Sunday, March 26, 2023

துரை வைகோ முயற்சியில் 20 வருடம் கழித்து மீண்டும் உயிர்பெற்ற கரிசல்குளம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம்!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ MP அவர்களின் தாயார் அன்னை மாரியம்மாள் பிறந்த ஊரில், துரை வைகோ முயற்சியில் 20 வருடம் கழித்து மீண்டும் உயிர் பெற்று எழுந்தது கரிசல்குளம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம்.

இளந்தலைவர் துரை வைகோ அவர்களின் அரும்பெரும் முயற்சியால், மீட்டு கொண்டுவரப்பட்ட, A548 கரிசல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க திறப்பு விழாவில், தலைவர் வைகோ MP மற்றும் மாண்புமிகு கூட்டுறவு துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அவர்கள், மதிமுக துணை பொதுச்செயலாளர்
தி.மு.இராசேந்திரன் திருமலாபுரம் அவர்கள், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். சதன்திருமலைக்குமார் அவர்கள், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா அவர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறையினர், முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment