Saturday, April 11, 2015

இனந்தெரியாத நபருக்கான ஐந்தறிவின் வெளிப்பாடு!

மதிமுக இணையதள அணியின் ஒருங்கிணைப்பளர்களே, நண்பர்களே வணக்கம்.

மறுமலர்ச்சி திமு கழகத்தின் நீண்டநாள் போராளி பெருமதிப்பிற்குரிய சகோதரர் துவார் பொன் சுப்பையா அவர்கள் சங்கொலி வார இதழ் குழுவில், ஆந்திர போலீசார் 20 அப்பாவி தமிழர்களான கூலித்தொழிலாளர்களின் மீது நடத்திய  கோரக் கொலையை கண்டித்து, தலைவர் வைகோ அவர்கள் நடத்திய சித்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தை, முகநூலில் பதிவிட்டதற்கு கோவில்பட்டியை சேர்ந்த சாந்தகுமார் என்னும் நபர் comment பகுதியில் புரட்சி புயல் வைகோ அவர்களை நாகரீகம் இல்லாமல் எழுதி இருந்தார். 
இதற்கு சிங்கப்பூர் இணையதள வேங்கை அண்ணன் துவார் பொன் சுப்பையா அவர்கள், தலைவர் வகோ அவர்களை நாகரீகமில்லாமல் பதிவிட்டிருந்ததை கண்டித்து பின்னூட்டம் எழுதி இருந்தார். இதற்கு பின்னூட்டம் கொடுக்க திராணியில்லாத சாந்தகுமார், அண்ணன் துவார் பொன் சுப்பையா அவர்களின் தனிச்செய்தியில் தகாத வார்த்தைகளால் ஐந்தறிவு படைத்த ஜீவன்களின் அறிவை ஒத்த அறிவில் வசைபாடியுள்ளார். இருந்தாலும் அண்ணன் சுப்பையா தலைவர் வைகோவின் சொற்களை நினைவில் கொண்டு நிதானத்தை கடைபிடித்துள்ளார். 

ஆனால் சாந்த குமாரோ திரும்ப திரும்ப தகாத வார்த்தைகளால் குடும்பத்திலுள்ளவர்களை திட்டி தனது அறிவின்மையை வெளிப்படுத்தியுள்ளார். இதை ஓமன் மதிமுக இணையதள அணி வன்மையாக கண்டிப்பதோடு இதுபோன்ற தீண்ட செயல்களில் மேலும் சாந்தகுமார் ஈடுபடகூடாது எனவும், அப்படி மேலும் மேலும் ஈடுபட்டால், அவர் மீது இணையதள குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்கிறது.

இந்த சம்பவத்தால் அண்ணன் சிறிது சோர்வடைந்தாலும் வைகோவின் வார்ப்புகள் வாழ்க்கையில் சுகத்தை காணாமல் துக்கத்தையே அனுபவித்து பழக்கப்பட்டதாலும், நாங்களும் கொடுத்த சிறு ஆறுதலும் அவர்களுக்கு சிறிது புத்துணர்ச்சியை கொடுத்தது. 

இந்த சாந்தகுமார் ஓமன் நாட்டிலே பணிபுரிகிறார் என்பதை அவரின் முகநூல் கணக்கை வைத்து தெரிந்துகொண்டோம். அவரின் முகநூல் (https://www.facebook.com/santha.kumar.39948) கணக்கு இணைக்கப்பட்டுள்ளது. 
  
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment