சென்னை, ராஜாஜி சாலை, துறைமுகம் அருகில் உள்ள சட்ட மாமேதை பாபாசாகேப் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் திருஉருவச் சிலைக்கு, அவர்களின் பிறந்தநாளையொட்டி, 14.04.2015 செவ்வாய் கிழமை இன்று மறுமலர்ச்சி திமு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த மதிமுகவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இதனால் தலைவரின் வருகைக்காக கழக தொண்டர்கள் மதிமுக கொடிகளுடன் வரவேற்பளிக்க உற்சாகத்தோடு காத்திருந்தனர். அப்போது தலைவர் வைகோ, மதிமுக துனைப்பொது செயலாளர் அண்ணன் மல்லை சத்யா அவர்களும், இமயம் ஜெபராஜ் அவர்கள், மகளிரணி செயலாளர் குமரி விஜயகுமார் அவர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய பிற நிர்வாகிகளும் வருகை புரிந்தனர். பின்னர் தலைவர் வைகோ அவர்கள் அண்ணலின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரின் திரு உருவ படத்திற்கு மாலை வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி விட்டு அண்ணலின் வாழ்க கோசங்களை எழுப்பினார். தொண்டர்களும் அதையே செய்தனர்.
தொடர்ந்து கழகத்தின் முன்னணி தலைவர்களும், தோழர் திருப்பதி சாய் அவர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அண்ணன் அம்மாபேட்டை கருணாகரன் அவர்கள் ஓய்வில்லாது புகைப்படங்களை எடுத்துக்கொண்டிருந்த போதிலும் அண்ணலுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அண்ணனின் களப்பணிகள் அளப்பெரியவை...
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment