திருப்பூர் மாவட்ட மதிமுக இணையதள நண்பர்களின் கலந்தாய்வு கூட்டம் இன்று மிகச்சிறப்பாக
நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் என் மனம்நிறைந்த வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கிறேன். இதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. அனைத்து போரட்டங்களுக்கும் இணைதள நண்பர்கள் தவறாமல் கலந்து கொள்ளுதல்.
2. அதிகளவில் வாழ்நாள் உறுப்பினர்கள்
மற்றும் சங்கொலி சந்தா சேர்த்தல்.
3. இணையதள நண்பர்களின்
சார்பாக நமது தலைவரின் போராட்டத்தை கல்லூரி மாணவர்க்கு துண்டறிக்கை மூலம் தெரியபடுத்துதல்.
4. இக்கூட்டத்தை இன்னும்
வலுபடுத்த அதிகளவில் இணையதள நண்பர்களை சேர்த்தல்.
5. இக்கூட்டம் அடுத்தடுத்த
நகரங்களில் நடத்தி அங்குள்ள நண்பர்களை ஒருங்கிணைத்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இப்படிபட்ட பெரும் முயற்சி மேற்கொள்ளும் திருப்பூர் இணையதள அணிக்கு, ஓமன் மதிமுக இணையதள அணியின் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்து கொள்கிறோம்.
மதிமுக அனைத்து இணையதள அணிகளும் இப்படிபட்ட போராட்டங்களை முன்னெடுத்து தலைவர் வைகோவை வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வைத்து 2016 ல் தமிழக முதல்வராக்க தன்முனைப்பில்லாமல் கழகப் பணியாற்ற வேண்டுமென்று கேட்டுகொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment