மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 30 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தாயகத்தில் தலைவர் வைகோ, தலைமை கழக செயலாளர் துரை வைகோ ஆகியோர் பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து கழகக் கொடி ஏற்றி வைத்து கழக கண்மணிகளுக்கு இனிப்புகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் கழக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சுஜீவன், தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் கே கழக குமார், தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சுப்பிரமணி, மாநில மகளிரணி துணைச் செயலாளர் மல்லிகா தயாளன், எழும்பூர் பகுதி கழக செயலாளர் தென்றல் நிசார் உள்ளிட்ட ஏராளமான கழக முன்னோடிகள் மற்றும் ஏராளமான கழக கண்மணிகள் கலந்து கொண்டு கழக உதயத் திருநாளை கொண்டாடினர்.
No comments:
Post a Comment