ரெய்ச்சூரில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் என கூறிக்கொள்ளும் சுப்பிரமணியன் சுவாமி, காவிரி நீரை தமிழ்நாடு கேட்க கூடாது எனவும், தண்ணீரை பெற தமிழ்நாடு வேறு வழிகளை தேடவேண்டுமெனவும் கூறியுள்ளார். சுப்பிரமணியன் பாஜக முத்த தலைவரே இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் விதத்தில் பேசியிருப்பது மிகுந்த வருத்தத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. சுவாமியின் இந்த தமிழ் துரோக பேச்சு வன்மையாக கண்டிக்கதக்கது.
காவிரி நீரை பெற தினந்தோறும் மதிமுக பொதுச்செயலாளர் தலைவர் வைகோ மற்றும் கழக தொண்டர்கள், காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் கண்மணிகள், விவசாயிகள், பொதுமக்களென போராடிக்கொண்டிருக்கும் வேளையில் சுப்பிரமணியன் சுவாமி இவ்வாறு பேசியுள்ளது தமிழர்களை மேலும் கொதிப்படைய செய்துள்ளது.
எனவே தமிழகத்திலிருந்து சென்றிருக்கும் மந்திரி பொன்.ராதாகிருக்ஷ்ணன் அவர்கள் சுப்பிரமணியன் சுவாமியின் பேச்சை கண்டிக்க வெண்டுமென கேட்டுகொள்கிறோம். மேலும் அமைச்சர் காவிரி நீர் பிரச்சினையில் மேகதாது அணைய தடுக்க பிரதமரிடத்தில் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுகொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment