20 தமிழர்களின் நீதிப்பேரணிக்காக மாணவர்கள் ஏந்தி வந்த சுடர், மதிமுக தலைவர் வைகோ அவர்களிடம் வழங்கப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்தில், பண்ருட்டி வேல்முருகன், வைகோ, சிவகாமி.இ.ஆ.ப, ஜாண்பாண்டியன், இடது கம்யூனிஸ்ட் தலைவர் வீரபாண்டியன் மற்றும் பல தலைவர்கள் உரையாற்றினர். அதில் உரையாற்றிய திருமாவளவன், மோடியுடன் நடத்திய பேச்சு வார்த்தை திருப்தி இல்லை என கூறினார். மேலும் 20 பேர் படுகொலை வழக்கில் முதல்வருக்கு,அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் என வேண்டுகோள் வைத்ததோடு, விடுதலை சிறுத்தைகள் இதுதொடர்பாக தொடர்ந்த வழக்கின் நிலை அறிந்து தலைவர் வைகோ அவர்கள் தானாகவே முன் வந்து இந்த வழக்கில் திரு .ராம் ஜெத்மலானி அவர்களை ஆஜராக கேட்டு கொண்டதையும் சுட்டிக்காட்டினார்.
மதிமுக தலைவர் வைகோ பேசும்போது ஆந்திர மந்திரி நாவை அடக்கி பேச வேண்டும்.,மனிதாபமற்ற ஆந்திர அரசு, இந்தியா எங்களுக்கு தேவையா என்ற கேள்வி கூடியிருக்கும் இந்த இளைஞர்கள் மத்தியில் எழும்... காக்கை குருவியை விட தமிழன் கேவலமா, ஆந்திராவில் நடத்தப்பட்டது தமிழர்கள் மீதான திட்டமிட்ட என்கவுண்டர் என்றும் சாடினார்.
பின்னர் இவ்வளவு பிரமாண்டமான எழுச்சி மிகு பேரணியை நடத்த ஒருங்கிணைத்த தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment