Tuesday, April 7, 2015

தஞ்சை மனித சங்கிலிக்கு பின் பொதுக்கூட்டத்தில் வைகோ!

காவிரியில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்கவும், மீத்தேனை விரட்டவும், நில அபகரிப்பு சட்டத்தையும் எதிர்த்து காவிரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் தலைவர் வைகோ கலந்து கொண்ட மனித சங்கிலி நிறைவடைந்து பின்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் நாசகார திட்டங்களை பற்றிய விழிப்புணர்வை தலைவர் வைகோ உரையாக நிகழ்த்தினார்.

பின்னர் பேசிய தோழர் மணியரசனும் மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மற்றும் ஏனைய மதிமுக தலைவர்களும், பிற இயக்கங்களின் தலைவர்களும் அதன் தீமைகளை பற்றி பேசினர். இந்த பொதுக்கூட்டத்திலும் மேலும் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

தஞ்சை மனித சங்கிலி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் புதிய அணை கட்ட முயல்வதைக் தடுக்கவும், மீத்தேனை முற்றிலும் விரட்டவும், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கண்டித்தும் தஞ்சையில், காவேரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மனித சங்கிலி அறப்போராட்டம் நடைபெற்றது. இதில் வைகோ உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இதற்கு முன்னர் காவிரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்கள் உமாமகேசுவரனார் சிலைக்கு மாலை அணிவித்து மனித சங்கிலி அறப்போராட்டத்தை முறைப்படுத்தினார். தலைவருடன் மதிமுக மாவட்ட நிா்வாகிகளும் சேர்ந்து முறைப்படுத்தினர்.

இந்த அறப்போராட்டத்தில் தலைவா் வைகோ, அய்யா மணியரசன், அண்ணன் இமயம் ஜெபராஜ் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், விவசாயிகள், இரத அமைப்புகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


மதிமுக இணையதள அணி - ஓமன்

மதிமுகவின் ஒளி ஓலி வளம் பறி போனது!

நெல்லை செல்வன் சவுண்ட் சர்வீஸ் அதிபர் தர்மர் காலமானார். மதிமுக வின் மாநாடு எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கேல்லாம் ஒலி ஒளி அமைத்து கட்சிக்கு தொண்டாற்றினார். அவருடைய இழப்பு மதிமுகவினருக்கு பேரிழப்பாகும். நாளை பாளையங்கோட்டையில் நடைபெறும் அவரது இறுதிச் சடங்கில் மதிமுக பொதுச்செயலாளர் தலைவர் வைகோ அவர்கள் பங்கேற்கிறார்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரது குடும்பத்தாரை இறைவன் தாமே தேற்ற வேண்டுமென கேட்டுகொள்கிறோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

12 தமிழ் தொழிலாளர் சுட்டுப்படுகொலைக்கு வைகோ கண்டனம்!

ஸ்ரீவாரு மெட்டு சேசாலம் வனப்பகுதியில் ஆந்திர காவல்துறையினரால் 12 தமிழர்கள் உட்பட 20 தொழிலாளர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.

மரங்களை வெட்டிக் கடத்துகின்ற பெரும் திமிங்கலங்களும், பண முதலைகளும் எதிலும் சிக்காமல் தப்பித்துக்கொள்கின்றனர், அன்றாடம் உழைக்கின்ற அப்பாவி கூலித் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சட்ட விரோதமான செயலில் ஈடுபட்டிருந்தால், அவர்களை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுதான் முறையாகும்.

காடுகளில் உலவும் விலங்குகள், பறவைகளைக்கூட சுட்டுப் பொசுக்கக் கூடாது என்று சட்டம் இருக்கிறது. ஆனால், 12 தமிழர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் ஆந்திர காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இப்படுகொலையில் ஈடுபட்ட காவல்துறையினருக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, இதற்குக் காரணமான காவல்துறையினர் மீது கொலை வழக்கு தொடரப்பட்டு பணி நீக்கம் செய்வதுடன், கைது செய்யப்பட வேண்டும். பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

துப்பாக்கிச் சூட்டில் பலியான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தக்க நிவாரணத்தை ஆந்திர மாநில அரசு வழங்க வேண்டும்.

துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக மதிமுக பொதுச்செயலாளர் தலைவர் வைகோ கூறியுள்ளார். 

தமிழர்களென்றால் அனைவருக்குமே கிள்ளுக்கீரைகளை போன்ற எண்ணம் இருக்கிறதா... தமிழர்களின் உணர்வுகள் ஒன்றாக ஒலிக்குமானால் அரும்பெரும் தமிழ் இராணுவமாக உருப்பெறும், எனவே ஆந்திர காவல்துறை மேலும் இதுபோன்ற காட்டுமிராண்டி தனமாக மனிதர்களை சுடக்கூடாது எனவும் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக எச்சரிக்கை செய்கிறோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

Monday, April 6, 2015

காவிரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம்!

கர்நாடகம் அணை கட்டுவதை தடுக்கவும், மீத்தேனை முற்றிலும் விரட்டவும், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கண்டித்தும் நாளை தஞ்சையில் காவிரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது. மனித சங்கிலியானது கரந்தை, தஞ்சாவூர் உமாமகேசுவரனார் சிலை அருகில் இருந்து தொடங்கி, கரந்தை தமிழ்ச் சங்கம், பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை, எம்.ஜி.ஆர்.சிலை, ரயிலடி ஆகிய இடங்களில் கூடும். 

இந்த மனித சங்கிலி போராட்டமானது மாலை 4. 00 மணி அளவில் ஒன்று கூடி, பின்னர் மாலை 5. 00 மணி முதல் மாலை 6. 00 மணி வரை மனித சங்கிலி அறப்போர் போராட்டமும், மாலை 6. 15 மணிக்கு இரயிலடி எம்.ஜி.ஆர். சிலை அருகே பொதுக்கூட்டமுமாக நடைபெறுகிறது. இதில் காவிரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தலைவர் வைகோ மற்றும் பிற விவசாய அமைப்புகள் மற்றும் ஏனைய இயக்கங்களின் தலைவர்களும் உரை நிகழ்த்துகின்றார்கள்.

பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு இப்படிபட்ட மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்படி அன்புடன் கெட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

5 மாவட்ட நிர்வாகிகளின் சந்தா அளிக்கும் நிகழ்ச்சியில் வைகோ!

காஞ்சிபுரம், தென்சென்னை, வடசென்னை, மத்தியசென்னை, திருவள்ளூா் உள்ளிட்ட ஐந்து மதிமுக மாவட்ட நிா்வாகிகள் தலைவா் வைகோ அவா்களிடம் வருகிற மே மாதம் 1 ஆம் தியதி முதல் வெளீயாகவிருக்கின்ற புதிய நாளிதழுக்கான வருட சந்தாவை வழங்கும் நிகழ்வு தாயகத்தில் நடைபெற்றது. இதில் புதிய நாளிதழின் உரிமையாளர் அண்ணன் இமயம் ஜெபராஜ் அவர்கள் மற்றும், மதிமுக துணைப்பொதுச்செயலாளர் அன்பிற்குரிய அண்ணன் மல்லை சத்யா அவர்களும் மற்றும் கழக உடன்பிறப்புக்களும் கலந்துகொண்டனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

சென்னை உயர்நீதிமன்றத்தில் விவாதம் வைகோ பங்கேற்பு!

2008 ல் தமிழக அரசு தொடர்ந்த தேச துரோக வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வரும்போது பத்திரிகையாளர்களை சந்தித்தார் வைகோ. அருகில் மதிமுக சட்டத்துறை செயலாளர் மூத்த வழக்கறிஞர் தேவதாஸ்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

Sunday, April 5, 2015

சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை புயல் வீசும்!

மதிமுக இணையதள அணி - ஓமன்

புரட்சி புயலின் மௌன விரதம்!

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தனது தந்தையார் வையாபுரி அவர்களின் நினைவுநாளான இன்று கலிங்கப்பட்டியில் உள்ள தனது இல்லத்தில் மௌன விரதம் கடைபிடித்து வருகிறார்.
வைகோவின் தந்தையார் வையாபுரி அவர்கள் 1973 ஏப்ரல் 5 ஆம் தேதி காலமானார். அதிலிருந்து 41 ஆண்டுகளாக வைகோ அவர்கள் மௌன விரதம் கடைபிடித்து வருகிறார்.
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் யாரிடமும் பேசாமலும், தண்ணீர்கூட பருகாமலும் மௌன விரதம் கடைபிடித்து வருகிறார். தேர்தல் பிரச்சார காலங்களிலும்கூட அவர் மௌன விரதத்தை கடைபிடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதிமுக இணையதள அணி - ஓமன்

மோடி அரசின் நிலம் பறிக்கும் சட்டம்!

மோடி அரசின் " நிலம் கையகப் படுத்தும்" சட்டம் நடை முறைக்கு வந்தால் நமக்கும் இதே நிலைமை தான்.....
 " ராஜஸ்தானில் சிமண்ட் ஆலை விரிவாக்கதிற்காக அருகில் இருந்த கிராம் பறிக்கப் பட்ட போது, தாங்கள் வீட்டை தர மறுத்த இந்த ஏழை தம்பதிக்கு கொடுக்கப் பட்ட தண்டனை.!!

மதிமுக இணையதள அணி - ஓமன்

சங்கரன்கோவில் முப்பெரும் விழா-வைகோ உரை!

நேற்று, சங்கரன்கோவிலில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அண்ணன் அருணகிரியின் சங்கரன்கோவில் வரலாறு நூலை வெளியிட்டு தலைவா் வைகோ அவா்கள் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

ஈஸ்டர் பண்டிகை நல்வாழ்த்துக்கள்!

மனித குலத்தின் மனக்காயங்களுக்கு மருந்திடுவதோடு, அழுத்தும் துன்ப இருளில் இருந்து விடுவித்து நம்பிக்கை ஒளி ஏற்றும் உன்னதத் திருநாள்தான், உலகெங்கும் கிறித்தவ மக்கள் போற்றிக் கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை நாளாகும்.
அன்பையும் கருணையையும், தீங்கு புரிந்தோருக்கும் நன்மை செய்யும் மனிதநேயத்தையும் போதித்த இயேசு கிறிஸ்து நிந்தைக்கு ஆளாகி, பிலாத்து சபையில் வேதபாரகர்களின் தூண்டுதலால் ஏற்பட்ட நிர்பந்தத்தால் தண்டனைக்கு உள்ளாகி, சிலுவையைச் சுமந்தார், சித்ரவதைக்கு ஆளானார்.

கொல்கதா எனும் கபால ஸ்தலத்தில் ஒரு வெள்ளிக்கிழமை நாளில் முள்முடி சூட்டப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார். சிரசிலும், கைகளிலும், கால்களிலும் ஆணிகள் அறையப்பட்டன. தாங்கள் செய்வது அறியாமல் செய்யும் இவர்களை பிதாவே மன்னியும்! என்று கூறியவாறு உயிர் நீத்தார்.

மூன்றாம் நாள் இயேசுநாதர் உயிர்த்து எழுந்த ஞாயிற்றுக்கிழமை புனித ஈஸ்டர் திருநாளாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. காலம் காலமாக தமிழகம் சமய நல்லிணக்கத்தைப் போற்றி வருகிறது. ஆனால் சகிப்புத்தன்மைக்கும், சமய ஒற்றுமைக்கும், மதச்சார்பற்ற கொள்கைக்கும் அறைகூவலும் அச்சுறுத்தலும் தலைதூக்கி வரும் இன்றைய காலகட்டத்தில் இயேசுநாதரின் அமுத மொழிகளை நினைவில் கொண்டு மனிதநேயத்தையும், சமய நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க ஈஸ்டர் பண்டிகை நாளன்று உறுதி ஏற்போம்!

தமிழகத்திலும், தரணியெங்கும் வாழும் கிறிஸ்தவ பெருமக்களுக்கு ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இணையதள அணி-ஓமன் சார்பில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

மதிமுக இணையதள அணி - ஓமன் 

Saturday, April 4, 2015

தென் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பில் வைகோ வீர உரை!

திருநெல்வேலி புறநகர், மாநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நடந்துவருகிறது. இதில் சம்பத்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர். திருநெல்வேலி முன்னாள் மதிமுக மாவட்டசெயலாளர் மதிப்பிற்குரிய பெரியவர் திரு.லெக்குமணன் அவர்கள் கால் நடக்க கூட முடியாத நிலையிலும் நிகழ்வில் கலந்துகொண்டு தலைவர் மற்றும் இரத மதிமுகவினரை பெருமைப்பட வைத்தார். அவருக்கு தலைவர் வைகோ அவர்கள் தகுந்த மரியாதையோடு சால்வை அணிவித்து நன்றியை தெரிவித்தார். தலைவரின் வீர உரை நடந்துகொண்டிருக்கிறது. இதில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கருஞ்சிருத்தை வழக்கறிஞர் அண்ணன் ஜோயல் அவர்கள், இமயம் ஜெபராஜ் அவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் கழக உடன்பிறப்புகளும் கலந்துகொண்டனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

பிரான்ஸ் வெள்ளை தமிழச்சிக்கு வீர வணக்கம்!

புலம்பெயர் தமிழீழ மக்களால் வெள்ளைத் தமிழச்சி என்று அழைக்கப்பட்ட அன்னை போலா (Paula Luigini Violetta) அவர்களுக்கு ஓமன் மதிமுக இணையதள அணியின் கண்ணீர் வணக்கங்கள்!...
பிரான்சை வதிவிடமாகக் கொண்ட அம்மணி போலா லூயி வியோலெத் அவர்கள் இயற்கை எய்தியது எம்மைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 2009 இல் தமிழ் இனம் பேரழிவைச் சந்தித்துக் கொண்டிருந்த போது எம்மால் நடாத்தப்பட்ட இரவு-பகல் போராட்டத்தில் இணைந்து கொண்டவர். அன்றில் இருந்து பிரான்சில் எமதுபோராட்டம் எங்கு நடந்தாலும் எம்மை விட முதல் ஆளாக அந்த போராட்டத்தில் நின்று எம்மை வரவேற்கும் ஆளாகவே செயற்பட்டவர். தள்ளாத வயதிலும் எமது உரிமை மறுக்கப்பட்டமையை எண்ணி எண்ணி மிகவும் உணர்வுக்குட்பட்டவராக இருந்தார்.

எமது தேசியத் தலைவரையும், தேசியக் கொடியையும், தமிழீழ விடுதலையையும் நேசித்த ஒரு வெள்ளைத் தமழிச்சி என்றால் மிகையாகாது நாங்கள் எங்கு போராட்டத்திற்கு சென்றாலும் அதனை கேள்வியுற்று அது ஜெனிவாவாக அல்லது பெல்ஜியமாக இருக்கட்டும் உடனே அறிந்து எம்மைத் தொடர்பு கொண்டு எம்மோடு வந்து விடுவார் தமிழர்களாகிய நாம் தயங்கிய வேளையிலும் எமது நிலை புரிந்து முன்னின்று துணிவைத் தரும் தாயாகச் செயற்பட்டவர் எமக்கு அவரது செயற்பாடுகள் வியப்பைத் தரும் பிரான்சு மண் எப்படி விடுதலை பெற்றது என்பதை எமது மகளீர்களுடன் அடிக்கடி கூறி நீங்களும் தயங்காது போராடுங்கள் உங்களுக்கான நீதி கிடைக்குமென்று அடித்துக் கூறுவார் அவர் இன்று எம்மோடு இல்லை, ஆம்! இவ்விடத்தில் நினைவு கூறுகிறோம் இனி எமக்கு இப்படி ஒரு தாயாக வந்து ஆறுதல் கூறுவார் யார்?.....
அம்மணி நீங்கள் எங்களுக்காக ஓடி ஓடி வருவீர்கள் எங்கள் துன்பத்தில் துணை நின்றீர்கள் இன்று எம்மை துயரத்தில் ஆழ்த்திவிட்டு மீளாத்துயில் கொண்டுள்ளீர்கள்.

எம்மோடு போராட்டத்தில் அருகில் நின்று எமது தேசியக் கொடியை ஏந்தி நிற்கும் வெள்ளைத் தமிழிச்சி இல்லையாகிவிட்டது ஆனால் எமது நினைவுகளிலும், புலம்பெயர் மண் போராட்ட வரலாற்றிலும் உங்களுக்கான இடம் என்றும் உண்டு. எமது வீரவணக்கத்தை தமிழ் மக்களோடு இணைந்து நாமும் தெரிவித்துக் கொள்கிறோம்.

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

மதிமுக இணையதள அணி - ஓமன்

Friday, April 3, 2015

பெருங்காமநல்லூரில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வைகோ அஞ்சலி!

குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து பெருங்காமநல்லூரில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அவர்களின் நினைவிடத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்கள் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார். இதில் மதுரை புறநகர் மாவட்ட ம.தி.மு.க செயலாளர் மருத்துவர் சரவணன் அவர்கள் மற்றும் கழக முன்னோடிகள் கலந்துகொண்டனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

மதிமுக பிரமுகர் இல்ல திருமணம், வைகோ தலமை!

புளியங்குடி மதிமுக பிரமுகரின் இல்ல திருமண விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் தலைவர் வைகோ கலந்துகொண்டு தலமைதாங்கி மணமக்களுக்கு மாலை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் மணமக்கள் கலைமணி, ராமலட்சுமணன் ஆகிய புது தம்பதியரை வாழ்த்தி பேசினார். 

ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாகவும் மணமக்கள், பல்லாண்டு காலம் எல்லா செல்வங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

Thursday, April 2, 2015

தென் மாவட்டங்களை 2 நாள் மையங்கொள்ளும் புரட்சி புயல் !

03-04-2015 காலை 9 மணிக்கு புளியங்குடியில் கழக தோழரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வழ்த்துகிறார். அன்று மாலை 4 மணிக்கு பெருங்காமநல்லூரில் தியாகிகள் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்துகிறார். 

அடுத்த நாள் 04.03.2015 மாலை 3 மணி அளவில் திருநெல்வேலியில் உள்ள ஹோட்டல் சகுந்தலாவில், திருநெல்வேலி புறநகர், திருநெல்வேலி மாநகர், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நடக்கிறது. இதில் முக்கிய தீர்மானங்களின் முன்னோட்டங்கள் கலந்துரையாடப்படும். பின்னர் மாலை 6 மணிக்கு சங்கரன் கோவிலில் முப்பெரும் விழா நிகழ்வில் கலந்துகொண்டு அண்ணன் அருணகிரி அவர்களின் புத்தகங்களை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார் மக்கள் தலைவர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

மதிமுக இணையதள அணி - ஓமன்

முதல்வரைச் சந்திக்க விவசாயிகளுக்கு தடை நியாயமல்ல-வைகோ!

தேசிய, தென்னக நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநிலத் தலைவர் வழக்கறிஞர் திருச்சி அய்யாகண்ணு தலைமையில், விவசாயிகள் பல்வேறு கோரிக்கைளை முன் வைத்துதொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் வாங்கிய அனைத்துப் பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்; வறட்சியால் அழிந்துவிட்ட விவசாயப் பயிர்களுக்கு உரிய நட்ட ஈடு வழங்க வேண்டும்; 60 வயதான அனைத்து விவசாயிகளுக்கும் ஓய்ñதியம் வழங்க வேண்டும்; நதிகள் இணைப்பை செயல்படுத்த வேண்டும்; நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் ஆகிய 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து திருச்சியில் விவசாயிகள் இரு வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த மார்ச் 26 ஆம் தேதி திருச்சியில் இருந்து புறப்பட்டு, சென்னையில் முதல்வரைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க திட்டமிட்டிருந்த விவசாயிகளை திருச்சியிலேயே காவல்துரை தடுத்து நிறுத்தியது. பின்னர் அவர்கள் ஊர்வலமாகச் சென்று திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

மார்ச் 31 ஆம் தேதி சென்னைக்கு வந்த விவசாயிகள், முதல்வரைச் சந்திக்க அனுமதிக்கப்படாமல் கைது செய்யப்பட்டனர். ஏப்ரல் 1 ஆம் தேதி விவசாயிகள் மெரினா கடற்கரையில் இறங்கி போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வரும் தேசிய, தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் திருச்சி அய்யாகண்ணு உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் முதல்வரைச் சந்திக்கவிடாமல் காவல்துறை முட்டுக்கட்டை போடுவதும், கைது செய்து திருப்பி அனுப்புவதும் வேதனை தருகிறது.

தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்த கரும்பு கொள்முதல் விலையை வழங்காமல், சர்க்கரை ஆலைகள் விவசாயிகளை அலைக்கழித்து வருகின்றன. இதுகுறித்து தமிழக அரசு இதுவரை எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்று ரூபாய்3500, நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 3000 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு, நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளை முற்றிலும் புறக்கணித்துவிட்டது. இந்நிலையில், முதல்வரைச் சந்தித்து விவசாயிகள் தங்கள் கோரிக்கையை எடுத்துரைக்கவும் தடைபோடுவது சரியல்ல. எனவே தமிழக அரசு திருச்சியில் இருந்து சென்னை வந்து போராட்டம் நடத்தும் விவசாய சங்கத்தினரை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

Wednesday, April 1, 2015

திமுக முடக்கம்,ஜெயா வீட்டுச்சிறை,மிஞ்சியது போராளி வைகோ!

ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல் முறையீடு வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திமுக வின் சன் டிவி யின் ரூ742 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இதனை அமலாக்க பிரிவு அமல்படுத்தியுள்ளது.

திமுக, அதிமுக அரசுகள் தமிழ் நாட்டை அரை நூற்றாண்டுகளாக ஆண்டு இப்போது ஜெயில் வாசனையை நுகர ஆரம்பித்துள்ளனர். இவர்களின் மெகா ஊழல் தான் இவற்றிற்கு முக்கிய காரணமாகும்.

திமுக, அதிமுகவை விட்டால், எஞ்சி இருப்பதோ தலைவர் வைகோ மட்டுமே.... ஒரு சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் கூட இல்லை. ஆனால் மக்கள் பிரச்சினைகளை எப்போதும் போராடி பெற்று கொடுக்கிறார் மக்கள் முதல்வர் வைகோ.

மக்களே சிந்தியுங்கள். இனிமேலாவது கொஞ்சம் விழித்துகொள்ளுங்கள். வருகிற சட்டமன்ற தேர்தலில், தலைவர் வைகோ அவர்களை தமிழகத்தின் முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தால், மதுவில்லா தமிழகம் கிடைக்கும். குடிநீர் இலவசமாக வினியோகிக்கப்படும். ஊழல் இல்லா தமிழகமாக மாறும், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும், தமிழினம் தழைக்கும். தமிழ் புத்துயிர் பெறும். தொழில் வளம் பெருகும். வருங்கால தலைமுறை பாதுகாக்கப்படும்.

"நன்றியோடு செயல்படுங்கள், வெற்றியோடு குதூகலிக்கலாம்"

மதிமுக இணையதள அணி - ஓமன்