மறுமலர்ச்சி திமுகவின் துணை பொதுச்செயலாளர் துரை.பாலகிருஷ்ணன் மற்றும் தஞ்சை மாவட்ட செயலாளர் கோ.உதயகுமார் சில மாதங்களுக்கு முன்பு இயற்கை எய்தினர். அவர்களுக்கு இல்லங்களுக்கு இன்று (30.09.2021) மாலை நேரில் சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி அவர்கள், இருவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி இரண்டு குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். உடன் மதுரை தெற்கு தொகுதி உறுப்பினர் புதூர் மு.பூமிநாதன், தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் தமிழரசன், தஞ்சை நகர கழகச் செயலாளர் துரை.சிங்கம் உள்ளிட்ட கழக தோழர்கள்.
No comments:
Post a Comment