Tuesday, November 30, 2021

சுவாமிநாதன் கருப்ப கவுண்டன் மறைவு! வைகோ MP இரங்கல்!

தென் ஆப்பிரிக்கத் தமிழ்ச் சமூகத்தால், சுவாமி என அன்புடன் அழைக்கப்பெற்ற, அந்நாட்டின் விடுதலைப் போராளிகளுள் ஒருவரான சுவாமிநாதன் கருப்ப கவுண்டன் அவர்கள் 94 ஆம் அகவையில், இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன்.

1944 முதல் தன்னைப் பொதுவாழ்வுக்கு ஒப்படைத்துக் கொண்டார்.

1950 ஆம் ஆண்டு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரசில் இணைந்து, நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார்.

1955 ஆம் ஆண்டு, அந்நாட்டின் விடுதலைப் பட்டயத்திற்கு ஏற்பு அளிக்கப்பட்ட கிளிப்டவுன் சொவேட்டோ மக்கள் காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்றவர்களுள் எஞ்சி இருக்கின்ற ஒருசிலருள் சுவாமிநாதனும் ஒருவர்.

அரசியல் தலைவர், சமூகப் போராளி, தொழிற்சங்க செயற்பாட்டாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்ட சுவாமிநாதன் அவர்கள், நிறவெறிக்கு எதிராக நடைபெற்ற அனைத்துப் போராட்டக் களங்களிலும் பங்கேற்று இருக்கின்றார். நாடு விடுதலை பெற்றபிறகும், மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதற்காக உழைத்தார். பல்வேறு சமூக அமைப்புகளில் உயர் பொறுப்புகளை வகித்து இருக்கின்றார்.

காந்திய வழி அறப்போராளிகளுள் ஒருவராகத் திகழ்ந்த மாமனிதர் சுவாமிநாதன் கருப்ப கவுண்டன் அவர்களின் மறைவுக்கு, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
30.11.2021

Monday, November 29, 2021

வைகோ MP உடன், விவசாயிகள் சங்கத்தினர் சந்திப்பு!

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், இன்று (29.11.2021) புது தில்லியில், ம.தி.மு.க.  பொதுச்செயலாளர் வைகோ அவர்களைச் சந்தித்தனர்.

இந்திய விடுதலைக்குப் பிறகு, வரலாறு காணாத வகையில் மாபெரும் அறப்போராட்டத்தை நடத்தி  வெற்றி பெற்று, விவசாயிகள் வரலாறு படைத்து விட்டனர். இந்த வெற்றி, நாடு முழுமையும்,  மக்கள் கோரிக்கைகளுக்காகப் போராடுவோருக்கு பெரும் ஊக்கம் அளித்து இருக்கின்றது என, அவர்களிடம் வைகோ கூறினார்.

உயர்மின் கோபுரங்கள், கெயில் எரிகாற்றுக் குழாய், பாரத் பெட்ரோலியத்தின் எண்ணெய்க் குழாய் பிரச்சினைகள் மற்றும் ஒன்றிய அரசின் வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள வேளாண் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்காக, சமாதானத் திட்டத்தை ஒன்றிய அரசு அறிவிக்க வலியுறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் விண்ணப்பத்தை, விவசாயிகள் சங்கத்தினர் வைகோவிடம் அளித்தனர்.

இத்தகைய சமாதான் திட்டங்களை, ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் பலமுறை அறிவித்துச் செயல்படுத்தி இருக்கின்றார்கள். குறிப்பாக, வருமான வரி, பத்திரப் பதிவுத்துறை உள்ளிட்ட அரசுக்கு வருவாய் தரும் அனைத்துத் துறைகளிலும், இத்தகைய சமாதான் திட்டங்களை அறிவித்து, வட்டி, கூடுதல் வட்டி தள்ளுபடி செய்வது வழக்கம். விவசாயிகள் முழுமையான கடன் தள்ளுபடி கோரவில்லை. ஒன்றிய அரசு வங்கிகளில் பெற்று இருக்கின்ற கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு, வட்டி, கூடுதல் வட்டி, அசலில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு குறைப்பது உள்ளிட்ட  சில சலுகைகளைக் கோருகின்றார்கள்.  

வங்கிக் கடன்களுக்காக, விவசாயிகள் தங்கள் சொத்துகளை அடமானமாகக் கொடுத்து இருக்கின்றார்கள். அதன் மீது, வங்கி மேலாளர்களே நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சொத்துகளைக் கையகப்படுத்துவது, ஏலம் விடுவது போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் வங்கி மேலாளர்களே மேற்கொள்கின்றார்கள்.  கடன் வசூல் தீர்ப்பு ஆயத்தில் வழக்குத் தொடுத்து, விவசாயிகளை அலைக்கழித்து, தாங்கொணாத் துன்பத்திற்கு உள்ளாக்கி வருகின்றனர்.

எனவே. இந்தியா முழுமையும் கடன் தொல்லையால் ஆண்டுக்கு 10000 விவசாயிகள் தற்கொலை செய்து மடிகின்றார்கள். அதைத் தடுப்பதற்காக, ஒன்றிய அரசு, விவசாயிகள் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு ஏதுவாக சமாதான் திட்டம் ஒன்றை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வழங்கினர்.

இந்தக் கோரிக்கைகள் குறித்து, அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்கின்றேன் என வைகோ கூறினார்.

இந்தச் சந்திப்பில், சங்க நிறுவனர், வழக்கு உரைஞர் ஈசன் முருகசாமி, மாநிலத் தலைவர் சண்முகசுந்தரம், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காளிமுத்து, விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமரேசன், பஞ்சாப் கோல்டன் சிங் (ஆசாத் கிசான் சங்கர்ஷ் கமிட்டி), மதுரை சொக்கலிங்கம், குங்குமம்பாளையம் முத்துசாமி, லூதியானா மோகன், விருதுநகர் இராமசாமி  பங்கேற்றனர்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க,
‘தாயகம்’
சென்னை - 8
29.11.2021

தனி நபர் மசோதாக்களை புதன்கிழமை விவாதத்திற்கு விட வேண்டும். வைகோ MP கோரிக்கை!

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர், நாளை தொடங்குகின்றது. அதனை ஒட்டி, குடியரசுத் துணைத்தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்கள் அவைத் தலைவருமான வெங்கையா நாயுடு அவர்கள், இன்று (28.11.2021) மாலை 5 மணி அளவில், மாநிலங்கள் அவை அனைத்துக் கட்சித் தலைவர்களுக்குத் தமது இல்லத்தில் விருந்து அளித்தார். மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., அவர்கள் பங்கேற்றார்.

அப்போது அவர் முன்வைத்த கோரிக்கை:-

கடந்த 74 ஆண்டுகளாக, தனியொரு உறுப்பினர் தாக்கல் செய்கின்ற சட்ட முன்வரைவுகள் (Private Member Bill) மற்றும் தீர்மானங்கள் மீதான கருத்துப் பரிமாற்றங்கள், மாநிலங்கள் அவையில், வெள்ளிக்கிழமை பிற்பகலில்தான் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள், சனி, ஞாயிறு விடுமுறை நாள்களில், தங்கள் தொகுதிகளுக்குச் சென்று, நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றார்கள். அதற்காக, அவர்கள் வெள்ளிக்கிழமை மாலையில் வான் ஊர்தியைப் பிடித்து ஊருக்குப் போகின்றார்கள். எனவே, வெள்ளிக்கிழமை காலையில் அவைக்கு வந்து விட்டு, பிற்பகலில் சென்று விடுகின்றார்கள். அந்த நேரத்தில், இத்தகைய சட்டமுன்வரைவுகளின் மீதான விவாதம் பயன் அற்றதாக இருக்கின்றது. அனைத்து உறுப்பினர்களும் பங்கு ஏற்கின்ற வாய்ப்புகள் இல்லை.

எனவே, அந்த நடைமுறையை மாற்ற வேண்டும். இனி, புதன்கிழமை பிற்பகலில், தனி உறுப்பினர் சட்ட முன்வரைவுகள், தீர்மானங்களை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க,
சென்னை - 8
‘தாயகம்’
28.11.2021

இந்தி திணிப்பு. வைகோ‌MP எச்சரிக்கை!

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர், இன்று 28.11.2021 ஞாயிற்றுக்கிழமை காலை, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார். அமைச்சர்கள் பிரகாலாத் ஜோஷி, பியுஷ் கோயல் முன்னிலை வகித்தனர். அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டார். அவர் தமது உரையில் குறிப்பிட்டதாவது:-

இந்தியா விடுதலை பெற்ற பிறகு, இதுவரை காணாத அளவில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் உயிர் இழந்த 750 விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்துகின்றேன். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் தங்கள் உடைமைகளை அவர்கள் இழந்து இருக்கின்றார்கள். காஷ்மீரில் இருநது கன்னியாகுமரி வரை மக்கள், போராட்டம் நடத்திய விவசாயிகளை ஆதரித்தனர்.

எனவே, இந்த மூன்று வேளாண் பகைச் சட்டங்களையும் இந்திய அரசு திரும்பப் பெறும் என்று, தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அண்மையில் உறுதி கூறினார். அதன்படி, நடைபெற இருக்கின்ற இந்தக் குளிர்காலக் கூட்டத் தொடரில் முதுல் நாளே வர வேண்டிய மசோதா, பத்தாவது இடத்தில் இடம் பெற்று இருக்கின்றது,

எம்.எஸ். சுவாமிநாதன் குழு கொடுத்த அறிக்கையின்படி, விளைபொருள்களுக்கு விலை உரிய விலையை, அரசு உறுதி செய்ய வேண்டும்.  

இந்தியா ஒரு கூட்டு ஆட்சி நாடு. ஆனால், கூட்டு ஆட்சித் தத்துவத்தையே தகர்த்துத் தரைமட்டம் ஆக்க, நரேந்திர மோடி அரசு திட்டமிட்டு வேலை செய்கின்றது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்று, ஒரு சர்வாதிகார நாடு ஆக்கத் துணிந்து விட்டார்கள்.

தமிழ்நாட்டில் இந்தி எதிர்ர்பபுப் போராட்டம் எரிமலையாக வெடித்தது. எனவே, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், இணையற்ற ஜனநாயகவாதி, பண்டித ஜவகர்லால் நேரு, மக்கள் விரும்புகின்றவரை,  இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக நீடிக்கும் என உறுதிமொழி கொடுத்தார்.

ஆனால், சில நாள்களுக்கு முன்னர்,  உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவுக்கு ஒரே மொழி இந்திதான்; உள்துறை அமைச்சகத்தின் கோப்புகள் முழுமையும் இப்போது இந்தியில்தான் எழுதுகின்றோம் என்று, அதிகாரத் திமிரோடு கூறி இருக்கின்றார்.

அப்படித் திணிக்க முயன்றால், இந்தியா பல நாடுகளாகச் சிதறி விடும் என எச்சரிக்கின்றேன். இந்த அக்கினிப் பரீட்சையில், கூட்டு ஆட்சித் தத்துவத்தையே ஒழிக்க முனைகின்ற இந்த அரசு, காணாமல் போய்விடும்.

இவ்வாறு வைகோ அவர்கள் பேசினார்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க,
‘தாயகம்’
சென்னை - 8
28.11.2021

Monday, November 22, 2021

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதனுக்கு வீர வணக்கம். வைகோ MP அறிக்கை!

திருச்சியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன், திருடர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட செய்தி, அதிர்ச்சியும்,வேதனையும் அளிக்கின்றது. 

நேர்மையான அதிகாரி எனப் பெயர் பெற்றவர். இரவுக் காவல் பணியில் இருந்தபோது, ஆடு திருடிச் சென்றவர்களைப் பின்தொடர்ந்து, 15 கிலோமீட்டர் தொலைவு விரட்டிச் சென்றார் என்பது, அவரது துணிச்சலையும், கடமை உணர்வையும் காட்டுகின்றது. 

அவரது உடல், உரிய சிறப்புகளுடன்  அடக்கம் செய்யப்பட்டு இருக்கின்றது. அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் உதவித்தொகையைத் தமிழ்நாடு அரசு அறிவித்து இருப்பது ஆ.றுதல் அளிக்கின்றது. குற்றத் தொடர்பு உடைய 4 பேர்களைக் காவல்துறையினர் பிடித்து இருக்கின்றார்கள். வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும். 

மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் பூமிநாதனுக்கு வீர வணக்கம்.

அவரை இழந்து வேதனையில் உழலும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
22.11.2021

Saturday, November 20, 2021

பெருமழையால், சென்னையில் பாதிக்கப்பட்ட 2000 பேருக்கு உணவு வழங்கிய துரை வைகோ!

தொடர்ந்து பெய்து வரும் பெருமழையால், சென்னையில் பாதிப்புக்கு உள்ளான அண்ணா நகர் gகுதி 100ஆவது வட்டத்தில், திரிவேரி மற்றும்  - எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த 2000 பேருக்கு அண்ணா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன் முன்னிலையில், மறுமலர்ச்சி தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ அவர்கள் இன்று 19.11.2021 வெள்ளிக் கிழமை மதியம் உணவு வழங்கினார்.

தென்சென்னை மேற்கு மாவட்டக் கழச் செயலாளர் வழக்கறிஞர் சைதை ப.சுப்பிரமணி, வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சு.ஜீவன், தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.கழககுமார், அண்ணா நகர் பகுதிச் செயலாளர் இராம.அழகேசன், மகளிர் அணி மாநிலத் துணைச் செயலாளர் மல்லிகா தயாளன், திமுக பகுதிச் செயலாளர் ச.பரமசிவம், வட்டக் கழகச் செயலாளர் என்.டி.திருலோகசந்தர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

விவசாயிகளின் வெற்றி: மத்திய அரசு மண்டியிட்டது! வைகோ MP அறிக்கை!

மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது இலட்சக்கணக்கான விவசாயிகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

மக்கள் சக்தியே ஜனநாயகத்தில் மகேசன் சக்தியாகும் என்பதை விவசாயிகள் நிருபித்திருக்கிறார்கள்.

ஓராண்டு காலமாக இலட்சக்கணக்கான விவசாயிகள் போராடினார்களே, நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்தார்களே, கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகளை இழந்தார்களே, பிரதமர் மோடி அவர்கள் போன உயிர்களை திரும்பக் கொண்டுவந்து சேர்ப்பாரா? உயிரிழந்த ஒவ்வொருவர் குடும்பத்திற்கும் மத்திய அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும்.

பயிர்களைக் கணக்கிட்டு, கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு விவசாயிகளுக்கு தரவேண்டும். வரப்போகின்ற தேர்தலில் தோற்றுப் போவோம் என்கிற பயத்தில் பிரதமர் இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

சர்வாதிகாரத்தின் முதுகெலும்பு விவசாயிகளால் நொறுக்கப்பட்டுள்ளது. போராடிய விவசாயிகளுக்கு இந்த நாடே தலைவணங்குகிறது.

விவசாயிகள் ஒற்றுமை ஓங்கட்டும்! அவர்களின் உரிமைக் குரல் ஓங்கட்டும்! அவர்களுக்குத் தலைவணங்கி நன்றியும், பாராட்டும் தெரிவிக்கிறேன்.

இனிமேல் இம்மாதிரி மக்கள் விரோத சட்டங்களை அதிகாரம் இருக்கின்ற வரையில் மத்திய அரசு கொண்டுவராது என்ற நிலையை விவசாயிகள் ஏற்படுத்திவிட்டார்கள்.

போராடிய விவசாயிகளுக்கு வாழ்த்தையும், மத்திய அரசுக்குக் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
19.11.2021

திராவிட லெனின் டி.எம்.நாயருக்கு சிலை அமைத்திடுக! வைகோ MP வேண்டுகோள்!

தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் எனும் நீதிக்கட்சி 1916 நவம்பர் 20 ஆம் நாள் உருவாகி, 2021 நவம்பர் 20 ஆம் நாள் 106 ஆவது ஆண்டு தொடங்குகிறது.

அன்றைய சென்னை மாகாணத்தில் பார்ப்பனரல்லாதார் வகுப்புரிமையை நிலைநாட்ட காலத்தின் தேவையாக மலர்ந்த நீதிக்கட்சியை வழிநடத்திய முப்பெரும்தலைவர்களான டாக்டர் சி.நடேசனார், சர் பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் போன்றோரும், 1938 இல் நீதிக்கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற தந்தை பெரியார், பொதுச்செயலாளர் பொறுப்பை வகித்த பேரறிஞர் அண்ணா ஆகியோரின் அருந்தொண்டுதான் திராவிட இயக்கம் நூற்றாண்டு கடந்தும் அசைக்க முடியாத அடித்தளத்துடன் நிமிர்ந்து நிற்பதற்குக் காரணம் ஆகும்.

மாண்டேகு செம்ஸ்போர்டு அரசியல் சீர்திருத்தத்தின்படி 1920 இல் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது, அத்தேர்தலில் நீதிக்கட்சி மாபெரும் வெற்றி பெற்றது. 1921 இல் கடலூர் சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவை அமைந்தது. பின்னர் அதே ஆண்டு ஜூலையில் பனகல் அரசர் இராமராய நிங்கார் முதல் அமைச்சர் (First Minister) பொறுப்பை ஏற்றார்.

பனகல் அரசர் ஆட்சிக் காலத்தில்தான் சட்டமன்றத்தில் முதன் முதலில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமையை நடைமுறைப்படுத்த 1921 ஆகஸ்ட் 16 இல் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது. நீதிக்கட்சி அரசு பிறப்பித்த வகுப்புரிமை ஆணைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆதிக்கவாதிகள் வழக்குத் தொடுத்து, அதை முடக்கினர்.

அதன்பின்னர் நீதிக்கட்சியின் ஆதரவுடன் சுப்பராயன் முதல் அமைச்சர் பொறுப்பேற்றபோது, அதில் இரண்டாவது அமைச்சராக பொறுப்பேற்றிருந்த எஸ்.முத்தையா முதலியார் தனது ஆவணப் பதிவுத் துறையில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணையை 04.11.1928 ஆம் நாளிட்ட அரசாணை எண்.1071 மூலம் சட்டமாக்கினார். இதன் மூலம்தான் அரசு வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோரும், பட்டியல் இனத்தோரும் இடஒதுக்கீடு பெற்று சமூகநீதி நிலைநாட்டப்பட்டது என்பது வரலாறு.

கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு இன்று இந்தியாவுக்கே சமூகநீதிக் கோட்பாட்டிற்கு வெளிச்சம் பாய்ச்சியது திராவிட இயக்கம்தான் என்பதும் மறுக்க முடியாத வரலாறு ஆகும்.

சமூகநீதி, ஒடுக்கப்பட்ட, பட்டியல் இன மக்கள் முன்னேற திட்டங்கள்; பெண்களுக்கு வாக்குரிமை; தேவதாசி முறை ஒழிப்பு; இந்து அறநிலையத்துறை உருவாக்கம்; பல்கலைக் கழகங்கள் தொடக்கம்; அனைவருக்கும் சமத்துவமான கல்வி; மாணவர் விடுதிகள்; கல்வி உதவித்தொகை; அரசுப் பணியாளர் தேர்வு வாரியம்; சிறுபான்மை மக்களுக்கும் இடஒதுக்கீடு; மருத்துவப் படிப்பிற்கு சமஸ்கிருதம் கட்டாயம் என்பது நீக்கம் இவ்வாறு எண்ணற்ற சாதனைகளைப் படைத்தது நீதிக்கட்சியின் அரசு ஆகும்.

இன்று இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலமாக அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு சிறந்தோங்கி இருப்பதற்கு நீதிக்கட்சியின் அரசு நிறைவேற்றிய திட்டங்களும், நிகழ்த்திய சாதனைகளும்தான் காரணம். அதனால்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள், 1967 இல் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைகிற பொழுது, எங்கள் அரசு நீதிக்கட்சி ஆட்சியின் தொடர்ச்சிதான் என்று பிரகடனம் செய்தார்.

நீதிக்கட்சியின் தொடர்ச்சியாக அமைந்திருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் நீதிக்கட்சி அரசு அமைந்த நூற்றாண்டில் ஒரு அன்பான வேண்டுகோளை முன்வைக்கின்றேன்.

வகுப்புவாரி உரிமைக்காக வாதாட இங்கிலாந்து இலண்டன் வரை இரண்டுமுறை சென்று, மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தில், சட்டமன்றத்தில் வகுப்புரிமையை உறதி செய்யப் போராடியவர் டாக்டர் டி.எம்.நாயர். நீரழிவு நோய் வாட்டியபோதும் கவலைப்படாமல் வகுப்புரிமைக்காக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஆதரவு திரட்டிய டி.எம்.நாயர், 17.7.1919 அன்று லண்டனிலேயே உயிர் துறந்தார்.

திராவிட இயக்கத்தின் ஆணிவேரான நீதிக்கட்சியின் மாபெரும் தலைவர்கள் டாக்டர் சி.நடேசனார், சர் பிட்டி தியாகராயர் இருவருக்கும் தலைநகர் சென்னையில் சிலைகள் நிறுவப்பட்டு பெருமைப்படுத்தி இருக்கின்றோம்.

நீதிக்கட்சியின் மற்றொரு தலைவரான டாக்டர் டி.எம்.நாயர் என்ற தாராவாட் மாதவன் நாயர் அவர்களுக்கு சென்னையில் இதுவரையில் சிலை நிறுவப்படவில்லை. நீதிக்கட்சியின் நூறாவது ஆண்டு விழாவில் மறுமலர்ச்சி திமுக சார்பில், சென்னையில் டி.எம்.நாயர் சிலை அமைந்திட இடம் ஒதுக்கித் தருமாறு அப்போதைய முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தோம். ஆனால் பலனில்லை.

தற்போது அமைந்திருக்கின்ற திராவிட இயக்க ஆட்சியில், திராவிட லெனின் என்று தந்தை பெரியார் அவர்களால் பாராட்டப்பெற்ற டாக்டர் டி.எம்.நாயர் நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில்சென்னையில் அவருக்கு முழு உருவச் சிலையை நிறுவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
19.11.2021

ஓரே நாடு! ஓரே மக்கள் பிரதிநிதிகள் சபை! பிரதமரின் கருத்து; நாட்டின் பன்முகத்தன்மையை அழிக்கும் முயற்சி! வைகோ MP அறிக்கை!

இமாச்சலப்பிரதேச மாநில சிம்லாவில் நேற்று (17.11.2021)  சட்டப்பேரவைத் தலைவர்களின் 82 ஆவது மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொலி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

பிரதமர் தனது உரையில்,சட்டமன்றங்களின் மாண்புகளை காப்பாற்றும் கடமை மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்கிறது என்பதையும்,

நமது நாடு முற்றிலும் பன்முகத்தன்மை கொண்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதே உரையில்,“ வளங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரே நாடு; ஒரே மக்கள் பிரதிநிதிகள் சபை” என்ற கருத்தை தாம் முன்வைப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

பிரதமர் மோடி அவர்களின் இந்த கருத்து, ஆர்.எ°. எ°; பாரதிய ஜனதா கட்சியின் ஓரே நாடு! ஒரே மதம்! ஒரே மொழி! ஒரே பண்பாடு! எனும் கோட்பாட்டின் நீட்சியாகவே இருக்கிறது.

ஏனெனில் இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாக பிரிப்பதற்கு, 1953 ஆம் ஆண்டு டிசம்பரில் ,பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பசல் அலி தலைமையில் எச்.என்.குன்°சுரு, கே.எம்..பணிக்கர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட மாநில மறுசீரமைப்பு ஆணையத்தை அமைத்தார்.

இந்தியா மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப் பட வேண்டும் என்று பசல் அலி ஆணையம் 1955,செப்டம்பரில் தனது பரிந்துரை அறிக்கையை அளித்தது.

அப்போது ஆர்.எ°. எ°. தலைவர் எம்.எ°.கோல்வால்கர், இந்தியா எனபது ஒரே நாடு; இதனை நிர்வாக வசதிக்காக நாட்டை நூறு  பகுதிகளாக பிரிக்க வேண்டும்.

டெல்லியில் மையப்படுத்த ஓரே அரசுதான் இருக்க வேண்டும் என்று மொழிவாரி மாநிலப் பிரிவினையை கடுமையாக எதிர்த்தார்.

ஆர்.எ°.எ° கோட்பாடுகளை நிறைவேற்றி வரும் பா.ஜ.க அரசு,“ஒரே நாடு?; ஒரே நாடாளுமன்றம்“ என்ற திட்டத்தை செயற்படுத்த முனைந்து இருக்கிறதோ என்ற ஐயப்பாட்டை பிரதமரின் உரை ஏற்படுத்துகிறது.

அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவின் முக்கியமான காலகட்டம் என்று பிரதமர் குறிப்பிட்டு இருப்பது உண்மைதான்.

நாட்டின் பன்முகத்தன்மை தகர்க்கப்பட்டு பல்வேறு தேசிய இனங்களின் தனித்துவ அடையாளங்கள் சிதைக்கப்பட்டால் 2047 ,ஆக°ட்-15 இல் இந்தியா நூறாவது ஆண்டு விடுதலை நாளைக் கொண்டாடும் போது இந்தியா உடைந்து சிதறி விடும்..அதற்கு வழிவகுத்து விடாமல் இந்தியாவின் கூட்டாட்சி முறையை வலுப்படுத்தவும் மாநிலங்களின் உரிமைகளை பேணவும் பா.ஜ.க அரசு புரிதலுடன் செயல்பட வேண்டும்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
18.11.2021

தெற்குத் தொடரி பொது மேலாளர் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடல் கூட்டம்மதுரை 18.11.2021. வைகோ, எம்.பி., முன்வைத்த கோரிக்கைகள்!

வணக்கம். 
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், தொடரித்துறை மனிதநேயத்துடன் சிறப்பான வகையில் மக்களுக்குத் தொண்டு ஆற்றியதைப் பாராட்டுகின்றேன். எல்லையில் நாட்டைக் காக்கும் போர்வீரர்களைப் போல, தொடரித்துறை ஊழியர்கள் பொறுப்பு உணர்வுடன் கடமை ஆற்றினார்கள். அதன் விளைவாக, ஏறத்தாழ பத்து விழுக்காட்டுக்கும் கூடுதலான தொழிலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்; இந்தியா முழுமையும் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர். 
அவர்களுக்கு, என்னுடைய புகழ் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
1. அவர்களுடைய குடும்பங்களுக்கு, போதிய உதவித்தொகை வழங்கப்படுதல் வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு, தொடரித்துறை பணி வாய்ப்பு வழங்கும் என நம்புகின்றேன்.
2. சென்னை, மதுரை, திருச்சி கோட்டங்களுக்கான பணியாளர்களை, சென்னையில் உள்ள ரயில்வே பணியாளர்கள் தேர்வு ஆணையம் மேற்கொண்டு வந்தது. சேலம் கோட்டம் அமைப்பதற்கு, கேரள அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். எனவே, அவர்களைக் குளிர்விப்பதற்காக, தெற்குத்தொடரி இரண்டு அறிவிப்புகளைச் செய்தது. 
அ) பொள்ளாச்சி-கிணத்துக்கடவு வழித்தடம், முன்பு மதுரைக் கோட்டம் வசம் இருந்தது. அதை, பாலக்காடு கோட்டத்திற்கு மாற்றிவிட்டனர்.
ஆ) மதுரைக் கோட்டத்திற்கான பணியாளர்களைத் தேர்வு செய்யும் அதிகாரத்தை, திருவனந்தபுரம் ரயில்வே பணியாளர்கள் தேர்வு ஆணையத்திற்கு மாற்றி விட்டனர்.
இந்த அறிவிப்புகள் வெளியானபோதே, நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்தோம். எனவே, மேற்கண்ட அறிவிப்புகளைத் திரும்பப் பெற வேண்டும். 

3. தொடரித்துறையில் பல்லாயிரக்கணக்கான பணி இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை உடனே நிரப்ப வேண்டும். எந்தப் பகுதியில் காலி இடங்கள் ஏற்படுகின்றனவோ, அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கே முன்னுரிமை தர வேண்டும்.

4. திருநெல்வேலியைத் தலைமை இடமாகக் கொண்டு, புதிய ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும்.

5. கொரோனாவுக்கு முன்பு ஓடிக்கொண்டு இருந்த பெரும்பாலான தொடரிகள், படிப்படியாக மீண்டும் ஓடத் தொடங்கி உள்ளன. ஆனால், பாசஞ்சர் தொடரிகள் இன்னமும் ஓடவில்லை. ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் போக்குவரத்து ஆதாரமான பாசஞ்சர் தொடரிகளை மீண்டும் இயக்க வேண்டும். கொரோனா காலத்தில் ஓடிய சிறப்பு விரைவுத் தொடரிகளின் நிறுத்தங்களைக் குறைத்தீர்கள். அவ்வாறு எந்த நிலையமும் விடுபடக் கூடாது. இனி, அனைத்துத் தொடரி நிலையங்களிலும் தொடரிகள் நின்று செல்ல வேண்டும். 

6. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்பு வழங்கப்பட்ட கட்டணச் சலுகைகளை, மீண்டும் தர வேண்டும்.

7. புதிய தொடரிகளை இயக்கப் போவதாக அறிவிப்புகளை மட்டும் வெளியிடுகின்றீர்கள். ஆனால்,  பல ஆண்டுகள் ஆனாலும், அந்த அறிவிப்புகளைச் செயல்படுத்துவது இல்லை. குறிப்பாக, மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு பகல் நேரத் தொடரி இயக்கப்போவதாக, 2013 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியானது. ஆனால், இன்றுவரையிலும் ஓடவில்லை. அதேபோல, செங்கோட்டையில் இருந்து கோவைக்கு தொடரி ஓடும் என்று அறிவிப்பு வெளியாகி பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகின்றது. அதுவும் ஓடவில்லை. இராமேஸ்வரம், கோவைக்கு இடையே தொடரி ஓடும் என்ற அறிவிப்பும் நிறைவேறவில்லை. 

8. இந்தியா விடுதலை பெற்ற பிறகு அமைத்த மிகப்பெரிய தொடரித்தடம், கொங்கண் ரயில்வே ஆகும். அந்த வழித்தடத்தில் தொடரிகள் ஓடத்தொடங்கி, 25 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இருந்து இதுவரையிலும், அந்த வழித்தடத்தில் தொடரிகள் ஓடவில்லை. குறிப்பாக, தென்மாவட்டங்களைச் சேர்ந்த இலட்சக்கணக்கான மக்கள், மும்பையில் வசிக்கின்றார்கள். அவர்கள், இன்றளவிலும், மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு சுற்று வழியில் பயணித்து வருகின்றார்கள். எனவே, நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு, கொங்கண் வழித்தடத்தில் ஒரு பயணிகள் தொடரியை, விரைவில் அறிமுகப்படுத்த வேண்டும். 

9. நாகர்கோவிலில் இருந்து ஹைதராபாத்துக்கு ஒரு தொடரி கூட இல்லை. ஆனால், சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு மூன்று தொடரிகள் ஓடுகின்றன. எனவே, அவற்றுள் ஒரு தொடரியை, நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும். 

10. ஆள் இல்லாத ரயில்வே கேட்டுகளை அகற்றுவதற்காக, தரையடி சுரங்கப் பாலங்களை அமைத்து வருகின்றீர்கள். ஒருநாள் மழை பெய்தாலும், தண்ணீர் நிரம்பி விடுகின்றது. எனவே, அந்த வழியை நாள்தோறும் பயன்படுத்துகின்ற பல கிராமங்களைச் சேர்ந்த மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்படுகின்றது. எனவே, அந்த சுரங்கப் பாலங்களில், தண்ணீரை அகற்றுவதற்கான மின் மோட்டார்களைப் பொருத்த வேண்டும். 

11. தூத்துக்குடியில் இருந்து நாகலாபுரம், விளாத்திகுளம், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருப்பரங்குன்றம் வழியாக மதுரைக்கு புதிய தொடரித் தடம் அமைப்பதாக அறிவித்து, 7 கிலோமீட்டர் தொலைவுக்கு பாதை அமைத்து இருக்கின்றீர்கள். அதன்பிறகு, அந்தப் பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது. எனவே, அந்தப் பணிகளைத்தொடங்கி, நிறைவு செய்து தர வேண்டும். 

12. மதுரை போடி வழித்தடப் பணிகளை நிறைவு செய்ய வேண்டும். தேனியில் இருந்து சென்னைக்கு ஒரு புதிய தொடரியை அறிமுகப்படுத்த வேண்டும். 

13. கூடல்நகர் தொடரி நிலையத்தை, மதுரையின் இரண்டாவது முனையமாக (Madurai Second terminal) ஆக்க வேண்டும். சிலைமான் தொடரி நிலையத்தை மேம்படுத்த வேண்டும். 

14. பழநியில் இருந்து தாராபுரம், ஈரோடு, சத்தியமங்கலம் வழியாக, மைசூருக்குப் புதிய தொடரித்தடம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை ஆகும். அடுத்த ஆண்டு ரயில்வே வரவு செலவுத் திட்டத்தில் அந்தத் திட்டத்தை அறிவித்து, விரைவில் நிறைவேற்றித் தரவேண்டும். 

15. மீட்டர்கேஜ் தடங்களை அகன்ற வழித்தடமாக மாற்றும்போது, 15 கிலோமீட்டருக்கு ஒரு தொடரி நிலையம் என இருந்தவை, ஒழிக்கப்பட்டு விட்டன. அந்த வகையில், சங்கரன்கோவில் இராஜபாளையத்திற்கு இடையே இருந்த கரிவலம்வந்த நல்லூர், சோழபுரம் தொடரி நிலையங்களை மூடி விட்டனர். அந்தப் பகுதிகள் இப்போது நல்ல வளர்ச்சி பெற்று உள்ளன. பல்லாயிரக்கணக்கானவர்கள், அரசுப் பணிகளில் உள்ளனர்; இந்தியப் படையிலும் சேர்ந்து உள்ளனர். அவர்களுக்கு தொடரிப்பயணம் எட்டாக்கனியாக உள்ளது. அவர்கள் சங்கரன்கோவிலுக்கும், இராசபாளையத்திற்கும் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. 

முன்பு மூடப்பட்ட நரிக்குடி தொடரி நிலையத்தை, தேவை கருதி, மீண்டும் திறந்து இருப்பதால், கரிவலம்வந்தநல்லூர், சோழபுரம் தொடரி நிலையங்களையும் மீண்டும் திறக்க வேண்டும்.

16. நான் சிவகாசி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தபொழுது, விருதுநகர் கொல்லம் வழித்தடத்தை, அகல ரயில் பாதையாக மாற்றித் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தேன். அப்போதைய ரயில்வே அமைச்சர் நிதீஷ்குமார் அவர்கள் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அறிவித்தார். அவரை விருதுநகருக்கு அழைத்து வந்தேன்; அவர் அடிக்கல் நாட்டினார். தற்போது, அனைத்து வழித்தடங்களையும் மின்மயம் ஆக்குவதற்கு, தொடரித்துறை முடிவு எடுத்துச் செயல்பட்டு வருகின்றது. அந்த வகையில், விருதுநகர் கொல்லம் வழித்தடத்தை மின்மயம் ஆக்குகின்ற பணிகளை முதலில் மேற்கொள்ள வேண்டும்.

17. சிவகாசி ஒரு தொழில் நகரம்; குட்டி ஜப்பான் என அழைக்கப்படுகின்றது. விருதுநகர் செங்கோட்டை வழித்தடத்தில் ஓடுகின்ற அனைத்துத் தொடரிகளும், சிவகாசி தொடரி நிலையத்தில் நின்று செல்வது வழக்கம். அந்த வழித்தடத்தில் உள்ள பெரிய ஊரும் அதுதான். நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள், தொடரிப் பயணங்களை மேற்கொள்கின்றார்கள். 
கொல்லத்தில் இருந்து சென்னை வரை செல்லும் விரைவுத் தொடரி எண் 06102, சிவகாசியில் நிறுத்தி, பயணிகளை ஏற்றிச் செல்கின்றது. அதே தொடரி, சென்னையில் இருந்து கொல்லம் செல்லும்பொழுது (வண்டி எண்: 06101) சிவகாசியில் நிற்பது இல்லை. அந்த வண்டி, சிவகாசி நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்.

பொதுவாக பயணிகளை ஏற்றிச் செல்லும் தொடரிகள், அனைத்து நிலையங்களிலும் நின்று செல்ல வேண்டும். அதற்காகத்தான், அவை ஓடுகின்றன. 
இது தொடர்பாக, பொதுமக்களும், வணிகர் சங்கங்களும் தொடர்ந்து விடுத்து வருகின்ற கோரிக்கைகள், இன்னமும் ஏற்கப்படவில்லை என்பது வேதனை அளிக்கின்றது. எனவே, அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.

18. பாலக்காடு, திருநெல்வேலி, (தொடரி எண்: 6791-6792) பாலருவி விரைவுத் தொடரியை,  செங்கோட்டை, பாவூர்சத்திரம், கீழக்கடையம் நிலையங்களில் நிறுத்த வேண்டும்.

19. சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கடையம், பாவூர்சத்திரம் சுற்றுவட்டாரங்களில் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றார்கள். ஆனால், இன்று வரையிலும், இந்தப் பகுதி மக்களுக்கு, தலைநகர் சென்னைக்குச் செல்வதற்கான நேரடித் தொடரிகள் எதுவும் இல்லை. எனவே, அவர்கள் பயணப் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு, திருநெல்வேலி அல்லது தென்காசிக்கு வந்துதான் தொடரிகளில் பயணிக்க வேண்டிய நிலைமை உள்ளது. இரண்டு ஊர்களுமே, 30 முதல் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. எனவே, இந்தப் பகுதி மக்களுக்குப் பயன் தருகின்ற வகையில், திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு, தென்காசி வழியாக ஒரு தொடரியை அறிமுகம் செய்ய வேண்டும். 

20. கொரோனா முடக்கத்தின் காரணமாக, தொடரித்துறையின் வளர்ச்சி மட்டும் அல்ல, பராமரிப்புப் பணிகளிலும் தேக்கம் ஏற்பட்டு இருக்கின்றது.

இது தொடர்பாக, இந்திய ரயில்வே ஒப்பந்தக்காரர்கள் (IR Infrastructures Providers Association Southern Railway (Tamilnadu) சங்கம் விடுத்து இருக்கின்ற விரிவான கோரிக்கை விண்ணப்பத்தை, தெற்குத் தொடரியின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன். அவர்கள், இலட்சக்கணக்கான ரூபாய்களை வங்கிக் கடனாகப் பெற்றும், வெளியில் இருந்து கடன் வாங்கியும் செலவு செய்து, பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். அவர்களை நம்பி, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் இருக்கின்றனர். பள்ளிக்குச் செல்லும் அவர்களது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது அவர்களுடைய கடமை மட்டும் அல்ல; தெற்குத் தொடரிக்கும் அந்தக் கடமையும் பொறுப்பும் உண்டு. 

நடைமுறையில் உள்ள வழக்கத்தை மாற்றி, புதிய விதிகளை அறிமுகப்படுத்தும்போது, அதனால், சிறு, குறு ஒப்பந்தக்காரர்கள், அவர்களைச் சார்ந்து இருக்கின்ற தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக சில பிரச்சினைகளைத் தெரிவிக்க விழைகின்றேன்.

தெற்குத் தொடரியில், 10 கோடி அல்லது 15 கோடிக்கு மேல் டெண்டர்கள் கோருவது இல்லை. ஆனால், தற்போது 50 கோடி 60 கோடி என மிகப்bரிய தொகைக்கான டெண்டர் கோரி, விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. சென்னை டிவிசனில் ஒரு பணியை 74 கோடிக்கும் மற்றொரு பணிக்கு 54 கோடிக்கும் டெண்டர் அழைப்பு விடுத்து உள்ளனர்.

அந்தப் பிரிவின் கீழ் வேலை செய்ய, தமிழ்நாட்டு ஒப்பந்தக்காரர்கள் யாரும் இல்லை. எனவே, அந்த ஒப்பந்தங்களை வட இந்திய நிறுவனங்கள்தான் பெறுகின்றன. 

புதிய தடங்களை அமைக்கின்ற கட்டுமானப் பணிகளில் (Construction Wing) , இதுவரை 25 கோடி ரூபாய் மதிப்பு வரையிலான   பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தப் புள்ளி (Tender Notice) அறிவிப்புகள்தான்  வெளியிடப்பட்டன. இப்போது, அங்கேயும் 50 கோடிக்கு மேல் கொண்டு போக முயற்சிகள் நடக்கின்றன.

இது, தமிழ்நாட்டு நிறுவனங்களுக்கான வாய்ப்புகளை மறுப்பதாகவே இருக்கின்றது. எனவே, பணிகளைப் பிரித்து, ஆகக்கூடுதலாக 20 அல்லது 25 கோடி ரூபாய் அளவில் மட்டுமே டெண்டர்கள் கோருவதற்கான வரையறை வகுக்க வேண்டும்.

ரயில்வே கட்டுமானப் பணிகளுக்கு DSR 2018 ரயில்வே தடங்கள் மற்றும் பாலங்கள் பராமரிப்பிற்கு ருளுளுடீசு 2019 வழிகாட்டுதல்களை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும். இது தொடர்பாக, ரயில்வே வாரியம், ஏற்கனவே அறிவுறுத்தி இருக்கின்றது. கடிதம் எண்: 2019/CE-I/USSOR/W&M/1 dated  26.11.2019

தொடரித்துறையால் ஏற்பு அளிக்கப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் (Approved List of Contractors) பதிவு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும்.

GENERAL MANAGER  / SRLY AND 
HON’BLE MEMBERS OF  PARLIAMENT MEETING.
MADURAI      18-11-2021

VAIKO, M.P., REQUESTS NEW PROJECTS AND TRAIN SERVICES  

Vanakkam!

I would like to congratulate the Railway administration and staff who delivered yeoman services to the public with humanity during Covid-19 pandemic period. Railway staffs delivered their duties like warriors and soldiers saving our nation in the border. 

More than 10% of the employees affected by Covid- 19 and more than four thousand employees all over India, lost their lives. 

I salute the martyrs.

Enough relief shall be given to their families and I hope their  wards shall be given suitable appointment in railway.

2. The Railway Recruitment Board-RRB, Chennai recruits for the vacancies from Chennai, Tiruchirappalli and Madurai Divisions of Southern Railway. The political leaders of Kerala opposed the formation of  Salem division. In order to pacify them, Southern Railway administration made two announcements.

i) Pollachi- Palakkadu section which was under the administrative control of Madurai Division was handed over to Palakkadu Division.

ii) Recruitment of vacancies from Madurai Division was shifted to Railway Recruitment Board, Tthiruvannathapuram.

When the announcement was made, we strongly opposed and now I demand to withdraw the above two orders.

3. Lot of vacancies are existing in Railways. While filling up of vacancies, the people of respective area should be given priority.

4. A new Division shall be formed through bifurcation of Madurai and Thiruvananthapuram Divisions with Head quarters at Tirunelveli.

5. The trains which were running prior to Covid, has now been introduced in phased manner. Whereas, the Passenger train services are not yet introduced which is the lifeline for the poor people and downtrodden. I would request to resume the service and stoppage in all stations. 

6. Concessions availed by Senior Citizens and physically handicapped people should be restored. 

7. Railway administration made announcement to start a new day express train between Madurai and Bangalore in the year 2013 and to start new trains between Shencottai– Coimbatore and Rameshwaram-Coimbatore. 

But all the above announcements are yet to be implemented.

8. Konkan Railway line is one of the major project initiated and implemented by Railways after Independence.  Trains are running on the new route for the past 25 yrs;  but, still the people of Tamil Nadu are not getting the usage of Konkan Railway. A new train shall be introduced from Nagercoil to Mumbai via Konkan Railway, which is the shortest route to reach Mumbai.

9. At present, there is no direct train to Hyderabad from southern districts of Tamil Nadu. Now three pairs of Trains are running between Hyderabad and Chennai. Out of this three trains, one train shall be extended up to Nagercoil.

10. The Railways is constructing subways to eliminate unmanned railway gates. However, even with light rain, the subways are flooded. Therefore, electric motors must be fitted to remove stagnant water in the subways.

11. A new line between Madurai and Thoothukudi via Nagalapuram, Vilathikulam, Aruppukottai/ Kariyapatti, Thirupparankundram  was approved by the railway Ministry and very meagre amount was allotted for this project. Only 7 kms of track work is completed. I demand the Administration to complete the approved project within a time limit and ensure sufficient funds to be allotted in the next budget.

12. Madurai–Theni section   conversion works should be completed at the earliest and a new direct train from Theni  to Chennai shall be introduced.

13. Koodal Nagar station should be made as Madurai Second Terminal and Silaimaan Station should be improved. 

14. There is a long pending demand to connect a direct rail link between Palani and Chamraj Nagar in Karnataka via Dharapuram, Erode and Sathiyamangalam. This will reduce half of the journey time to reach Mysore. This project shall be included in the coming budget 2022-2023 with sufficient allocation of funds.

15. There was a station for every 15 Kms in Metre Gauge which was abolished during BG conversion. Cholapuram and Karivalam Vandanallur between Rajapalayam and Sankaran Kovil were closed. 

Now this region has developed a lot and thousands of people from this area are working in Government services and huge people are working in Army and Airforce. To catch train, they have to go  either to Rajapalayam or Sankarankovil. 

Nalli station was closed during Gauge conversion and now it is opened. Similarly, Cholapuram and Karivalamvandanallur stations should be reopened for the public.

16. When I was a Member of Parliament for Sivakasi constituency, I demanded that the Virudhunagar-Kollam railway line be widened. The then Railway Minister Nitish Kumar accepted the request and announced. I brought him to Virudhunagar and he laid the foundation for that project. Now the administration has made a policy to convert all the sections in to electrified section. Now, I demand this Virudunagar – Kollam section shall be converted in to electrified section on top priority.

17. Sivakasi, an important industrial city, called as little Japan. This is the major station in between Virudunagar and Shencottai. Usually, all the trains passing through Sivakasi has stoppage at Sivakasi. Now train No 6102 Exp while going towards Chennai from Kollam has stoppage at Sivakasi, whereas in return direction from Chennai to Kollam, this train doesn’t has stoppage at Sivakasi. 

The travelling public and also the chamber of commerce repeatedly demanded the administration to provide stoppage at Sivakasi for 6101exp and which was not yet accepted by the administration. I  expect en early announcement from the administration to provide stoppage at Sivakasi for this particular train.

18.  Train No 6791/6792 Tirunelveli- Palakkadu Palaruvi Exp shall be given stoppage at Shencottai, Keelakadaiyam and Pavoorchathiram. 

198. More than  a million of people are residing in and around Cheranmahadevi, Kallidai Kurichi, Ambasamudhram, Kadayam and Pavoorchathiram. The travelling public of this area has to travel  with baggages, either to Tirunelveli or Tenkasi to catch train to reach state capital Chennai. I demand to introduce a daily Express train from Tirunelveli to Chennai via Tenkasi in order to cater the demands of this area public.

20. Due to pandemic, the development as well as maintenance of Railway infrastructure has come to a standstill. In this regard the demands raised by the IR Infrastructures Providers Association, Southern Railway, Tamilnadu to the notice of Southern Railway Administration. This contractors obtained huge amount of loan from Banks as well as outsiders to carry out the work. Lot of workers are getting job opportunities and their families are surviving by these contract works. The responsibility of ensuring the future to the school going wards of this workers are not only lies with the workers and the contractors, but the Railway Administration also has the responsibility.

Whenever the existing policies and norms are changed, the small and medium level contractors are getting affected and subsequently the workers are also affected.

Normally, in Divisional level work, the total cost of the work shall not exceed Rs 20 crores. But, now the tenders are floated with huge amount like 50-60 Crores. Recently in Chennai Division two tenders were floated for Rs 54 Crores and Rs 74 Crores.

There is no eligible Contractors available in Tamil Nadu to participate in this tender which involves huge amount. So the Contractors from north India are getting benefitted and the local Contractors are loosing their opportunities.

In Construction Wing, up to now they used to give tender notice for any work up to Rs 25 Crores. It is understood that there is a move to enhance this amount from Rs 25 Crores to 50 Crores. This will affect the chances of contractors belongs to Tamilnadu.

I demand, hereafter the work shall be divided and tender shall be floated not more than Rs 25 Crores in order give opportunity to the local contractors.

The guidelines prescribed in DSR 2018 for doing any construction work and guidelines prescribed in USSOR 2019 for maintenance of P.Way and Bridges shall be implemented immediately. In this regard railway Board also issued a circular No 2019/CE-I/USSOR/W&M/1 dated 26.11.2019.

In Highways and PWD, they used to have the list of approved contractors. But in Railways there is no such procedure. I demand,  railways also explore some procedure and publish the list of approved contractors.

மதிமுக தலைமைக் கழக அறிவிப்பு!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கழகத்தினரிடம் விருப்ப மனுக்களைப்
பெறுவதற்கு தலைமைக் கழகப் பிரதிநிதிகள் கீழ்காணும் முறைப்படி நவம்பர் 29க்குள்
சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர்.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளில் போட்டியிட விரும்புவோர் தங்கள்
விருப்ப மனுக்களை தலைமைக் கழகப் பிரதிநிதிகளிடம் அளிக்குமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறது.

வேட்புமனு கட்டணமாக மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பொறுப்புக்கு ரூ 1000/-ம், நகராட்சி
மன்ற உறுப்பினர் பொறுப்புக்கு ரூ 500/-ம், பேரூராட்சி மன்ற உறுப்பினர் பொறுப்புக்கு ரூ 250/-
ம் செலுத்த வேண்டும்.

ஏற்கனவே வாழ்நாள் உறுப்பினராகவும், சங்கொலி சந்தாதாரராகவும் இல்லாதவர்கள் விருப்பு
மனுவுடன் ‘வாழ்நாள் உறுப்பினர்’ கட்டணம் ரூ 500 மற்றும் ‘சங்கொலி’ ஏட்டிற்கு ஆண்டு சந்தா
ரூ 550 செலுத்த வேண்டும்.

விருப்பமனு பெறும் தேதியும், இடமும் உரிய மாவட்டச் செயலாளர்கள் தெரிவிப்பார்கள். அதன்
விவரம் வருமாறு: -

*கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா*
வடசென்னை கிழக்கு
வடசென்னை மேற்கு
தென்சென்னை கிழக்கு
தென்சென்னை மேற்கு
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு வடக்கு
செங்கல்பட்டு கிழக்கு
திருவள்ளூர்
அரசியல் ஆய்வு மையச் செயலாளர் மு.செந்திலதிபன்
வேலூர்
திருப்பத்தூர்
இராணிப்பேட்டை
திருவண்ணாமலை வடக்கு
திருவண்ணாமலை தெற்கு

கழகத் துணைப் பொதுச்செயலாளர் செஞ்சி ஏ.கே.மணி
விழுப்புரம் வடக்கு
விழுப்புரம் தெற்கு (கள்ளக்குறிச்சி)
கடலூர் கிழக்கு
கடலூர் மேற்கு
கடலூர் தெற்கு

சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு.சின்னப்பா
அரியலூர்-பெரம்பலூர்
தஞ்சை வடக்கு
தஞ்சை தெற்கு
திருச்சி மாநகர்
திருச்சி புறநகர் வடக்கு
திருச்சி புறநகர் தெற்கு
புதுக்கோட்டை
நாகப்பட்டினம்
திருவாரூர்
கரூர்
மயிலாடுதுறை

சட்டமன்ற உறுப்பினர் புதூர் மு.பூமிநாதன்
மதுரை மாநகர்
மதுரை புறநகர் வடக்கு
மதுரை புறநகர் தெற்கு
சிவகங்கை
இராமநாதபுரம்
தேனி
திண்டுக்கல்

கழக அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன்
ஈரோடு மாநகர்
ஈரோடு புறநகர் கிழக்கு
ஈரோடு புறநகர் மேற்கு
திருப்பூர் மாநகர்
திருப்பூர் புறநகர்

கழகத் தேர்தல் பணிச் செயலாளர் வழக்கறிஞர் ஆவடி இரா.அந்திரிதாஸ்
கோவை மாநகர்
கோவை புறநகர் வடக்கு
கோவை புறநகர் தெற்கு
நீலகிரி

சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் தி.சதன் திருமலைக்குமார்
விருதுநகர் கிழக்கு
விருதுநகர் மேற்கு
நெல்லை மத்திய மாவட்டம்
நெல்லை புறநகர்
தென்காசி
கன்னியாகுமரி
தூத்துக்குடி வடக்கு
தூத்துக்குடி தெற்கு

கழகத் தீர்மானக்குழுச் செயலாளர் கவிஞர் மா.மணிவேந்தன்
சேலம் மத்திய மாவட்டம்
சேலம் கிழக்கு
சேலம் மேற்கு
தருமபுரி
கிருஷ்ணகிரி
நாமக்கல் கிழக்கு
நாமக்கல் மேற்கு

 வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
18.11.2021

தலைமைக் கழக செயலாளர் பணிகள். வைகோ MP அறிவிப்பு!

1. மறுமலர்ச்சி திமுக சட்ட திட்ட விதி எண்: 23 இன் படி கழகப் பொதுச்செயலாளர் அளிக்கும் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்.

2. கழக சட்ட திட்ட விதி எண்: 26 இன் படி, தலைமைக்கழகத்தின் அன்றாட அலுவல்களை நிறைவேற்றவும்,கழகத்தின் எல்லா அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளவும் தலைமை நிலையம் இயங்கி வருகின்றது.
கழகப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இயங்கும் தலைமை நிலையப் பணிகளை, தலைமைக் கழக செயலாளர் ஒருங்கிணைப்பார்.

3. கழகப்பொதுச்செயலாளரின் சுற்றுப்பயணங்கள், சந்திப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் கடமையையும் தலைமைக்கழகச் செயலாளர் மேற்கொள்வார்.

4. கழகத்தின் நடவடிக்கைகள், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல்;
அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள் உள்ளிட்ட மற்ற பல்வேறு அமைப்புகளுடன் கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் தொடர்புகளில் பொதுச்செயலாளர் இடும் பணிகளை நிறைவேற்றுதல் தலைமைக் கழகச் செயலாளரின் பணி ஆகும்.

5. மதிமுக சார்பில் அமைக்கப்பட உள்ள தகவல் தொழில்நுட்ப அணியின் (MDMK IT- WING) பொறுப்பாளர் பொறுப்பையும், கூடுதலாக தலைமைக் கழகச் செயலாளரே  கவனிப்பார்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
17.11.2021

Sunday, November 14, 2021

பள்ளி மாணவி தற்கொலை! வைகோ MP வேதனை!

பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாக, கோவையில் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி, அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கின்றது. அவர் தம் கைப்பட எழுதி இருந்தபடி, தற்கொலைக்குக் காரணமான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்தப் பிரச்சினை, பள்ளி முதல்வரின் கவனத்திற்கு வந்தபோது, அவர் முறையான நடவடிக்கை எடுக்காததன் விளைவாகவே, இந்தத் தற்கொலை நிகழ்ந்து இருக்கின்றது. அதற்காக, அவரும் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். 

தற்போது இந்தியாவிலேயே ஆகக் கூடுதலாக, தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் பதிவு ஆகி இருக்கின்றன. அந்த அளவிற்கு அந்தச் சட்டம் குறித்த விழிப்பு உணர்வு ஏற்பட்டு இருக்கின்றது. என்றாலும், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக, மாணவ மாணவியரிடையே போதிய விழிப்பு உணர்வு இல்லை. 

பாலியல் கொடுமைகள் நிகழாத வண்ணம்,  அவர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும்  ஆசிரியர்களுக்கு உண்டு. பெற்றோரும் உரிய கவனம் செலுத்த வேண்டும். தங்கள் பிள்ளைகள் மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டு இருந்தால், அதைக் கண்காணித்து, தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டும்; ஆறுதலாக இருக்க வேண்டும்.

மாணவி எழுதி வைத்த குறிப்பில் மேலும் இருவர் பெயரைக் குறிப்பிட்டு உள்ளார். அதுகுறித்தும், காவல்துறையினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
14.11.2021

இந்தித் திணிப்பு: அமித் ஷா பேச்சு. வைகோ MP கண்டனம்!

உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் நடைபெற்ற ஆட்சி மொழி மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி; என் தாய்மொழியை விட நான் இந்தியை அதிகமாக நேசிக்கிறேன் என்று பேசி இருக்கின்றார். அத்துடன் நில்லாமல், ‘உள்துறை அமைச்சகத்தின் ஒரு கோப்பு கூட இப்போது ஆங்கிலத்தில் எழுதப்படுவது இல்லை’ என்று அவர் கூறி இருப்பது, அரசு அமைப்புச் சட்டத்திற்கு எதிரான அடக்குமுறைப் போக்கு ஆகும். எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளையும், ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டும் முயற்சியே ஆகும்.

அது மட்டும் அல்ல; இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, உள்துறை அமைச்சகம், இந்தியில் மட்டுமே கடிதங்களை அனுப்பி வருகின்றது. மின்அஞ்சலும் அப்படித்தான் வருகின்றது. எதிர்ப்புத் தெரிவித்தால், அதன்பிறகுதான் ஆங்கிலத்தில் அனுப்புகின்றார்கள்.கடந்த அண்ணா தி.மு.க. ஆட்சிக்காலத்தில், தமிழ்நாட்டு அரசுக்கு அனுப்பிய கடிதங்களையும் இந்தியிலேயே அனுப்பியதாகச் செய்திகள் வந்தன. அடிமை ஆட்சி எதிர்ப்புக் குரல் எழுப்பவில்லை. அவ்வாறு, உள்துறை அமைச்சகத்தில் இருந்து இந்தியில் கடிதங்கள் வந்தால், தமிழக அரசு திருப்பி அனுப்ப வேண்டும்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தே, திராவிட இயக்கம் இந்தியைக் கடுமையாக  எதிர்த்து வருகின்றது. தமிழ்நாட்டில், தமிழும், ஆங்கிலமும்தான் ஆட்சி மொழிகள் என, பேரறிஞர் அண்ணா அவர்கள் சட்டம் இயற்றிப் பாதுகாப்பு அளித்தார்கள். அதனால்தான் இன்றைக்குத் தமிழ்நாட்டு இளைஞர்கள், ஆங்கிலம் நன்கு படித்து, உலகம் முழுமையும் வேலை வாய்ப்புகளைப் பெற்று முன்னேறி வருகின்றார்கள். ஆங்கிலம் படிக்காத வட இந்தியர்கள், தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வருகின்றார்கள். 

இந்தியாவின் பிற மாநிலங்களில், இந்திக்கு எதிரான விழிப்பு உணர்வு இல்லை. இந்தி, தங்கள் மாநில மொழியை அழித்து விடும் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. அண்மைக்காலமாகத்தான், கேரளம், கர்நாடகம், மராட்டியம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இந்தி ஆதிக்கத்தைப் புரிந்துகொண்டு வருகின்றார்கள். எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வருகின்றன. 

பஞ்சாப் மாநிலத்தில், பஞ்சாபி மொழிக்கு முன்னுரிமை அளித்து, இரண்டு நாள்களுக்கு முன்பு, பஞ்சாப் சட்டமன்றம் தீர்மானம் இயற்றி இருக்கின்றது. பெயர்ப்பலகைகளில், பஞ்சாபி மொழியில்தான்  முதலில் எழுத வேண்டும் என அறிவித்து இருக்கின்றார்கள். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசின் அலுவல் அகங்களின் பெயர்ப்பலகைகளில் தமிழில்தான் முதலில் எழுத வேண்டும் என்பதை வலியுறுத்தி, திராவிட இயக்கங்கள் நடத்திய போராட்டங்களின் விளைவாக, 1970 களில் இருந்தே, தமிழில்தான் முதலில் எழுதப்படுகின்றது. ஆனால், இந்தியாவின் பிற மாநிலங்களில், இந்தி மொழியிலேயே முதலில் எழுதுகின்றார்கள்.

உலக நாடுகளின் பொதுப்பேரவை மற்றும் மனித உரிமைகள் மன்றத்தில், ஆறு மொழிகளில் அலுவல் நடைபெறுகின்றது. அதுபோல, இந்தியாவின் அரசு அமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்று உள்ள அனைத்து மொழிகளையும், இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும். முதல் கட்டமாக, தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்.  

இன்று எத்தனையோ மொழிபெயர்ப்புக் கருவிகள் வந்து விட்டன. நமது கையில் உள்ள அலைபேசி கூட ஒரு மொழிபெயர்ப்புக் கருவிதான். வேறு எந்த மொழியில் எழுதி இருந்தாலும், அதை ஆங்கிலத்திற்கு, தமிழுக்கு ஒரே நொடியில் மொழிபெயர்த்துத் தருகின்றது. எனவே, இந்தியைப் படிக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை. இனி ஒருவர், தன் தாய்மொழியைத் தவிர, ஆங்கிலம் கூடப் படிக்க வேண்டிய தேவை இல்லை என்ற நிi ஏற்பட்டு விட்டது. 

வட இந்தியர்களுக்கு ஆங்கிலம் அயல்நாட்டு மொழி என்றால், நமக்கு இந்தியும் அயல்நாட்டு மொழிதான். எனவேதான், தந்தை பெரியார் அவர்கள், ‘வெள்ளையன் வெளியேறுகின்றான்; ஆனால், தமிழன் இந்திக்காரனுக்கு அடிமை ஆகின்றான்’ என்று சொன்னார். 

அந்த நிலைமைதான் இன்றைக்கும் நீடிக்கின்றது. எனவே, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்தத் காலத்திலும்,  இந்திக்குத் தமிழ்நாட்டில் இடம் கொடுத்துவிடக் கூடாது. 

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க 
‘தாயகம்’
சென்னை - 8
14.11.2021

Saturday, November 13, 2021

விவசாயிகள் பயிர் காப்பீட்டுக்கு கால நீட்டிப்பு வழங்குக. வைகோ MP அறிக்கை!

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பிரதம மந்திரியின் திருத்தி அமைக்கப்பட்ட பயிர் காப்பீடு (ராபி 2021 - 2022) (PMFBY) தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில் நெல், மக்காச்சோளம், உளுந்து, பாசி, பருத்தி பயிர்களுக்கு காப்பீட்டு செய்ய விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், மானாவாரி பயிர்களான உளுந்து மற்றும் பாசி பயிர்களுக்கு பல மாவட்டங்களில் வரும் 15.11.2021 திங்கட்கிழமையோடு காப்பீடு முடிவடைகிறது. பல மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் கடந்த 24 மணி நேரமாக பயிர் காப்பீடு இணையதளத்தின் ஆதார் இணைப்பு சேவை தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, நேற்று இரவு முதல் சீரடைந்து உள்ளது.

மேற்குறிப்பிட்ட நியாயமான காரணங்களை கருத்தில் கொண்டு மானாவாரி உளுந்து மற்றும் பாசி பயிர்களுக்கு காப்பீட்டு செய்யும் காலவரையறையை பத்து நாட்கள் கூடுதலாக நீட்டித்து, 25.11.2021 வரை காப்பீடு செய்து கொள்ள அனுமதி அளித்து உத்தரவிடுமாறு ஒன்றிய அரசையும், தமிழக அரசையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றேன்.

‘தாயகம்’                                                       வைகோ
சென்னை - 8                                      
பொதுச் செயலாளர்,
13.11.2021                                              மறுமலர்ச்சி தி.மு.க

Friday, November 12, 2021

முல்லைப் பெரியாறு அணை குறித்து கருத்துக் கூற பாரதிய ஜனதாவுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. வைகோ அறிக்கை!

முல்லைப் பெரியாறு அணை இருக்கின்ற பகுதி தமிழ்நாட்டைச் சேர்ந்தது ஆகும். சென்னை ராஜதானியாக இருந்தபோது, திருவிதாங்கூர் சமஸ்தானமும், தமிழ்நாடு அரசும் 999 ஆண்டுகளுக்குச் செய்துகொண்ட ஒப்பந்தமாகும். முல்லைப் பெரியாறு அணை தமிழ்நாட்டுக்கே உரியதாகும். 8000 ஏக்கருக்கு குத்தகைப் பணம் தமிழ்நாடு அரசு திருவிதாங்கூருக்குத் தர வேண்டும். அதை அதிகப்படுத்தி வேண்டுமானால் அவர்கள் கேட்கலாம்.

முல்லைப் பெரியாறு அணை ஆயிரம் ஆண்டுகளுக்கு வலுவாக இருக்கக்கூடிய அணையாகும். 1978 இல் கேரள அரசு 555 அடி உயரத்திற்கு இடுக்கி அணையைக் கட்டியது. அதற்குத் தண்ணீர் தேவை. முல்லைப் பெரியாறு அணையை உடைத்துவிட்டால், அவர்களுக்கு அந்தத் தண்ணீர் கிடைக்கும். இந்தச் சதித் திட்டத்தோடுதான் மலையாள மனோரமா பத்திரிகை, முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக வஞ்சகமாக ஒரு பொய்ச் செய்தியைப் பரப்பியது. ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 152 அடி உயரத்திற்கு நிரப்பிக் கொள்ளலாம் என்பதைக் குறைத்து, தற்காலிகமாக 136 அடியாகக் குறைத்துக்கொள்வது என்றும், பேபி அணையை வலுப்படுத்திய பிறகு மீண்டும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்று கேரள அரசும், தமிழக அரசும் ஒரு புதிய ஒப்பந்தத்தைச் செய்துகொண்டது.

முல்லைப் பெரியாறு அணையை இங்கிலாந்து நாட்டில் பிறந்த பென்னி குயிக் பொறியாளர்  தியாகம் செய்து கட்டினார். ஒரு கட்டத்தில் அரசாங்கம் பணம் தராத போது, இங்கிலாந்தில் உள்ள அவரது சொத்துக்களை விற்று, அந்தப் பணத்தைக் கொண்டுவந்து அணையைக் கட்டினார்.

அணை பலவீனமாக இருக்கிறது என்று கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. தமிழ்நாடு அரசு அதை எதிர்த்து வழக்குத் தொடுத்தது. வழக்கின் முடிவில் மூன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு, முல்லைப் பெரியாறு அணையில் முதலில் 142 அடி வரை தண்ணீரை உயர்த்திக்கொள்ளலாம் என்றும், அதன்பின்னர் 145 அடி உயர்த்தலாம் என்றும், பின்னர் பேபி அணையை வலுப்படுத்திய பிறகு 152 அடி வரை உயர்த்திக்கொள்ளலாம் என்றும் தீர்ப்புக் கொடுத்தது.

இதனை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. அணையின் வலிமையைச் சோதிப்பதற்காக உயர்நீதிமன்றம் ஏற்கனவே ஒரு நிபுணர் குழு அமைத்திருந்தது. அந்தக் குழு அணை வலுவாக இருக்கிறது என்று அறிக்கை கொடுத்தது.

இந்தக் கட்டத்தில் கேரள அரசு, புதிய அணை, புதிய கரார் என்ற குரலை எழுப்பி, ஏற்கனவே இருக்கின்ற அணையை உடைப்போம் என்றது.

இந்தக் கட்டத்தில்தான் நான் கட்சி மாச்சரியங்களைக் கடந்து, ஐந்து மாவட்ட பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கம்பம் அப்பாஸ் அவர்களோடு ஐந்து மாவட்டங்களிலும் முல்லைப் பெரியாறைப் பாதுகாக்க வேண்டும். இல்லையேல், கோடிக்கணக்கான மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கிடைக்காது. இலட்சக்கணக்கான ஏக்கர் நிலம் பாசனத்தை இழக்கும் என்ற பிச்சாரத்தை முன்வைத்து மக்களைத் திரட்டினேன். கட்சிக் கொடி கட்டாமல் பொதுமக்களை, விவசாயிகளைத் திரட்டினேன். விழிப்புணர்வு ஏற்பட்டது.

நான்கு முறை உண்ணாவிரத அறப்போர் நடத்தினேன். கேரளத்திற்குச் செல்லுகின்ற 13 சாலைகளையும், இரண்டு முறை தடுத்து முற்றுகைப் போராட்டம் நடத்தினேன். அப்பொழுதுதான் கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன், “உங்களிடம் ஒரு வைகோ இருந்தால், எங்களிடம் நூறு வைகோக்கள் இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுச் சொன்னார். 

இந்தப் பரபரப்பான காலகட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இப்பொழுது வந்து சேர்ந்திருக்கின்ற அண்ணாமலை, முதலில் வெறும் போலிஸ் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். அவருக்குத் தமிழ்நாட்டைப் பற்றி ஒன்றும் தெரியாது. வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது.

தென் மாவட்டங்களில் முல்லைப் பெரியாறு என்றால், பென்னி குயிக் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியதே நான்தான். கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன், முல்லைப் பெரியாறு வழிந்தோடும் பகுதி புல்மேடு, வல்லக்கடவு, வண்டிப் பெரியாறு, மஞ்ச மலை, பசுமலை, தேங்கா கல், செங்கறை, உப்புத்துறை, சப்பாரி, ஆலடி, மேரிகுளம் ஆகியவைகளில் சரியாக 48 கி.மீ. தூரத்தில் இடுக்கி அணை உள்ளது. இந்தத் தூரத்தில் 48 தடுப்பணைகளை கேரளா கட்டிக் கொள்ளலாம். மழைக் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 555 அடி உயரத்திலிருந்து, 444 அடியாக 111 அடி நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும். பேபி அணைப் பகுதியில் உள்ள மரங்களை அப்புறப்படுத்த அனுமதிக்க வேண்டும். அணைக்கட்டுப் பகுதியில் தமிழ்நாட்டுக்கு மும்முனை மின்சாரம் கேரளா அரசு வழங்க வேண்டும்.

இப்போதுள்ள தமிழ்நாடு அரசின் படகு பல வருடங்களுக்கு முன் செயல்பாட்டுக்கு வந்தது. ஒன்று அணைப் பகுதியிலும் மற்றொன்று தேக்கடியிலும் செயல்பட ஏற்பாடு செய்ய வேண்டும். வல்லக் கடவு - முல்லைப் பெரியாறு பாதையைச் செப்பனிட தமிழ்நாடு அரசும் திட்டம் வகுக்க வேண்டும். தேனி மாவட்ட ஆட்சியரும், இடுக்கி மாவட்ட ஆட்சியரும் அடிக்கடி கலந்து பேச வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை ஏற்கனவே தீர்க்கப்பட்டுவிட்ட ஒன்றாகும். அணையை உடைக்கலாம் என்று தற்போது கேரள அரசு திட்டம் வகுக்கிறது. அதனை எதிர்த்துத் தமிழக மக்கள் பொங்கி எழுவார்கள்.

இந்தப் பிரச்சினையைப் பற்றி அகரம்கூடத் தெரியாத அண்ணாமலைகள் என் பெயரை உச்சரிக்க எந்தத் தகுதியும் கிடையாது.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க 
‘தாயகம்’
சென்னை - 8
12.11.2021

மலேசியா, சிங்கப்பூருக்குக் கூடுதல் வான் ஊர்திகள் வேண்டும். ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு, வைகோ மின் அஞ்சல் கடிதம்!

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், ஒன்றிய அரசின் வான் ஊர்திப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு இன்று (12.11.2021) எழுதி உள்ள மின் அஞ்சல் கடிதம்.  

கொவிட் தொற்று காரணமாக, பல நாடுகளில் இந்தியப் பயணிகள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. எனவே, அந்த நாடுகளில் பணிபுரிகின்ற இந்தியத் தொழிலாளர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக, நாடு திரும்பவும், மீண்டும் பணியில் சேர முடியாமலும் பரிதவித்து வந்தனர். 

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் குறைந்த அளவில் வான் ஊர்திகளை இயக்கியதால், குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பயணிகள் சென்று வர முடிந்தது. 

ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் முழுமையான தடை இருந்தாலும், கொவிட் தொற்று குறைந்த அளவில் இருந்த வளைகுடா நாடுகளுக்கு, ஓரளவு வான் ஊர்திகள் பறந்தன. எனவே, தமிழ்நாட்டில் இருந்து மலேசியா, சிங்கப்பூருக்குச் செல்ல வேண்டிய பயணிகள், மேற்கு நோக்கி வளைகுடாவுக்குப் பறந்து, மீண்டும் இந்தியா வழியாக மலேசியா, சிங்கப்பூருக்குச் சென்று வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால், இரண்டு அல்லது மூன்று மடங்கு கட்டணம் செலுத்தி வந்தனர். 

வந்தே பாரத் திட்டத்தின் கீழ், திருச்சியில் இருந்து மலேசியா, சிங்கப்பூருக்குக் குறைந்த அளவு வான் ஊர்திகள் சென்றன. ஆனால்,  சென்னையில் இருந்து வான் ஊர்திகள் இன்னமும் இயக்கப்படவில்லை. 

தற்போது, கொவிட் தொற்று ஓரளவிற்குக் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதால், இந்தியப் பயணிகளுக்கு விதித்து இருந்த தடையைப் பல நாடுகள் விலக்கிக் கொண்டு விட்டன. கடந்த நவம்பர் 7 முதல் அமெரிக்காவுக்கு இந்தியப் பயணிகள் செல்கின்றனர். மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகளில், இந்தியர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை, நவம்பர் 15 முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக அந்நாடுகள் அறிவித்து இருக்கின்றன. 

தமிழ்நாட்டில் இருந்து பல்லாயிரக்கணக்கானவர்கள், மலேசியா, சிங்கப்பூருக்குச் செல்லக் காத்திருப்பதால், சென்னை, திருச்சியில் இருந்து கூடுதல் வான் ஊர்திகளை இயக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க 
‘தாயகம்’
சென்னை - 8
12.11.2021

Thursday, November 4, 2021

ஹஜ் பயணம்: சென்னை வான் ஊர்தி நிலையம் புறக்கணிப்பு! வைகோ MP அறிக்கை!

கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஹஜ் புனிதப் பயணம் நடைபெறவில்லை. 2022 ஆம் ஆண்டில் பயணம் மேற்கொள்ள விழைவோர், விண்ணப்பம் செய்வதற்கான இணையதளங்களை, ஒன்றிய அரசின் ஹஜ் கமிட்டி அறிவித்து இருக்கின்றது.

வழக்கமாக, இந்தியாவின் 20 வான் ஊர்தி நிலையங்களில் இருந்து, ஹஜ் பயணிகள் பயணம் மேற்கொள்வர். ஆனால், அந்த எண்ணிக்கையை பத்தாகக் குறைத்து விட்டார்கள். சென்னை வான் ஊர்தி நிலையத்தின் பெயர், பட்டியலில் இல்லை.

தமிழ்நாடு மட்டும் அல்லாது, புதுச்சேரி மற்றும் அந்தமான் முஸ்லிம்களும், சென்னை வான் ஊர்தி நிலையத்தின் வழியாகவே ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றார்கள். அவர்கள் அனைவரும் இனி, கேரளத்தின் கொச்சி அல்லது கர்நாடகத்தின் பெங்களூரு அல்லது ஹைதராபாத் சென்றுதான்,  ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற நிலையை, ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.

இது, தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் பயணிகளுக்குப் பெருத்த அலைச்சலையும், கூடுதல் பொருட் செலவையும் ஏற்படுத்தும்.

எனவே, தமிழக அரசு இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, சென்னை வான் ஊர்தி நிலையத்தையும் பட்டியலில் சேர்க்க ஆவன செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
 
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
03.11.2021

Tuesday, November 2, 2021

உரம் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அதிவேக நடவடிக்கை!

தற்போது வட கிழக்கு பருவ மழையை நம்பி அனைத்து பகுதிகளிலும் வேளாண் பணிகள் நடந்து வருகின்றன.

குறிப்பாக தென் மாவட்டங்களில் மக்காச்சோளம், பருத்தி, சூரியகாந்தி, வாழை போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளது. ஆனால் தமிழகமெங்கும் பரவலாக கடும் உரம் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி  உள்ள நிலையில், இதை கருத்தில் கொண்டு சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் தேவையான அளவு உரம் உடனடியாகக் கிடைக்கக் கேட்டுக் கொண்டேன்.

அதன் காரணமாக தென்காசி மாவட்டத்திற்கு முதல் தவணையாக 120 டன் யூரியா உரம் ஒதுக்கீடு கிடைத்தது. அதில் கலிங்கப்பட்டி, செவல்குளம், மைப்பாறை ஆகிய ஊர்களில் உள்ள தமிழ்நாடு வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கு தலா 20 டன் என்று பகிர்ந்து தரப்பட்டுள்ளது. 

