கேரள மாநில வெள்ள நிவாரணமாக 10 இலட்சம் ரூபாய் காசோலை - 20 இலட்சம் மதிப்பிலான பொருட்களை முதலமைச்சர் நிர்வாகப் பொறுப்பு தொழில் அமைச்சர் இ.பி.ஜெயராஜன் அவர்களிடம் வைகோ வழங்கினார்
கேரள மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ்சென்னிதலா உடன் இருந்தார்.
கேரள மாநில வெள்ள நிவாரண நிதிக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை தற்போது முதலமைச்சர் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் தொழில் அமைச்சர் இ.பி.ஜெயராஜன் அவர்களிடம் பொதுச்செயலாளர் வைகோ வழங்கினார்.
20 இலட்சம் மதிப்புள்ள 15 டன் அரிசி, வேட்டிகள், துணிகள், மருந்துகள், வீட்டு உபயோகப் பொருட்களை ஐந்து லாரிகள், இரண்டு டிரக்குளில் கொண்டுசென்று திருவனந்தபுரம் ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது கேரள மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான ரமேஷ் சென்னிதலா அவர்கள் உடன் இருந்தார்.
வைகோ அவர்களுடன் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் வெற்றிவேல், நெல்லை புறநகர் மாவட்டச் செயலாளர் தி.மு.இராஜேந்திரன், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் புதுக்கோட்டை செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன்திருமலைக்குமார், சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் அரசு அமல்ராஜ், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் கல்லத்தியான், தூத்துக்குடி மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விநாயகா ரமேஷ், ஆபத்து உதவிகள் அணி இணைச் செயலாளர் கோ.கலையரசன், அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் ராபின்சன் ஜேக்கப், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி, நாகர்கோவில் நகரச் செயலாளர் ஜெரோம் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
என்ற செய்தியை மதிமுக தலைமை கழகம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 05-09-2018 தெரிவித்துள்ளது.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment