இஸ்லாம் மசூதிகள் தொழுகை நடத்துகின்ற தலங்கள் அல்ல, அவை வெறும் கட்டிடம் மட்டுமே என பாரத தேசத்தின் இறையாண்மையை சீர்குலைக்கும் கருத்தை கூறியிருந்த சு.சுவாமி க்கு கடுமையான கண்டனத்தை ஓமன் மதிமுக இணையதள அணியின், வைகோ வெறியர், பாசத்திற்குரிய சகோதரர் திரு.ஜகுபர் அலி அவர்கள் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்கள். அப்போதும் அவர்கள் பதிவேற்றம் செய்த அந்த கண்டன பதிவிற்காகவும் மிரட்டல் வந்தது. அதை அவரும், நாங்களும் அசட்டை செய்யவில்லை. தெருவோரம் அலையும் ஜந்துக்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை என நினைத்து பணிகளை தொடர்ந்தோம்.
ஆனால் இன்றும் சகோதரர் திரு.ஜகுபர் அலி அவர்கள், "6000 புலிகளுடன் பயிர்ச்சி... அடுத்த கட்ட போருக்கு தயாராகிறார் மாவீரன் பிரபாகரன்" என்னும் புகைப்படத்தை, தலைவர் வைகோ அவர்கள், மதிமுக தொண்டபடையுடன் அணிவகுக்கும் புகைப்படத்தையும், இணைத்து முகநூலில் பதிவிட்டிருந்தார்கள்.
இன்றும் இனந்தெரியாத நபர் இணையதளத்தில் இருந்து சகோதரரின் அலைபேசிக்கு 444 என்ற இலக்கத்திலிருந்து அழைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சகோதரர் அவர்கள் வைகோவின் வார்ப்பல்லவா, சுகத்தை சுவைக்காமல், துக்கங்களையே சுமந்ததினால், மனந்தளராமல், தைரியமாக அழைத்த இனந்தெரியாத நபரிடம் உன் அலைபேசி இலக்கத்தில் இருந்து அழை. நான் நேரில் வருகிறேன் அப்போது என்ன வேண்டுமென்றாலும் பார்க்கலாம் என்று கூறியுள்ளார். பின்னர் அந்த நபர், உன் மனைவி பிள்ளைகள் எங்கே, எப்படி இருக்கிறார்கள் என தெரியும் என சரியாக அவர்கள் இருக்கும் இடத்தை தெரிவித்துள்ளார். அப்படியென்றால் அந்த இனந்தெரியாத நபர் சகோதரர் அவர்களை கவனிக்கும், நன்கு தெரிந்த ஆளாகத்தான் இருப்பார். இப்படிபட்ட அழைப்பு விடுத்த அந்த நபருக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதோடு, இதுபோன்ற வேலைகளில் தொடர்ந்து ஈடுபடகூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கிறோம்.
இதுபோன்ற நபர்கள் நம்மை ஏதும் செய்ய திராணியில்லாத காரணத்தினால், நமது கட்சியினரை சிறு மனக்குழப்பத்தில் தள்ளிவிட பார்க்கின்றனர். அதற்கெல்லாம் நாம் சழைத்தவர்கள் அல்லர் என்பதை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தலைவர் வைகோ அவர்களை முதல்வர் அரியணையில் அமர வைத்து எதிரிகளுக்கு சாட்டையடி கொடுப்போம்.
"முன்னேறி செல்வோம், அதிகாரத்தை கைப்பற்றுவோம்"
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment