுறைகளுக்கு எதிரான, திரும்பப் பெறுவதாக அரசே பலமுறை உறுதிமொழி அளித்தபடி திரும்பப் பெறாத, அடக்குமுறைச் சட்டங்களைப் பயன்படுத்துகின்றனர்.  

மேலும், 2021 ஜனவரி மாதம், ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையர் மிச்சேல் பேச்சலெட் குறிப்பிட்டபடி, தேசிய மட்டத்தில், பொறுப்பு உணர்வை முன்னெடுத்துச் செல்ல, அரசாங்கத்தின் இயலாமை மற்றும் விருப்பம் இன்மையைக் கருத்தில் கொண்டு, பன்னாட்டுக் குற்றங்களுக்கான நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, பன்னாட்டு அளவில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய வேளை இது.

ஆயுதப் போரின் போதும், அதைத் தொடர்ந்தும், காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கு, தங்களது அன்புக்கு உரியவர்கள் இருக்கின்ற இடம் குறித்து, இதுவரை எந்தத் தகவலும் இல்லை; போரின் முடிவில், அரசாங்கத்திடம் சரண் அடைந்தவர்கள் குறித்தும், இதுவரை எந்தப் பட்டியலும் வெளியிடப்படவில்லை. 

எனவே, இந்த அவை (House of Representatives) நிறைவேற்றும் தீர்மானம்: 

1. இலங்கையில் ஆயுதப் போர் முடிந்த 12 ஆம் ஆண்டு நினைவு நாளில், போரினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது; 

2. இறந்தவர்களின் நினைவை மதித்துப் போற்றுகின்றது; நல்லிணக்கம், மறுவாழ்வு, இழப்பு ஈடு மற்றும் சீர்திருத்தங்களுக்கான தேடலில், இலங்கையில் உள்ள அனைத்து சமூக மக்களுக்கும் உறுதுணையாக இருக்க உறுதி பூணுகின்றது; 
 
3. மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் முன்னுரிமை அளித்த, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மன்றத்தைப் பாராட்டுகின்றது; இந்த நடவடிக்கைகளில், இலங்கை அரசு தலையிடக் கூடாது. 

4. இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களிலும் நீதிக்காகப் போராடுகின்ற வழக்குஉரைஞர்கள், அரசாங்க பாதுகாப்புப் படையினரால் அச்சுறுத்தப்பட்டு வருகின்ற, காணாமல் போன தமிழர்களின் குடும்பத்தினரின் துணிச்சலைப் பாராட்டுகின்றது;  

5. இலங்கையில் வரலாற்றுக் காலந்தொட்டு ஒடுக்கப்பட்டு வருகின்ற, வடக்கு, கிழக்கு நிலப்பரப்பில் வாழ்கின் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும்படி, பன்னாட்டு சமூகத்தை வலியுறுத்துகின்றது; இன மோதல்களுக்கு வழிவகுத்த அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முழுமையான அரசியல் தீர்வை நோக்கி செயல்பட வேண்டும்; 

7. இலங்கையில் போரின்போது நிகழ்ந்த கடுமையான குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறலுக்கான, நம்பகமான மற்றும் பயனுள்ள, பன்னாட்டுப் பொறிமுறையை நிறுவ, ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை, பாதுகாப்பு சபை, மனித உரிமைகள் மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றுமாறு, அமெரிக்காவை வலியுறுத்துகின்றது. 

இவ்வாறு, அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றது. 

எனவே, உலக வரைபடத்தில், இஸ்ரேல் என்ற நாட்டை யூதர்கள் ஆக்கியது போல்,  வங்கதேசம் என்ற நாட்டை இந்தியா ஆக்கியது போல், தமிழ் ஈழம் என்ற நாட்டை  அமைப்பதற்கு, ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில், உலகம் முழுமையும் பல நாடுகளில் பரவி வாழ்கின்ற ஈழத்தமிழர்களிடம் பொது வாக்குப்பதிவு நடத்துவதற்கான முயற்சிகளை,  இந்திய ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். 

இவ்வாறு, வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க,
‘தாயகம்’
சென்னை - 8
10.06.2021


VAIKO’s LETTER TO PRIME MINISTER NARENDRA MODI

10 June 2021

Dear Shri Narendra Modi ji,

Vanakkam.

I draw your kind attention to the security concerns affecting India due to the policy adopted by the Sri Lankan Governtment in connection with China.

Necessity has arised for India to create Tamil Eelam for establishing its dominance in South Asia and Indian Ocean.

Sri Lanka has never been faithful to India. They have exibited their loyalty towards China in many ways. As a neighbouring country, even if India extends support, Sri Lanka has ditched India in crucial times.

India gave its hidden support for Mahinda Rajapaksa to become the president of Sri Lanka. But, he gave permission for Chinese submarine to enter Ambanthottai (Hambantota) port. First time in the history, Chinese submarine has entered the Indian ocean.

His successor, Maithripala Srisena, gave permission for another Chinese submarine.

China gave huge some of loans and has occupied the Ambanthottai port on lease for a period of 99 years. Under the current regime of Rajapaksa brothers, efforts are unleashed to speed up the Chinesization of Indian ocean.

A huge chunk of land in Colombo, the capital of Sri Lanka, is given to China. Estimated 5 lac Chinese labours are working in the infrastructure projects funded by China. There is no doubt that a part of them are Chinese spies. Chinese schools, literature bodies, Karate schools with Chinese trainers has been started for them, in Sri Lanka.

Chinese language is included in sign boards of roads, railway stations and hotels.

The proposed solar energy program at Analai Theevu, Nedun theevu, Nayina Theevu which where part of Tamil Eelam region were also given to the Chinese.

A Children's park has been opened with Chinese investment in Vathalan, a small town. The entrance also has the Chinese dragon symbol.

Sri Lanka has become the base for Chinese troops. In this scenario, only Tamil Eelam, which has closer geographical proximity to India, can become the base for India.

In past, whenever the Sri Lankan rulers sided with China, India took the approach of changing the rulers of Sri Lanka. But, this approach will not be suitable anymore.

I quote the following excerpts from an article published in Indian Express dated 20.01.2015 written by Harsh V Pant, an eminent writer who is working as Professor of International relations and Defence analytics in Kings University, London.

Indian policymakers will be mistaken if they think a change of regime in Colombo, will lead to a dampening of Sino-Sri Lanka ties. China’s role is now firmly embedded in Sri Lanka-economically as well as geopolitically. India will have to up it’s game, if it wants to retain it’s leverage in Colombo. After all the stakes are just too high in the great game that is being played in the Indian Ocean. 

-Harsh V. Pant, Professor in International Relations, Department of Defence Studies, King’s college, London. 

If India fails to safeguard Tamil Eelam and recognise it's sovereignty, it only means that India is prepared to lose its dominance over the Indian ocean and pave way for Chinese presence in the region.

It is a myth that Sri Lanka will lean towards to China, if India stands with Tamil Eelam. They will be reduced in their strengths and will not oppose India.

Even now, Sri Lanka is a vocal supporter of China. The foul cry that Sri Lanka will become more vocal in support of China, put forth by Foreign policy makers is a delay tactics.

Therefore, only the sovereign Tamil Eelam can only be the political, economical and defence base for India.

The 117th Congress-first session of the United States of America, made a resolution on May 18, 2021, recognizing 12 years since the end of the war in Sri Lankaa on May 18, 2009, honouring the lives lost, and expressing support for justice, accountability, reconciliation, reconstruction, reparation, and reform in Sri Lanka to ensure a lasting peaceful polution and a prosperous future for all people of Sri Lankam. 

I shall quote some part of the resolution: 

Whereas the Tamil people of Sri Lanka suffered tens of thousands of deaths, disappearances, abuses, and displacements; 

Whereas following the Easter Sunday terror attacks and the reinstallation of Rajapaksa Government in November 2019, Sri Lanka withdrew srom HRC 30/1;

Whereas the northeaster region of the country, the traditional Tamil homeland, remains heavily militarized with up to one soldier for every two civilians in the most war affected regions;; 

Whereas the Northern Provinicial Council of Sri Lanka adopted in resolutions calling for an international investigation into alleged war crimes committed during the armed conflict and for a U.N. -monitored referendum in the north-eastern region of the island to support the development of a permanent solution;

Whereas the Government fo Sri Lanka has postponed provincial elections for multiple years. denying all Sri Lankans, including the Tamil people in the Northern Province and the Eastern Province, their democratic right to local representation;

Whereas a 2021 report from the United Nations High Commissioner for Human Rights found that the Government of Sri Lanka has over the past year-

(1) elevated individuals implicated in war crimes to senior governmental a positions;
(2) pardoned a convicted war criminal;
(3) reversed key democratic reforms and consolidated power behind the office of the President;
(7) allegedly employed security forces to abduct and torture dissidents;

Whereas no effort has been made to bring to justice those who are alleged to have committed  war crimes and crimes against humanity, no investigations have begun even on emblematic cases, evidence gathering is hindered through arbitrary arrests and threats by the state, and impunity prevails in the country with the outdated and the excessively harsh prevention of Terrorism Act, which does not comply with international standards and has still not been repealed despite repeated promises by the government;

Whereas the United Nations High Commissioner for Human Rights, Michelle Bachelet, stated in January 2021, “Given the demonstrated inability and unwillingness of the Government to advance accountability at the national level, it is time for international action to ensure justice for international crimes. 

Whereas families of individuals who disappeared during and following the armed conflict still have no information regarding the whereabouts of their loved ones, and no lists of persons who surrendered to the government after the end of the armed conflict have been published; 

Resolved, That the House of Representatives-

(1) acknowledged the 12th anniversary of the end of the war in Sri Lanka and offers its deepest condolances to all those affected by the conflict;

(2) honors the memory of those who died and reaffirms its solidarity with the people of all communities in Sri Lanka in their search for reconciliation, reconstruction, reparation, and reform;

(3) commends the United Nations Human Rights Council for prioritizing the collection and preservation of evidence related to human rights violations, a process that must not interfered with by the Government of Sri Lanka;

(4) recognizes the bravery and commitment of advocates for justice across all communities in Sri Lanka, including the Tamil families of the disappeared, whose protest and demands for answers have at times been met with threats, intimidation, and harassment by governmente security forces;

(5) urges the international community to advocate for and protect the political rights and representation of the historically oppressed northeastern region of Sri Lanka and work towards a permanent political solution to address the underlying issues that led to ethnic conflict;

(7) urges the United States to work with the United Nations General Assembly, the United Nations Security Council, and the United Nations Human Rights Council to establish a credible and effective international mechanism for accountability for the grave crimes committed during the war in Sri Lanka. 

Sri Lanka did not honour two accords between the parties involved and Indo-Sri Lanka accord 1987. 

Hence, as Jews created Israel and India created Bangladesh, Indian Union Government under the observation of UNO should take efforts to conduct referendum among the Eelam Tamils living across the world and thus establish a sovereign state of Tamil Eelam. 

Yours sincerely,
Vaiko


Hon’ble Narendra Modi,
Prime Minister
Government of India,
New Delhi

Wednesday, June 9, 2021

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் நியூட்ரினோ திட்டம் கூடாது. வைகோ அறிக்கை!

இந்த உலகில் பழம்பெருமை மிக்க இடங்களுள் ஒன்றாக, ஐ.நா.மன்றம் அறிவித்து இருக்கின்ற, மேற்குத் தொடர்ச்சி மலை, தமிழ்நாட்டின் நீர் ஆதாரமாகத் திகழ்கின்றது. ஆனால், கடந்த ஒரு நூற்றாண்டாக அங்கே கடுமையான ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன. யானைகளின் காட்டு வழித் தடத்தை மறித்துக் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான சுற்றுலா விடுதிகளை, முழுமையாக இடித்துத் தகர்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருக்கின்றது. 

இந்த நிலையில், தேனி மாவட்டம் பொட்டிப்புரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில், இலட்சக்கணக்கான டன் கருங்கற் பாறையை வெட்டி எடுத்து குகை  குடைந்து, அங்கே நியூட்ரினோ துகள்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக ஆராய்ச்சி மையம் அமைக்கும் முயற்சியில், கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகின்றது. இதனால் முல்லைப் பெரியாறு, இடுக்கி ஆகிய அணைகளில் விரிசல் ஏற்படும்.

சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் இந்தத் திட்டத்தை, உள்ளூர் மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் தடை இன்மைச் சான்றை எதிர்த்து, பூவுலகின் நண்பர்கள் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் தொடரப்பட்ட வழக்கில், 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வழங்கப்பட்ட இறுத் தீர்ப்பில், திட்டத்திற்கு ஒன்றிய அரசு வழங்கிய சுற்றுச்சூழல் சான்று செல்லும் என்றும் ஆனால், தேசிய காட்டு உயிர் வாரியத்தின் தடை இன்மைச் சான்று  பெறாமல் (NBWL)  திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது எனக் கூறப்பட்டு இருந்தது.

திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் சான்று செல்லும் என்ற பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மேல்முறையீடு, விசாரணையில் இருக்கின்றது. 

இந்த நிலையில், கடந்த மே 20ஆம் தேதி, இத்திட்டத்திற்கான காட்டு உயிர்கள் பாதுகாப்பு வாரியத்தின் தடை இன்மைச் சான்று கோரி, தமிழ்நாடு அரசின் வனத்துறையிடம் TATA INSTITUTE OF FUNDAMENTAL RESEARCH விண்ணப்பித்துள்ளது. 

இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதைச் சுற்றியுள்ள அணைகளின் பாதுகாப்பு கேள்விக் குறி ஆகும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின்படி, இத்திட்டத்தை, Category A யின் கீழ்தான் பரிசீலிக்க முடியும் என்று அப்போதைய மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA)  கூறிய போதிலும், திட்டத்தை வெறும் கட்டுமானம் கட்டும் பிரிவில் அதாவது Category B என மாற்றி,  தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்று அறிவித்து, ஒன்றிய அரசே நேரடியாக  சுற்றுச்சூழல் சான்று வழங்கி இருந்தது.

தமிழ்நாடு கேரள எல்லையில் உள்ள மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவின் தமிழ்நாடு பகுதியில் உள்ள காட்டுப் பகுதியை மட்டும்  தவிர்த்து விட்டு, பிற பகுதிகள் அனைத்தையும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் ஒன்றிய அரசு அறிவித்தது. இப்படி தமிழ்நாடு அரசின் முடிவையும் மக்களின் எதிர்ப்பையும் மீறி இத்திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்த முனைகின்றது. 

தமிழகத்தின் நீர் ஆதாரமாகத் திகழ்கின்ற மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கேடு விளைவிக்கும் இந்தத் திட்டத்தை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தேன். நியூட்ரினோ வழக்கு எண். WP(MD) 733/2015 வழக்கு  தாக்கல் செய்த நாள் 20.01.2015, மேற்படி வழக்கு இறுதியாக மாண்புமிகு நீதிபதிகள்  தமிழ்வாணன், ரவி  ஆகியோர் முன்பு 26.03.2015அன்று விசாரணைக்கு வந்தது. முடிவில் அரசு தரப்பில் தடையின்மைச் சான்று (Clearance Certificate) வாங்கவில்லை என பதில் மனு  தாக்கல் செய்து இருந்தனர்.  ஆகவே,  நீதிமன்றம் தடை ஆணை  வழங்கி உள்ளது

2018 ஆம் ஆண்டு, மதுரை பழங்காநத்தத்தில் இருந்து கம்பம் வரை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், என் தலைமையில் 13 நாள்கள் நடைபயணம் மேற்கொண்டோம். இந்த நடைபயணத்தை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்தார் என்பதையும், 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் நியூட்ரினோ திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று அறிக்கை வாயிலாக அவர் வலியுறுத்தி இருந்தார் என்பதையும் நினைகூர விரும்புகின்றேன். 

எனவே, காட்டு உயிர்களுக்குக் கேடு இல்லை என, மாநில அரசிடம் சான்று கோரி இருக்கின்ற விண்ணப்பத்தை, தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது; ஏற்கெனவே வழங்கப்பட்ட வனத்துறை சான்றையும் திரும்பப் பெற வேண்டும்; உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கின் விசாரணையில் தமிழ்நாடு  அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்து உரைத்து சுற்றுச்சூழல் சான்றுக்குத் தடை விதிக்கும் தீர்ப்பைப் பெறவும், தமிழ் நாடு அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். 

தமிழ்நாட்டின் உரிமைகளையும், தமிழ் மக்களின் உணர்வுகளையும் மதிக்காமல், ஒன்றிய அரசு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தொடர்ச்சியாக முயற்சி செய்து  வருகின்றது. எனவே, இந்தத் திட்டத்திற்காகத் தமிழக அரசு வழங்கிய நிலத்தையும் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
08.06.2021

Monday, June 7, 2021

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வைகோ எம்பி உடன் சந்திப்பு!

இன்று 07.06.2021 காலை திராவிட இயக்கப் போர்வாள் திரு. வைகோ எம்.பி. அவர்களை தமிழ் நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மாண்புமிகு மெய்யநாதன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

அப்போது வைகோ எம்பி அவர்கள், அமைச்சருக்கு சுற்றுச்சூழல் சம்பந்தமான சட்ட வரைவு புத்தகங்களை பரிசளித்தார்.


அறிவுத்துறையினர் அனைவரையும் விடுதலை செய்க! வைகோ வலியுறுத்தல்!

இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் வினோத் துவா, ‘யூ டியூப்’ தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசும்போது, பா.ஜ.க. அரசின் மீதான தனது கருத்துகளைத் தெரிவித்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடி பயங்கரவாதிகள் மீது நடத்தப்பட்டத் தாக்குதல்கள் மற்றும் மரணங்களைக் கூட வாக்கு வங்கி அரசியலுக்குப் பயன்படுத்துகிறார் என்று விமர்சனம் செய்திருந்தார்.

கடந்த 2020 மார்ச் 30 ஆம் தேதி ஒளிபரப்பான இந்நிகழ்ச்சி குறித்து பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அஜய் ஷியாம் என்பவர் காவல்துறையில் புகார் அளித்தார். இதனடிப்படையில் இமாச்சாலப் பிரதேச காவல்துறை, பத்திரிகையாளர் வினோத் துவா மீது தேசத்துரோக பிரிவு 124ஏ இன் கீழ் வழக்குப் பதிவு செய்தது. மேலும் பிரிவு 268, பிரிவு 501 மற்றும் பிரிவு 505 ஆகியவற்றின் கீழும் வழக்குப் போடப்பட்டது.
தன் மீது பதிவு செய்யப்பட்ட தேசத்துரோக வழக்கை எதிர்த்து வினோத் துவா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கில் கடந்த 2020 ஜூலை 20 ஆம் தேதி உச்சநீதிமன்றம் வினோத் துவா மீது பதியப்பட்ட தேசத்துரோக வழக்கில், எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.
தற்போது இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் நீதியரசர்கள் யூ.யூ.லலித் மற்றும் வினீத் சரண் ஆகியோரைக் கொண்ட அமர்வு, பத்திரிகையாளர் வினோத் துவா மீது தொடுக்கப்பட்ட தேசத்துரோக வழக்கு மற்றும் அவதூறு வழக்கு செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது.
அரசின் செயல்பாடுகள் பற்றிய பத்திரிகையாளரின் விமர்சனங்கள் தேசத்துரோகம் என்று சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறுதியிட்டுக் கூறி இருக்கும் உச்சநீதிமன்றம், 1962 இல் வெளிவந்த கேதார்நாத் சிங் எதிர் பீகார் அரசு வழக்கின் தீர்ப்பையும் மேற்கோள் காட்டி உள்ளது.
உச்சநீதிமன்றத்தின் நீதியரசர்கள் யூ.யூ.லலித், வினீத் சரண் ஆகியோர் அளித்துள்ளத் தீர்ப்பு அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ள அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதாக அமைந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
உத்திரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை குறித்து உண்மை நிலையைக் கண்டறிய 2020 அக்டோபர் 5 ஆம் தேதி, அங்கு செல்ல முயன்ற டெல்லியின் மலையாள செய்தி இணையதள செய்தியாளர் சித்திக் காப்பான், உ.பி. மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவருடன் செய்தி சேகரிக்கச் சென்ற அதிக் உர்ரஹ்மான், மசூத் அகமது, ஆலம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
பத்திரிகையாளர் சித்திக் காப்பான் மீது தேசத்துரோக சட்டப் பிரிவு 124ஏ மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்ம் ‘ஊபா’ ஆகியவற்றின் கீழ் யோகி ஆதித்யநாத் அரசு வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தி வருகிறது.
மராட்டிய மாநிலத்தில், பீமாகோரேகான் வழக்கில் தேசியப் புலனாய்வு முகமை (NIA) மூலம் புனையப்பட்ட பொய்வழக்கில் 2018 இல் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அருண் ஃபெரைரா, வழக்கறிஞர் சுதாபரத்வாஜ், புரட்சிகர எழுத்தாளர் கவிஞர் வரவரராவ் மற்றும் வெர்னான் கன்சால்வேஸ், பத்திரிகையாளர் கவுதம் நவ்லகா மற்றும் கல்வியாளர் ஆனந்த் தெல்டும்டே உள்ளிட்ட 16 பேர் குற்றப் பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படாமல் சிறையில்அடைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாக சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இதில் கவிஞர் வரவரராவ் உடல்நலிவுற்ற நிலையில் தற்காலிக பிணை விடுதலை பெற்றுள்ளார்.
பீமாகோரேகான் வழக்கில் ஜார்கண்ட் மாநிலத்தில் கைது செய்யப்பட்ட பாதிரியார் ஸ்டான்சுவாமி பார்கின்சன் நோய் மற்றும் பல நோய்களால் பாதிக்கப்பட்டவர். நவி மும்பையில் உள்ள தலோஜா சிறையில் தனது 84 வயதில் கொடும் சித்ரவதையை அனுபவித்து வரும் ஸ்டான் சுவாமிக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதவாதப் பாசிசத்துக்கு எதிராகப் போராடும் சமூக செயல்பாட்டாளர்கள், மனித உரிமைப் போராளிகள், சிந்தனையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது தேசத்துரோக சட்டத்தை ஏவி, ஒடுக்க நினைக்கும் பா.ஜ.க. அரசுக்கு உச்சநீதிமன்றம் பத்திரிகையாளர் வினோத் துவா வழக்கின் மூலம் சவுக்கடி தந்திருக்கிறது.
இதனைக் கருத்தில் கொண்டு பொய் வழக்குப் புனையப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அறிவுத் துறையினர் அனைவரையும் ஒன்றிய அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
07.06.2021

Saturday, June 5, 2021

காயிதே மில்லத் நினைவிடத்தில் வைகோ எம்பி மலர் மரியாதை!

இன்று 05.06.2021 கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களின் 126 வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அவரின் நினைவிடத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மக்கள் தலைவர் வைகோ எம்பி அவர்கள் தலைமையில் மலர் போர்வை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

Friday, June 4, 2021

துரைபா அவர்களுக்கு புகழஞ்சலி!

மதிமுக துணை பொதுச் செயலாளர் துரை பாலகிருஷ்ணன் அவர்கள் நினைவஞ்சலி இணைய கூட்டம் சவுதி தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் சிறப்பாக நடைபெற்றது.

வெளிவேலை காரணமாக 3 மணி‌நேரம் நடந்த‌ கூட்டத்தில் ஒன்றரை மணி நேரத்திற்கு கொஞ்சம் கூடுதலாக மட்டுமே கலந்துகொள்ள முடிந்தது.

மாணவரணி செயலாளர் பால சசிகுமார் புகழுரை வழங்கி கொண்டிருந்தார்.

சகோ வல்லம் பசீர் போன்றோர் அடுத்தடுத்து பேசி முடித்து அண்ணன் மணவை தமிழ்மாணிக்கம் அவர்கள் பேசும்போது ஒரு செய்தி சொன்னார்‌‌.

அண்ணன் தமிழ் மாணிக்கம் அவர்களுக்கு தெரிந்த நபர் விபத்தில் சிக்கி மருத்துவத்திற்காக அவரது குடும்பத்தார் அண்ணனிடம் தஞ்சை மருத்துவமனையில் நல்ல மருத்துவம் கொடுப்பார்களாம், ஆனால் பெரிய‌ ஆட்கள் எதாவது சொன்னால் நல்ல சிகிச்சை கொடுப்பார்கள் என்று சொல்ல, அண்ணன் தமிழ் மாணிக்கம் அவர்கள் நமது‌ துணை பொதுச் செயலாளருக்கு உதவி கேட்க, அவரும் டீனிடம்‌ பேசிவிட்டேன்‌ என்று சொல்லி  அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மேலும் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று சிகிச்சை பெறும் நபரை சந்தித்து அண்ணன் தமிழ் மாணிக்கம் அவர்களுக்கு போன் செய்து இவரிடம் பேசுங்க என்று சொன்னதை‌ தமிழ்‌மாணிக்கம்‌ அவர்கள், துரைபா அவர்களிடம் அண்ணே நீஙக் அங்கேயே போய்டீங்க என கேட்க அவர் இது நமது மதிமுக சொந்தம் சொன்னதல்லவா என்று சொன்னதாக சொல்லும்போது நெகிழ்ச்சியாகிவிட்டேன்.

ஆம் மதிமுகவினர்‌ தன்னலம் கருதாமல் மதிமுகவினர் யாராவது அழைத்து அவருக்கு ஒரு‌ பிரச்சினை சொன்னால் உடனே மதிமுககாரர் சொல்லிட்டார் என்று உடனே உதவி புரிகின்றனர்.

ல் கருதாது கழகத்திற்கு உழைத்த‌ சோழ மண்டல தலைவன்‌ துரைபா அவர்கள் புகழ் தமி‌ழ் மண்ணில் நிலைத்திருக்கும்.

ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை புகழஞ்சலி.

மைக்கேல் செல்வ குமார்


Thursday, June 3, 2021

ஊடகங்களின் செய்தியாளர்களை முறைப்படுத்தி, உதவிகள் வழங்கிடுக. வைகோ MP அறிக்கை!

ஊடகங்களின் செய்தியாளர்களை, கொரோனா எதிர்ப்புப் போரின் முன்களப் பணியாளர்களாக அறிவித்து, உடனடி உதவித்தொகையாக ரூ 5000; கொரோனா தாக்கி உயிர் இழந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் உதவித் தொகையை ரூ 5 இலட்சத்தில் இருந்து 10 இலட்சமாக உயர்த்தியும் ஆணை பிறப்பித்த, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு, செய்தியாளர்கள் நெஞ்சார்ந்த நன்றியும், பாராட்டுகளும் தெரிவித்து வரவேற்று இருக்கின்றார்கள். 

ஆனால், தமிழ்நாடு முழுமையும் சேர்த்து, அரசு அடையாள அட்டை பெற்று இருக்கின்ற சுமார் 1500 பேர்கள் மட்டுமே இந்த வளையத்திற்குள் வருகின்றார்கள். முறையாக விண்ணப்பித்த பலருக்கு,  அடையாள அட்டை கிடைக்கவில்லை. எத்தனையோ பேர் தகுதி இருந்தும் விண்ணப்பிக்காமல் இருக்கின்றார்கள். 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகங்களில் பணிபுரிந்து வருகின்ற பல செய்தியாளர்கள், கேமராமேன்கள், படக்கலைஞர்கள், செய்தி வாசிப்பாளர்களுக்கும்கூட, அரசு அடையாள அட்டை கிடைக்கவில்லை. 

எனவே, அரசு ஏற்பு அளித்து இருக்கின்ற செய்தித்தாள்கள், தொலைக்காட்சி நிறுவனங்களின் அடையாள அட்டை பெற்று இருக்கின்ற துணை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், செய்தி வாசிப்பாளர்கள், படக்கலைஞர்கள் அனைவருக்கும், அரசு உதவித் தொகை கிடைத்திட ஆவன செய்திட வேண்டும் என, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
03.06.2021

மதிமுகவின் YES WE CAN குழு சார்பில் கொரொனா நிவாரண உதவி!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் YES WE CAN குழு நண்பர்கள் இணைந்து கொரொனா நிவாரணம் குமரி மாவட்டம், கப்பியறை பேரூர் பகுதியான ஓலவிளை பகுதியில் இன்று 03-06-2021 வழங்கப்பட்டது. 

கொரொனா நிவாரண உதவிகளை, குமரி மாவட்ட இளைஞரணி செயலாளர் பள்ளியாடி குமார் அவர்கள் தலைமையில், கப்பியறை பேரூர் செயலாளர் ஞானதாஸ் முன்னிலையில் பேருரில் பொருளாதாரம் பின்தங்கிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்வில் டைசன் ராஜ், ரஜினி, பியுலின், பிரதீஸ், அன்பழகன், குமரி கழக  தொண்டர்படை நிர்வாகி சோனி, அமீரக துணை செயலாளர் சேவியர் உள்ளிட்ட கழகத்தினர் கலந்துகொண்டார்கள்.

கருணாநிதி படத்திற்கு வைகோ எம்பி மரியாதை!

மறைந்த திரு கருணாநிதி அவர்களின் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரின் திருவுருவ படத்திற்கு திராவிட இயக்கப் போர்வாள் தமிழினக் காவலர் திரு வைகோ எம்பி அவர்கள் அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்ட அவரது படத்திற்கு மலர் மரியாதை செலுத்தினார்.

உடன் கழக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா மற்றும் கழக முன்னணி தலைவர்கள் இருந்தனர்.

கரம்பக்குடி ஒன்றியச் செயலாளர் சேதுமாதவன் மறைவு! வைகோ இரங்கல்!

புதுக்கோட்டை மாவட்டத்தின் கழகத் தூண்களுள் ஒருவரான கரம்பக்குடி ஒன்றியச் செயலாளர் ஆருயிர்ச் சகோதரர் சேதுமாதவன் அவர்கள், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இன்று (03.06.2021) நண்பகலில் உயிர் நீத்தார் என்ற செய்தி என்னை நிலைகுலையச் செய்தது.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் தீவிரமாகப் பணியாற்றிய சேதுமாதவன், நமது இயக்கம் தொடங்கிய நாள் முதல் நமக்கு அரணாகத் திகழ்ந்தார்.
மிக மிக அடக்கமானவர். அதிர்ந்து பேச மாட்டார். கழகப் பணிகளை முழுமையாகச் செய்வார். புதுக்கோட்டை மாவட்டத்திற்குச் செல்லும்போதெல்லாம் சேதுமாதவன் வந்துவிட்டாரா? என்றுதான் கேட்பேன். இனி நான் யாரைக் கேட்பேன்?
பண்பாட்டுப் பெட்டகமாக, கழகத்திற்குப் படைக் கருவியாக இயங்கி வந்த சேதுமாதவன் மறைவு, புதுக்கோட்டை மாவட்டக் கழகத்திற்கு தாங்க முடியாத இழப்பு ஆகும். அவரது சகோதரர் பாஸ்கரிடம் பேசி, மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தேன். அதற்குள் காலம் அவரைப் பறித்துச் சென்று விட்டது.
அந்தக் குடும்பத்தின் கண்ணீரில் நான் பங்கேற்கின்றேன். அவரை இழந்து பரிதவிக்கும் குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
03.06.2021

Wednesday, June 2, 2021

அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்கவும். வைகோ கோரிக்கை!

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பொறியியல் படிப்புகளுக்கான அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகளில் ஏற்பட்ட குளறுபடிகளின் காரணமாக, தேர்வுகள் ரத்துச் செய்யப்பட்டன. 

தற்போது, மறுதேர்வுகள்  நடைபெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த ஆண்டு நவம்பர்/டிசம்பரில்  நடைபெற இருந்த பருவத்தேர்வுகளுக்கு  விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிப்பதற்கு மே 23 ஆம் தேதி முதல் ஜூன் 3 ஆம் தேதி வரைக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

இணையத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், முன்மாதிரி பதிவு பக்கங்களில் (Registration preview page) குறிப்பிடப்பட்டுள்ள தேர்ச்சி பெறாத (Arrear) பாடங்களில் ஏதேனும் மாற்றம் மற்றும் விண்ணப்பக் கட்டணங்கள் செலுத்துவதில் ஏற்படும் சிக்கல்கள் ஆகியவற்றிற்கு தீர்வுக் காண, அண்ணா பல்கலைக்கழகத்  தேர்வாணையத்தை தொடர்புக்கொள்ளும் வகையில் மின்னஞ்சல் முகவரி, தொடர்பு எண் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் அஞ்சல் வழியில் கடிதம் வாயிலாக தொடர்புக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

முன்மாதிரி பதிவு பக்கத்தில் காட்டப்படும் தேர்ச்சி பெறாத பாடங்களில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின், அதனைக் குறிப்புகளுக்கான இடத்தில் (Remarks  column) தெரிவிக்கவும், அதனையே கட்டாயமாக அலைபேசி மற்றும் அஞ்சல் வாயிலாக தெரிவிக்கவும் வழிமுறையாக கூறப்பட்டுள்ளது. 

கொரோனா பொது ஊரடங்கு அமலில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் மாணவர்கள் அஞ்சலகங்களை அணுகுவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. தற்போதைய சூழலில் அது பாதுகாப்பான வழிமுறையும் இல்லை. மேலும், அலைபேசி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகத்  தெரிவிக்கப்படும் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுகள் மற்றும் விளக்கங்களை உடனடியாகப் பெற முடியாததால் மாணவர்கள் பெரும் குழப்பத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். 

ஆகவே, அண்ணா பல்கலைக்கழக பருவத்தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை மேலும் ஒரு வார  காலம் நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசின் உயர்கல்வித் துறையை வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
02.06.2021