தலைவர் வைகோவின் எண்ண ஓட்டங்களை சிறுவயது முதலே சிந்திக்கும், அவரின் செயல்களை உற்று கவனித்துக்கொண்டிருக்கும், அரசியல் வாழ்வில் தலைவருக்கு எத்தனை தோல்விகள் வந்து சேர்ந்தாலும் தொண்டனாக தலைவரின் மேலுள்ள தீராத நம்பிக்கையால் மறுமலர்ச்சி திமு கழகத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் களமாடுகின்ற என் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் என் வகுப்பு தோழன், கைப்பந்து விளையாட்டிலே எனது அணி தோழன், என் எண்ணமெல்லாம் தலைவர் பக்கம் இருந்தாலும், பொதுவாகவே கட்சி சாராமல் பணி செய்தவனை, மறுமலர்ச்சி பாசறையிலே தனது வீரியமிக்க பேச்சால் தலைவரின் கருத்துகளை எப்போதுமே எடுத்து கூறி என்னையும் மறுமலர்ச்சி திமு கழகத்திலே கழப்பணியாற்ற வைப்பதற்கு காரணமாயிருந்தவர்களில் ஒருவனுமான ஆருயிர் தோழன் சேவியர் அவர்களுக்கு ஓமன் இணையதள அணி சார்பில் மனமொத்த பிறந்தநாள் வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பனின் நினைப்பெல்லாம் கழகத்தின் மீதான தீராத காதலால் நிரம்பி வழிகின்றன. வற்றாத நதியாக பெருக்கெடுத்து ஓடட்டும். நண்பன் பல்லாண்டு காலம் வாழட்டும், கழகப்பணிகளை செவ்வனே செய்யட்டும், கழக தூண்களில் வலுப்பெறும் தூணாய் மாறட்டும்.உழைத்து பல உயர் நிலைகளை அடைய வாழ்த்துக்களை கூறிகொள்கிறோம்,
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment