மதிமுக தொழிற் சங்கத்தின் (MLF) துணைப் பொதுச் செயலாளர் தா.சுப்பிரமணியம் அவர்கள் உடல் நல குறைவால் நேற்று காலமானார். அன்னாரது இறுதி ஊர்வலமும் இரங்கல் கூட்டமும் மதிமுக கொடி தாங்கி கழக மரியாதையுடன் இன்று காலை 9.00மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்துள்ள, சுசீந்திரத்தில் வைத்து நடைபெற்றது.
இறுதி ஊர்வலத்தில் கன்னியாகுமரி மாவட்ட மதிமுக செயலாளர் அருமை அண்ணன் தில்லை செல்வம் கலந்துகொண்டு தா.சுப்பிரமணியம் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். மதிமுக கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment