Wednesday, April 5, 2023
காவிரிப் படுகையில் நிலக்கரி எடுக்க ஏலம்!வைகோ MP கடும் கண்டனம்!
Saturday, April 1, 2023
சித்துராஜபுரம் முதல் நிலை ஊராட்சி - பயணியர் நிழற்குடை திறப்பு விழா!
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், சித்துராஜபுரம் முதல் நிலை கிராம ஊராட்சியில் பயணிகள் நிழற்குடையினை தலைவர் வைகோ எம். பி., அவர்களின் நிதியில் இருந்து கட்டப் பட்டது. இன்று (01.04.2023) மாலை பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தேன்.
சமூக நீதி பாதுகாப்பு பயணம்..!
திராவிட மாடல் விளக்க மாநாடு பொதுக்கூட்டம்..!
Wednesday, March 29, 2023
விசாரணைக் கைதிகளின் பல்லைப் பிடுங்கி சித்ரவதை: சேரன்மாதேவி காவல் அலுவலர் மீது வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! வைகோ அறிக்கை!
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் ஐ.பி.எஸ்., தமது காவல்பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் புகாருக்கு உள்ளாகும் விசாரணைக் கைதிகளின் வாயில் கற்களைப் போட்டு கன்னத்தில் அடித்ததாகவும், கட்டிங் பிளேடால் பல கைதிகளின் பற்கiளைப் பிடுங்கிக் கொடுமைப்படுத்தியதாகவும், புதிதாக திருமணமான ஒருவர் புகாருக்கு ஆளான நிலையில், அவரது விதைப் பையை நசுக்கி சித்ரவதை செய்ததாகவும், இதனால் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் கிடைத்த செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
இவை காவல் நிலையங்களில் இதுவரை கேள்விப்படாத காட்டுமிராண்டித்தனமான செயல்களாகும்.
பெருமைக்குரிய இந்திய காவல் பணி நிலையில் உள்ள ஓர் அலுவலரின் இச்செயல்கள் கடுமையான குற்றச் செயல்களாகும்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த அலுவலரை காத்திருப்போர் பட்டிலில் வைத்துள்ளதாக தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் அறிவித்துள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் நேரடி வழிகாட்டுதலில் முழுமையான அர்ப்பணிப்புடன் மக்கள் போற்றும் வகையில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காவல்துறையின் பெருமைக்கு இப்படிப்பட்டவர்களால் களங்கம் ஏற்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது.
இவரது நடவடிக்கைகள் குறித்து முழுமையாக விசாரித்து, பாதிக்கப்பட்டோரிடம் புகார்கள் பெற்று, இவர் மீது வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
29.03.2023
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தொடர் தாக்குதல்! இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன? வைகோ கேள்விக்கு ஒன்றிய இணை அமைச்சர் பதில்!
Sunday, March 26, 2023
துரை வைகோ முயற்சியில் 20 வருடம் கழித்து மீண்டும் உயிர்பெற்ற கரிசல்குளம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம்!
Friday, March 24, 2023
ராகுல்காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை! வைகோ MP கண்டனம்!
இந்திய கடல் எல்லையில் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது! வைகோ MP கண்டனம்!
இராமேஸ்வரத்திலிருந்து மார்ச்சு 22 ஆம் தேதி 540 விசைப் படகில் மீன்படித் தொழிலுக்குச் சென்ற தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்து, சிங்களக் கடற்படையினர் விரட்டி உள்ளனர். இலங்கை ரோந்து கப்பலில் வந்த அவர்கள் துப்பாக்கியைக் காட்டி நமது மீனவர்களை மிரட்டி இருக்கின்றனர்.
Wednesday, March 22, 2023
ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம்: ஒன்றிய அமைச்சரின் விளக்கத்தால் தமிழ்நாடு ஆளுநரின் மக்கள் விரோதப் போக்கு அம்பலம்! துரை வைகோ அறிக்கை!
'மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை' என்று கூறிய தமிழ்நாடு ஆளுநர், ரம்மி ஆன்லைன் சூதாட்டதடை சட்டத்தை திருப்பி அனுப்பிய நிலையில், ஒன்றிய அரசின் இந்த பதில் தளபதி ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நிலையை நியாயப்படுத்தும் வகையில் உள்ளது.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டில் பணத்தை இழந்து, கடனாளியாகி மன உளச்சலுக்கு உள்ளாகி இதுவரை 44 பேர் தற்கொலை செய்துள்ளனர். எனவே இந்த சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று மனநல மருத்துவர்களும் ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர்.
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிப்பது மற்றும் முறைப்படுத்துவது குறித்து முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவின் பரிந்துரையின் பேரில் ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டம் இயற்றப்பட்டு, செப்டம்பர் 26 அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்தார்.
இந்த அவசர சட்டத்தை நிரந்தரமாக்கும் வகையில் கடந்த அக்டோபர் 17 ஆம் நாள் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அக்டோபர் 19 ஆம் நாள் ஆளுநருக்கு இசைவுக்காக அனுப்பப்பட்டது.
இதில் சில சந்தேகங்கள் இருப்பதாக கூறி விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பினார் ஆளுநர்.
'Public Order, Public Health, Theaters and Dramatic performances என்ற பிரிவுகளின்படிதான் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது' என்று கடந்த நவம்பர் 24 ஆம் நாள் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்த பின்னரும் ஆளுநர் 'கிடப்பில்' போட்டிருந்தார்.
ஏற்கனவே 3.8.2022 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு. மகாபாலி சிங் அவர்கள் ஆன்லைன் சூதாட்டம் தடை குறித்த கேள்விக்கு, அப்போதைய ஒன்றிய அமைச்சர் மாண்புமிகு ராஜிவ் சந்திரசேகர் அவர்கள், 'எல்லா வகையான சூதாட்டங்களும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அட்டவணை 7 உட்பிரிவு 2 ன் கீழ்மாநில அரசுகளின் அதிகாரத்தின் கீழ் வருகிறது'.
'மேலும் ‘Information and Technology (IT) Act 2000’ சட்டத்தில் இந்த சூதாட்ட விளையாட்டுகள் குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. சூதாட்ட விளையாட்டுகள் அனைத்தும் சட்டத்துக்குப் புறம்பானவை . இவை Police and Public Order என்பதன் கீழ் வருவதால் அவை மாநில அரசுகளின் அதிகாரத்திற்கு உட்பட்டது' என்று மிகத் தெளிவாக கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு உரிய விளக்கம் கொடுத்த பின்பும், ஒன்றிய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே தெளிவான விளக்கத்தை நாடாளுமன்றத்தில் அளித்த பின்பும், இப்போது 5 மாதங்களுக்குப் பிறகு 'மத்திய அரசின் கீழ்வரும் விவகாரத்தில் மாநில அரசு எப்படி சட்டம் இயற்றலாம்' என்று கேள்வி அனுப்பி மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர்.
நமது தலைவர் வைகோ அவர்களும் இந்த ஆன்லைன் சட்டம் குறித்த கேள்விகளை ஒன்றிய அரசுக்கு அனுப்பி அதற்கான விடை பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
இப்போது செய்தி மற்றும் ஒளிப்பரப்புத் துறை ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் கூறியுள்ள விளக்கத்தின் அடிப்படையில் தமிழ்நாடு ஆளுநர், மக்களின் எண்ணத்திற்கு விரோதமாக, மத சக்திகளுக்கு துணை போகும் வகையில் செயல்பட்டு அந்த பதவிக்கு இழிவை ஏற்படுத்தியுடன் அந்த பதவில் நீடிக்க தகுதி யிழந்தவராகிறார்.
இது போன்று தெலுங்கான மாநில ஆளுநர், மாநில அரசு இயற்றிய சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளது குறித்து, தெலுங்கானா அரசு உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. உச்சநீதி மன்றமும் இது குறித்து ஒன்றிய அரசுக்கு விளக்கம் கேட்பதாக கூறியுள்ளது.
இதே போன்று தமிழ்நாடு அரசும் உச்சநீதிமன்றத்திற்கு சென்று, தமிழ்நாடு ஆளுநரின் தமிழ்நாட்டு மக்கள் விரோத போக்கிற்கும், தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சிகளுக்கும் முடிவு கட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
துரை வைகோ
தலைமைக் கழகச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.
22.03.2023
வேளாண்துறை வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் தரும் பட்ஜெட். வைகோ MP அறிக்கை!
உணவு தானிய உற்பத்தியில் இலக்கைத் தாண்டி சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டில், விவசாயிகளை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.
வேளாண் பயிர்க்கடன் வழங்க கூட்டுறவு சங்கங்களுக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு; இலவச மின்சாரம் வழங்க ரூ.6536 கோடி ஒதுக்கீடு; பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு மானியம் ரூ.2337 கோடி ஒதுக்கீடு; காவிரிப் படுகை மாவட்டங்களில் நாகை -திருச்சி வேளாண் தொழில் வழித்தடம் அமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு; கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்ணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை 2,504 கிராம ஊராட்சிகளுக்குச் செயல்படுத்த ரூ.230 கோடி ஒதுக்கீடு.
மேற்கண்ட நிதி ஒதுக்கீடுகளால் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும்.
60 ஆயிரம் சிறு, குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வேளாண் கருவிகள் வாங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதும், ஆதி திராவிட, பழங்குடியின சிறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 விழுக்காடு மானியம் அளிக்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கவை.
பனை, தென்னை, வாழை, பலா, மிளகாய், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள் உற்பத்தி மற்றும் மல்லிகை, முருங்கை, குளிர்கால காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்கும் திட்டங்களால் வேளாண்மைத் தொழில் புத்தாக்கம் பெறும்.
நுண்ணீர் பாசன முறையை நிறுவ ரூ.450 கோடி மானியம் வழங்குவதும், ஆண்டு முழுவதும் தக்காளி, வெங்காயம், சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் பயன்பெறவும் திட்டங்கள் அறிவித்து இருப்பதும் பாராட்டுக்குரியவை ஆகும்.
இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, நம்மாழ்வார் பெயரில் ஐந்து இலட்ச ரூபாயுடன், பாராட்டுப் பத்திரம் குடியரசு நாள் விழாவில் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என்ற அறிவிப்பு இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும்.
அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, மூலனூர் குட்டை முருங்கை உள்ளிட்ட பத்து வேளாண் விளைபொருட்களுக்கு உலக அளவில் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை மேற்கொள்ள உறுதி அளிக்கப்பட்டு இருப்பதும் வரவேற்கத்தக்கது.
தமிழ்நாட்டில் வேளாண்மைத் துறை வளர்ச்சி மற்றும் உணவு உற்பத்திப் பெருக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பது பாராட்டுக்குரியதாகும்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
21.03.2023
Saturday, March 18, 2023
தமிழ்நாடு அரசின் அங்கக வேளாண்மை கொள்கை 2023 யை மனதார வரவேற்கிறோம். துரை வைகோ அறிக்கை!
வேளாண்மையில் பயன்படுத்தப்படும் ரசாயண உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளால் மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள், மண்புழுக்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து, மண்வளம் பாதிக்கப்படுகிறது.
Sunday, March 12, 2023
தலைமை பொதுக்குழு உறுப்பினர் கே.ஏழுமலை இல்ல திருமண வரவேற்பு!
செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கே.ஏழுமலை அவர்களது மகள் E.மதுமிதா - K.பாலாஜி இவர்களது திருமண வரவேற்பு செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் மா.வை. மகேந்திரன் தலைமையில் இன்று (12.03.2023) மாலை நடைபெற்றது.
மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் டி.ஹரி மறைவுக்கு நேரில் அஞ்சலி..!
வடசென்னை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த D.கௌரி சங்கர் என்ற D.ஹரி அவர்கள், நமது இயக்கம் தொடங்கிய காலம் முதல் அந்த பகுதியில் சிறப்பாக செயல்பட்டு வந்தவர்.
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எனது வாழ்த்துகள்!
தமிழக அரசின் பள்ளிக்கல்வி இயக்ககம் (தேர்வுகள்) சார்பில் நடத்தப்படும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 13 அன்று தொடங்குகின்றன. பல இலட்சக் கணக்கான மாணவக் கண்மணிகள் இந்தப் பொதுத்தேர்வுகளை எழுதுகின்றனர். அடுத்தகட்ட உயர்கல்விக்கு அழைத்துச் செல்லும் நுழைவாயிலாக பொதுத் தேர்வுகள் விளங்குகின்றன.
Saturday, March 11, 2023
திருமாவளவன் MP வைகோ MP உடன் சந்திப்பு!
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்கள் தலைவர் வைகோ அவர்களை அண்ணா நகர் இல்லத்தில் சந்தித்துவிட்டு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.
https://www.youtube.com/watch?v=_mgNwtyMAx4








































