சிவகங்கைக்கு இமையம் தொலைக்காட்சி நிறுவனம் தொடங்க உள்ள புதிய தமிழ் நாளிதழ் வருட சந்தா சேகரிப்பு கூட்டத்திற்காக 23/04/2015/ இன்று காலை செல்லும் வழியில் மதிமுக தலைவர் வைகோ இவ்வழியாக வருகிறார் என அறிந்த விவசாயிகள் பூவந்தியில் திரளானோர் கலந்துகொண்டு பொன்னாடை போர்த்தி வரவேற்பு கொடுத்தது தலைவருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர் புறப்பட்ட புரட்சி புயல் காலை 10 மணிக்கு சிவகங்கையில் மையம் கொண்டது. அப்போது தலைவரை வரவேற்க கழகத்தினர் பூத்து குலுங்கும் புத்தம் புதிய ரோஜா மலர் மாலையுடன் காத்திருந்து வரவேற்றது, தலைவரை மேலும் உற்சாகப்படுத்தியது. இந்த சந்தா சேர்ப்பு நிகழ்வானது சிவகங்கை மாவட்டக்கழக செயலாளர், அரசியல் ஆலோசனைக்குழு செயலாளர் பைந்தமிழ் புலவர் சே.செவந்தியப்பன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய மதிமுக பொதுசெயலாளர் தலைவர் வைகோ அவர்கள், சோதனை நிகழும் காலம் எல்லாம் எனக்கு தோளோடு தோள் நின்ற மாவட்டம் சிவகங்கை மாவட்டம். மீத்தேன் திட்டத்தை தடுத்து நிறுத்த விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட பிறகு இப்பொழுதுதான் வருகிறேன் என சிவகங்கை மாவட்டத்தில் தலைவர் வைகோ உரையாற்றினார்.
இதில் ஏராளமான மதிமுக தொண்டர்கள், கழக உறுப்பினர்கள், மாநில, மாவட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களென ஏராளமானோர் கலந்துகொண்டு சந்தாவை தலைவரிடத்தில் செலுத்தினர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment