தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள், தமிழ்நாட்டின் பிரச்சனைகளான, மேகதாது அணையை கர்நாடகா காவிரி க்கு நடுவே கட்டுவதை எதிர்த்தும், செம்மரக்கட்டைகளை கடத்தினார்கள் என ஆந்திர போலீசார் 20 அப்பாவி தமிழ் கூலி தொழிலாளர்களை படுகொலை செய்ததை கண்டித்தும், விவசாய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்தும், தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு குறித்தும், முல்லை பெரியார் பிரச்சினை குறித்தும் எதிர்க்ட்சி தலைவர் என்ற முறையில் அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி, அவரது தலைமையில், தமிழகத்தின் அனைத்து கட்சி தலைவர்களோடு நாளை இந்திய பிரதமர் அவர்களை சந்திக்கிறார்.
மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்திற்கு இன்று மாலை 4 மணி அளவில் வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களை மதிமுக பொதுசெயலாளர் தலைவர் வைகோ இன்முகத்தோடு பொன்னடை போர்த்தி வரவேற்றார். பின்னர் தமிழக பிரச்சினைகளை பற்றி விரிவாக விவாதித்தனர்.
மதிமுக தலைவர் அவர்கள் நாளை நடைபெறுகின்ற 20 தமிழர்களின் நீதி பேரணியின் மூலம் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் கலந்துகொள்ளவிருப்பதால், மதிமுகவின் சார்பில் அதன் பிரதிநிதியாக, மதிமுக ஆட்சிமன்ற குழு உறுப்பினர் தியாகவேங்கை திரு.கணேசமூர்த்தி கலந்துகொள்வார் என அறிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில், மதிமுக துணை பொதுசெயலாளர் மல்லை சத்யா மற்றும் மதிமுக முக்கிய நிர்வாகிகளும், தேமுதிகவின் திரு.LK.சுதீஸ் மற்றும் தேமுதிக முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment