Saturday, October 7, 2017

ஐயநாதன் எழுதிய ஹைட்ரோ கார்பன் அபாயம் வெளியீட்டில் வைகோ சிறப்புரை!

சென்னை கலைமாமணி ஜி.உமாபதி கலையரங்கில், அய்யநாதன் எழுதிய ஹைட்ரோ கார்பன் அபாயம் (இயற்கைக்கும் மனிதகுலத்துக்கும் எதிரான பேரழிவு திட்டம்) நூல் வெளியீட்டு விழா இன்று(08.10.2017) காலை 11.00 மணியளவில் நடந்தது.

இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு சிறப்பாற்றினார்கள். அதில் பழ நெடுமாறன், முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் கோவி. செழியன் உரை நிகழ்த்தும்போது, கொளுத்தும் வெயிலிலும் கதிராமங்கலத்தில் நடந்து வந்து போராட்டத்தை அரசை நோக்கி ஈர்த்தது மதிமுக தலைவர் வைகோ அவர்கள்தான்.

தலைவர் வைகோ அவர்களின் பாதம் பட்டதால்தான் எங்கள் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது. அவர் அன்று மேடையில் மயங்கியதுகூட உடல்நலக் குறைபாடு என்பதைவிட, எங்கள் மண்ணின் பெண்கள் "ஐயா காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்" என்று அபயக் குரல் எழுப்பினார்களே, அந்த வேதனையைக் கண்டுதான் என பேசினார்.

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலச்சந்திரன் பேசும்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் குப்பைக் கூடையில் வீசிவிட்டு, தண்ணீர் தர முடியாது என்று சொல்கிறது ஒரு மாநிலம். யாரும் எதுவும் செய்யவில்லை. செய்ய முடியவில்லை. இவ்வளவுதான் இந்திய இறையாண்மை. தன்னலம் கருதாமல், தமிழர் நலனே முக்கியம் என இயங்கும் தலைவர் வைகோ. தமிழ் படிக்காததால் என் வாழ்நாளின் பெரும் பகுதியை வீணாக்கிவிட்டேன் என்றார் எனது இளைய அதிகாரி என பேசினார்.

ஊடகயியலாளர் ராம்கி ஜென்ராம் பேசும்போது, உண்மையான சமூகப் போராளிகளைப் பொதுமக்கள் கேலிப் பொருளாகச் சித்தரிக்கிறார்கள். அரசுகள் அவர்களை, தேச விரோத வழக்குகள், குண்டர் சட்டம் மூலமும் அரவணைத்துக் கொள்கிறது.

"லெனினை விட என்னை ஈர்த்தவர் மா சே துங்" என்ற வைகோவின் பேச்சு அவரை நோக்கி என்னை ஈர்த்தது. 


இந்த அரங்கமே போராளிகளால் நிரம்பி வழிகிறது. நான் இன்னும் பார்வையாளனாகவே இருக்கிறேன் என்ற தயக்கம் என்னுள் நிலவுகிறது.


அரசியலுக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத நான், குடவாசல் கூட்டத்தில் கொட்டும் மழையில் வைகோ பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.


ஒரு இரவில்‌ இரண்டு பெக் குடியைக்கூடத் தியாகம் செய்ய இயலாதவர்கள், போராட்டத்தையே வாழ்வாக, சுவாசமாகக் கொண்டவர்களைக் கேலி பேசுவதைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் நாம் இருக்கிறோம் என் பேசினார்.


இவர்கள் இருவரும் (வைகோ & பழ.நெடுமாறன்) இருப்பதால்தான், நாம் தைரியமாக இருக்கிறோம் என நூல் ஆசிரியல் திரு. அய்யநாதன் பேசினார்.


பழ. நெடுமாறன் பேசும்போது, நம்மை தேச துரோகி என்று சொன்னால் அந்தத் துரோகத்தைத் தொடர்ந்து செய்வோம். கட்சி‌ எல்லைகளைக் கடந்து நாம் ஒன்றுபட்டு நின்றால், எந்த அடக்குமுறையும் நம்மை எதுவும் செய்ய முடியாது என்றார். 


மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசும்போது, கனடாவிலும், ஆஸ்திரேலியாவிலும் எரிவாயு எடுக்கும் திட்டங்களை மக்கள் போராட்டத்தின் காரணமாக அனுமதிக்கவில்லை.

நாங்கள் ஹைட்ரோ கார்பன் எடுப்பதை யாரும் தடுக்க முடியாது என்று திமிரோடு ஜெம் லேபரட்டரீஸ் நிறுவனம், பசுமைத் தீர்ப்பாயத்தில் அஃபிடவிட் தாக்கல்‌ செய்துள்ளது. 

கதிராமங்கலம், நெடுவாசல் களப் போராளிகளுக்குத் தலை வணங்குகிறேன். 

கெயில் குழாய் பதிக்க முயன்றால் மதிமுக களத்தில் இறங்கிப் போராடும் என பேசினார்.

ஓமன் மறுமலர்ச்சி பேரவை.

No comments:

Post a Comment