மேலும் இரண்டாவது தவணையாக இன்னும் 120 டன் யூரியா உரம் கிடைக்க அதிகாரிகளிடம் பேசி உள்ளேன்.

விரைவில்  குருவிகுளம் யூனியனுக்கு உட்பட்ட சாயமலை வலசை, சிதம்பராபுரம், உடன்குளம். ஆலங்குளம், மகேந்திரவாடி, குருவிகுளம், அழகனேரி, திருவேங்கடம் கூட்டுறவு சங்கங்களுக்கும் விரைவில் பகிர்ந்து அளிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளேன்.

அன்புடன்...
துரை வைகோ
தலைமைக் கழகச் செயலாளர்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்
02.11.2021

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பணி வாய்ப்பு வழங்கிடுக! வைகோ MP அறிக்கை!

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில், வேலை வாய்ப்பகப் பதிவு மூப்பு அடிப்படையில், ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு வந்தனர்.

அதன்படி, 2009,10,11 ஆம் ஆண்டுகளில், தி.மு.க. ஆட்சிக் காலத்தில், வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு முறையில், 31,170 பட்டதாரி ஆசிரியர்கள், சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைத்தனர். 22,351 பேர் கலந்து கொண்டனர். 8819 பேர் கலந்து கொள்ளவில்லை. 

சான்றிதழ்கள் சரிபார்ப்பு முடித்த 11,161 பேர், தேர்வு செய்யப்பட்டு, பணியில் சேர்ந்து விட்டனர். 2011 சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு நிலையில், எஞ்சியவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படவில்லை.

2011 ஆம் ஆண்டு அண்ணா தி.மு.க.ஆட்சி வந்த பிறகு, 23.6.2012 அன்று சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, 340 பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கு மட்டும் பணி ஆணை வழங்கினர். 

இந்த நிலையில், ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சிக் கழகம், (National Council of Teacher Education-NCTE) இனி, ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தித்தான் தேர்வு செய்ய வேண்டும் என, ஆணை பிறப்பித்தது. ஆனால் அந்த அறிவிப்பில், விதி 5 இன்படி (Clause V), ஏற்கனவே பணி நியமன நடவடிக்கைகளில், சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு பொருந்தாது என விதிவிலக்கு அளித்தது.

அதன்பிறகு, இனி, தகுதித் தேர்வு நடத்தித்தான் ஆசிரியர்களைத் தேர்வு செய்வோம் என அதிமுக அரசு அறிவித்து,  Teachers Eligibility Test-TET தேர்வு நடத்தினர். அந்தத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு,  2013 இல் 15000, 2014 இல் 15000 பேருக்கு வேலை அளித்தனர்.

‘முன்பு சான்று ஆவணங்களைச் சரிபார்ப்பு முடிந்து, பணி ஆணை வழங்கப்படாமல் உள்ளவர்களுக்கும்  வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்’ என, தி.மு.கழகத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், 22.07.2013 அன்று அறிக்கை வெளியிட்டார்கள். ஆனால், அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.

பதிவு மூப்பு அடிப்படையில், சான்று ஆவணங்கள் சரிபார்ப்பு முடிந்தபிறகு, 1258 பட்டதாரி தமிழ் ஆசிரியர்கள் உட்பட சுமார் 5000 பேர் பணி நியமனம் கிடைக்கப் பெறாமல் உள்ளனர். அவர்கள்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். 

அந்த வழக்கில், ‘2012 க்கு முன்பு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டவர்கள், கிளாஸ் 5 விதியின்படி. இனி, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டிய தேவை இல்லை; காலிப் பணி இடங்கள் ஏற்படும்போது, அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் எனத் தீர்ப்பு அளித்தது. 

தற்போது, தமிழ்நாடு முழுமையும் அரசுப் பள்ளிகளில் 6 இலட்சம் மாணவர்கள் கூடுதலாகச் சேர்ந்து இருப்பதாக, அரசு அறிவித்து இருக்கின்றது. எனவே, பல்லாயிரக்கணக்கான புதிய ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. விரைவில், புதிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்து இருக்கின்றார்.

இந்தச் சூழ்நிலையில், ஏற்கனவே காத்திருப்பில் உள்ள ஆசிரியர்களுக்கு, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி முன்னுரிமை அளித்து, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க 
‘தாயகம்’
சென்னை - 8
02.11.2021

நவம்பர் 1: மொழிவாரி மாநிலம் அமைந்த நாள் ஜூலை 18: ‘தமிழ்நாடு’ மலர்ந்த நாள். தமிழ்நாட்டுப் பெரு விழாவாகக் கொண்டாடுவோம்! வைகோ அறிக்கை!

விடுதலைக்குப் பின்னர் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது குறித்து ஆராய்வதற்கு, 1948 ஜூன் 17 ஆம் நாள் என்.கே.தார் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம், நாட்டின் ஒற்றுமைக்குக் கேடு விளைவிக்கும் என்று கூறி,  மொழி வழி மாநிலப் பிரிப்பு தேவை இல்லை எனப் பரிந்துரை செய்தது.

தார் ஆணையத்தின் பரிந்துரை அறிக்கையை ஏற்கக் கூடாது என்று போராட்டங்கள் எழுந்தவுடன், நேரு அரசு ஜே.வி.பி. குழுவை (ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், பட்டாபி சீதாராமையா) அமைத்தது. இக்குழுவின் பரிந்துரையும், மொழிவாரி மாநிலப் பிரிவினைக்கு எதிராகவே இருந்தது. ஆனால் ஆந்திர மாநிலப் பிரிவினைக்கு ஆதரவாகக் கருத்துக் கூறியது.

ஏனெனில், ஆந்திர மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்நது போராட்டங்களில் ஈடுபட்டனர். அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, 1952 அக்டோபர் மாதம், பொட்டி ஸ்ரீராமுலு சென்னையில் உண்ணாவிரத அறப்போராட்டத்தைத் தொடங்கினார். 58 நாட்கள் உண்ணா நோன்பு மேற்கொண்டு 1952, டிசம்பர் 16 இல் அவர் உயிர்த் தியாகம் செய்தார். இதன் எதிரொலியாக ஆந்திரா எங்கும் உருவான கனல், பண்டித நேரு அரசை ஆந்திரா எனும் தெலுங்கு மாநிலத்தை 1953 அக்டோபர் 1 ஆம் நாள் அமைப்பதற்கு அடித்தளம் ஆயிற்று.

ஆந்திரா மாநிலத்தைப் போல மொழிவாரி மாநிலக் கோரிக்கைகளை பல்வேறு தேசிய இன மக்களும் எழுப்பியதைத் தொடர்ந்து, 1954 இல் பீகாரைச் சேர்ந்த பசல் அலி தலைமையில் மாநில மறுசீரமைப்புக் குழு அமைக்கப்பட்டது. இதில் கே.எம்.பணிக்கர், ஹிருதயநாத் குன்ஸ்ரூ ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.

பசல் அலி குழு தனது அறிக்கையை, 1955, செப்டம்பர் 30 இல் இந்திய அரசிடம் அளித்தது. அதற்குப் பிறகு நாடாளுமன்றத்தில் மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1956 நவம்பர் 1 ஆம் நாள் முதன்முதலில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.

சென்னை மாகாணத்தில் இருந்து தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழி பேசும் மக்கள் அந்தந்த மொழி பேசும் பகுதிகளுடன் இணைக்கப்பட்டனர். சென்னை மாநிலம் தமிழ்மொழி பேசும் மக்களின் தாயகமாக உருவாக்கப்பட்டது.

மாநில மறுசீரமைப்பின் போது, தமிழ் மொழி பேசுபவர்கள் அதிகம் வாழும் பகுதியான சித்தூர், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளை ஆந்திராவிடம் நாம் இழந்தோம்.

தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, நெடுமங்காடு, பாலக்காடு போன்ற பகுதிகளை கேரளாவிடம் இழந்தோம். ‘வெண் கல் ஊர் என்பது மருவி வெங்கலூர்’ என அழைக்கப்பட்ட இன்றைய பெங்களூரு, கோலார் தங்க வயல் போன்ற, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற பகுதிகளை கர்நாடகத்திடம் தமிழ்நாடு இழந்து விட்டது.

மொழிவாரி மாநிலங்கள் அமைவதற்கு முன்பு, சென்னை மாகாணம், கர்நாடகம், கேரளா ஆகிய மூன்றையும் இணைத்து ‘தட்சிணப் பிரதேசம்’ அமைக்கும் திட்டத்தை நேரு அரசு முன் வைத்தபோது, தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்தார். அப்போதைய முதல்வர் பெருந்தலைவர் காமராசர் அவர்கள், பெரியாரின் கருத்தை ஆதரித்து பிரதமர் நேரு அவர்களிடம் ‘தட்சிணப் பிரதேசம்’ அமையக் கூடாது என்று வலியுறுத்தினார்.

தென் தமிழகத்தின் தமிழர்கள் வாழும் கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீசுவரம் உள்ளிட்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் பகுதிகள் கேரள மாநிலத்துடன் சேர்ந்துவிடாமல் தடுப்பதற்கு மாபெரும் மக்கள் திரள் போராட்டங்கள் எழுச்சியுடன் நடத்தப்பட்டன. அப்போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். மார்ஷல் நேசமணி, எஸ். சாம் நத்தானியல், பி.எஸ்.மணி, காந்தி ராமன், ஆர்.கே.ராம் உள்ளிட்ட தலைவர்கள் போராடி வெற்றி கண்டனர்.

வடக்கே திருத்தணி தமிழகத்தோடு இணைவதற்கும், தலைநகர் சென்னையைக் காப்பதற்கும் வடக்கு எல்லைப் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்தவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் தெற்கு எல்லைப் போராட்டத்திற்கும், வடக்கு எல்லைப் போராட்டத்திற்கும் ஆதரவு நல்கினார்.  இந்த எல்லைப் போராட்டங்களில் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் பங்கேற்றுச் சிறை ஏகினர் என்பதும் மறுக்க முடியாத வரலாறு.

எனவே நவம்பர் 1, மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நாளையும் கொண்டாட வேண்டும்; அந்த நாளில், எல்லைப் போராட்டங்களை முன்னெடுத்து வெற்றி பெற்ற தலைவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.

சென்னை மாநிலம் என்ற பெயரை, ‘தமிழ்நாடு’ என மாற்றிட, 1967 ஜூலை 18 ஆம் நாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அந்த ஜூலை 18 ஆம் நாளை, ‘தமிழ்நாடு நாள்’ அன்று கொண்டாடுவதற்கு தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு வரவேற்கத்தக்கது; பொருத்தமானது. 

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க 
‘தாயகம்’
சென்னை - 8
31.10.2021

Monday, November 1, 2021

தொல் திருமாவளவனுடன் துரை வைகோ சந்திப்பு!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் அண்ணன் துரைவைகோ அவர்கள், இன்று 01-11-2021 விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.