மறுமலர்ச்சி திமு கழகத்தின் தலைமை கழக பேச்சாளர், கோவை மாவட்ட வழக்கறிஞர் அணியின் துணை அமைப்பாளர், மதிமுக இணையயதள அணி முகநூல் குழுவின் ஒருங்கிணைப்பாளர், வைகோ என்ற புரட்சி புயலின் வாயிலிருந்து விழும் வார்த்தைகளை பொக்கிசம் போல சேர்த்து வைத்து பொதுமக்களிடத்தில் பகிரும் பகுத்தறிவாளர், அணையின் மதகுகள் திறக்கபடும்போது பாய்ந்து வரும் தண்ணீரை போல மதிமுகவின் கொள்கைகளை பரப்பும் பட்டிமன்றங்களிலே தனது அறிவு செல்வங்களை பாய்த்து எதிரணியினரை திக்குமுக்காட வைப்பதில் வல்லவர், ஓய்வில்லா பணிச் சுமைக்கிடையிலும் தனது நேரத்தை விளையாட்டிலும் செலவிடும் மட்டை பந்து விளையாட்டின் சிறந்த தடுப்பாளர் என பல்வேறு கோணங்கள் கொண்ட அண்ணன் சிவஞானம் அவர்கள், அன்பிற்கு அடிமையாயும், நட்பிற்கு இலக்கணமாகவும், பழகுவதற்கு பாலைபோலவும், மதிமுகவின் பண்பிற்குரிய தொண்டர்களை ஒருங்கிணைப்பதற்கு ஊன்றுகோலாகவும் விளங்குகிறார்.
அன்புக்குரிய சகோதரருக்கு அலைப்பேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தபோது, அவர் அடைந்த ஆனந்தம் இப்போதும் நினைக்க மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையாரை போன்று முகம் பாராமல் நட்பு பாராட்டியது, அதுவும் நொடிக்கொருமுறை நண்பா என அழைத்து வைகோ என்ற பெயரால் இணைந்த நட்பிற்கு பெருமை சேர்த்தது, அண்ணனை புகழின் உச்சத்திற்கே வழி காட்டியது. சகோதரர் அவர்கள் கழகத்திற்காக உழைக்கும் ஒவ்வொரு நொடியும் தலைவர் வைகோ 2016 ல் முதலமைச்சர் ஆகவேண்டுமென்றே!... அந்த வெற்றியை எப்படி சாத்தியபடுத்துவது என்றும் ஆதங்கப் பட்டது, நம் கழகத்தினர் ஒற்றுமையின் உச்சத்திற்கு சென்று பாடுபடவேண்டுமென்பதையே உணர்த்தியது... எனவே கழக நண்பர்கள் அண்ணனின் பிறந்த நாளில் கழகப்பணிகளை வேகமாக முன்னெடுக்க உறுதி ஏற்போம்.
கழகப்பணிகளை சிறப்புடன் செய்துகொண்டிருக்கும் வழக்கறிஞர் அண்ணன் சிவஞானம் அவர்கள் கழகத்தில் மேலும் பல உயர் நிலைகளை அடைய ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்க் கொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment