Tuesday, October 24, 2017

இசக்கிமுத்துவின் மனைவி மக்களை சொந்த ஊரில் அடக்கம் விடாமல் தடுத்த காவல்துறை!

கந்துவட்டி கொடுமையால் நெல்லையை சேர்ந்த இசக்கி முத்து என்பவர் நேற்று 23-10-2017 நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்தோடு தீக்குளித்தார்.

இசக்கிமுத்து சிகிச்சை எடுத்துவரும் நிலையில், அவரின் இறந்து போன மனைவி, மக்களை சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்கு இசக்கிமுத்துவின் தந்தை, தம்பிகள் ஏற்பாடு செய்யும் வேளையில், காவல்துறை வந்து மிரட்டி பணிய வைத்து, சொந்த ஊரில் அடக்க விடாமல் தடுத்து, அதற்கு பதிலாக இறந்த சடலங்களை நெல்லை மாநகர் மின் மயானத்தில் தகனம் செய்ய தூக்கிச் சென்ற கொடுமை நடந்துள்ளது.

உடனே இதனைக் கண்டித்து பிணவறை முன்பு இசக்கி முத்துவின் தாயார் 20 பெண் களுடன் பெரும் குரல் எடுத்து அழுது கொண்டே இருந்தார்.

இதனால், மதிமுக, CPM, விடுதலைச் சிறுத்தைகள், SDPI உள்ளிட்ட அமைப்பினர் கொந்தளித்து எழுந்து, நெல்லை மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும்,  வன்மையான கண்டனங்களையும் கோசங்களாக எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

வளைகுடா மறுமலர்ச்சி பேரவை ஓமன்

No comments:

Post a Comment