புலம்பெயர் தமிழீழ மக்களால் வெள்ளைத் தமிழச்சி என்று அழைக்கப்பட்ட அன்னை போலா (Paula Luigini Violetta) அவர்களுக்கு ஓமன் மதிமுக இணையதள அணியின் கண்ணீர் வணக்கங்கள்!...
பிரான்சை வதிவிடமாகக் கொண்ட அம்மணி போலா லூயி வியோலெத் அவர்கள் இயற்கை எய்தியது எம்மைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 2009 இல் தமிழ் இனம் பேரழிவைச் சந்தித்துக் கொண்டிருந்த போது எம்மால் நடாத்தப்பட்ட இரவு-பகல் போராட்டத்தில் இணைந்து கொண்டவர். அன்றில் இருந்து பிரான்சில் எமதுபோராட்டம் எங்கு நடந்தாலும் எம்மை விட முதல் ஆளாக அந்த போராட்டத்தில் நின்று எம்மை வரவேற்கும் ஆளாகவே செயற்பட்டவர். தள்ளாத வயதிலும் எமது உரிமை மறுக்கப்பட்டமையை எண்ணி எண்ணி மிகவும் உணர்வுக்குட்பட்டவராக இருந்தார்.
எமது தேசியத் தலைவரையும், தேசியக் கொடியையும், தமிழீழ விடுதலையையும் நேசித்த ஒரு வெள்ளைத் தமழிச்சி என்றால் மிகையாகாது நாங்கள் எங்கு போராட்டத்திற்கு சென்றாலும் அதனை கேள்வியுற்று அது ஜெனிவாவாக அல்லது பெல்ஜியமாக இருக்கட்டும் உடனே அறிந்து எம்மைத் தொடர்பு கொண்டு எம்மோடு வந்து விடுவார் தமிழர்களாகிய நாம் தயங்கிய வேளையிலும் எமது நிலை புரிந்து முன்னின்று துணிவைத் தரும் தாயாகச் செயற்பட்டவர் எமக்கு அவரது செயற்பாடுகள் வியப்பைத் தரும் பிரான்சு மண் எப்படி விடுதலை பெற்றது என்பதை எமது மகளீர்களுடன் அடிக்கடி கூறி நீங்களும் தயங்காது போராடுங்கள் உங்களுக்கான நீதி கிடைக்குமென்று அடித்துக் கூறுவார் அவர் இன்று எம்மோடு இல்லை, ஆம்! இவ்விடத்தில் நினைவு கூறுகிறோம் இனி எமக்கு இப்படி ஒரு தாயாக வந்து ஆறுதல் கூறுவார் யார்?.....
அம்மணி நீங்கள் எங்களுக்காக ஓடி ஓடி வருவீர்கள் எங்கள் துன்பத்தில் துணை நின்றீர்கள் இன்று எம்மை துயரத்தில் ஆழ்த்திவிட்டு மீளாத்துயில் கொண்டுள்ளீர்கள்.
எம்மோடு போராட்டத்தில் அருகில் நின்று எமது தேசியக் கொடியை ஏந்தி நிற்கும் வெள்ளைத் தமிழிச்சி இல்லையாகிவிட்டது ஆனால் எமது நினைவுகளிலும், புலம்பெயர் மண் போராட்ட வரலாற்றிலும் உங்களுக்கான இடம் என்றும் உண்டு. எமது வீரவணக்கத்தை தமிழ் மக்களோடு இணைந்து நாமும் தெரிவித்துக் கொள்கிறோம்.
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment