தமிழக கூலித்தொழிலாளர்கள் 20 பேரை சுட்டுக்கொன்ற ஆந்திர அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, சித்தூரை நோக்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட மதிமுக தலைவர் வைகோ தலைமையில் அதன் மேல் மட்ட தலைவர்கள், தொண்டர் படையினர், கழக கண்மணிகள், பொதுமக்கள் என புறப்பட்டு சென்றனர். சித்தூர் சாலை ஸ்தம்பிக்கும் நிலையில் கழக தொண்டர்கள் முற்றுகையில் ஈடுபட வீரநடைபோட்டுகொண்டிருந்தனர். அப்போது தமிழக காவல்துறை குறுக்கிட்டது. தலைவர் வைகோவை கைது செய்கிறோம் என கூறி கைது செய்தது. அவருடன் முற்றுகையில் ஈடுபட்டிருந்த மதிமுக மதிமுக அவை தலைவர் திருப்பூர் துரைசாமி, துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாநில மாணவரணி அமைப்பாளர் அண்ணன் இராஜேந்திரன், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மருத்துவர் சரவணன், சகோதரர் வைகோ கார்த்திக், சகோதரர் மானாமதுரை மதிமுக மருது, அருமை தம்பி ஜெய பிரசாந்த் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினர், பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு ஒரு திருமணமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர். அப்போது தமிழக காவல்துறை மிகுந்த கட்டுப்பாட்டோடு இருந்தாலும் தலைவரிடத்தில் கனிவோடு நடந்துகொண்டமையை காண முடிந்தது.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment