நாகர்கோயில் மாவட்ட ஆட்சியர் அருகில் அமைந்திருக்கும் டதி ஸ்கூல் சந்திப்பிலிருந்து பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி செல்லும் சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டதை கண்டித்து மண் அள்ளி போடும் போராட்டத்தை முன்னெடுக்க மதிமுக நகர பொறியாளரணியுடன் இணைந்து நகர கழகம் தீர்மானித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவசர அவசரமாக சாலையை பழுதுபார்க்கும் பணியை நகராட்சி இன்று செய்து வருகிறது குறிப்பிடதக்கது.
ஆனால் மக்களின் கோரிக்கையோ, முழுமையாக சாலையை செப்பனிட வேண்டும் என்பது தான். எனவே, நாகர்கோயில் நகராட்சி நிர்வாகம் முழுமையாக இந்த பாலஸ் சாலையை செப்பனிட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வழிவகை செய்யவேண்டுமென ஓமன் இணையதள அணி சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment