மறுமலர்ச்சி திமு கழகத்தின் தலைவர் வைகோ அவர்கள் தமிழகத்தை அதன் வாழ்வாதாரத்தை காக்க எங்கெல்லாம் போராடுகிறாரோ, அங்கெல்லாம் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டு போராட்டகளத்திலே போர் புரியும் எங்கள் ஆருயிர் சகோதரர், இணையத்தளத்தில் கழகத்தின் நிகழ்வுகளை அதன் செயல்பாடுகளை தான் கலந்துகொள்ளும் நேரங்களிலெல்லாம், ஏவுகணையின் வேகத்தில் உடனுக்குடன் ஈட்டியை போன்ற கூர்மையான செய்திகளை பதிவேற்றம் செய்து கழகத்தை உலகறிய செய்யவும், இணையத்தில் எதிரிகளின் முரண்பாடான தலைவர் வைகோ பற்றிய கேள்விகளுக்கு தகுந்த விளக்கத்தோடு பதிலளிக்கும் இணையத்தின் போர்வாள் களஞ்சியம், ஆருயிர் அண்ணன் மானாமதுரை மதிமுக மருது அவர்களுக்கு, ஓமன் இணையதள அணி சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
மதிமுக ஒன்றிய கழக செயலாளராக இருந்த இவர் மதிமுகவின் பைந்தமிழ் புலவர் செவந்தியப்பன் பட்டறையிலே வார்ப்பிக்கப்பட்ட இலக்கிய பேழை. மக்கள் பணத்தை சுரண்டி சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களுக்கு மத்தியில், தன் சொந்த காசை செலவழித்து தமிழகத்தை காக்க போராடும் மக்களின் பெருமதிப்பிற்குரிய தலைவர் வைகோவின் போர் படையின் உத்வேகத்தின் உச்சம். அண்ணன் மருது அவர்கள் ஆற்றுகின்ற கழகப்பணிகள் தலைவரின் பார்வையில் எப்போதும் நிழலாடிக்கொண்டிருக்கின்றன.
கழகத்தின் அனைத்து கண்மணிகளிடத்திலும் அன்புள்ளவராக திகழுகின்ற சகோதரர், தனது அயராத கழகத்திற்கான உழைப்பால், கழகத்திலே பல பதவிகளை அலங்கரிக்கவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment