தமிழகத்தில் பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்திகளை ஒளிபரப்பியபோதும், இன்றளவும் மக்களின் இதயத்தில் இடம்பிடித்த இமயம் தொலைக்காட்சியானது கடும் ஊடக போராட்டங்களுக்கு மத்தியில் அதன் 10 ஆவது ஆண்டில் வீரநடை போடுகிறது.
மதிமுக திவாலாகிவிடவேண்டும் என விழி மூடாமல் காத்திருந்த திமுக, அதிமுக வின் இதயத்திற்கு இடி விழுந்தாற்போல், இமயம் தொலைக்காட்சி உரிமையாளர் அண்ணன் ஜெபராஜ் அவர்கள், மதிமுக பொதுசெயலாளர் வைகோ அவர்களை சந்தித்து, இருட்டடிப்பு செய்கிற உங்கள் பணிகளை நான் செய்தியாக இமயம் தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறேன் என தானாகவே முன் வந்தார். அவர் இப்படி மதிமுக செய்திகளை ஒளிபரப்ப முன்வந்த நேரத்தில் தலைவர் வைகோ அவர்கள், இமயம் ஜெபராஜ் அவர்களிடத்திலே, எங்கள் கட்சியால் உங்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்காது, எனவே நீங்கள் இதை செய்யவேண்டாமென கூறினார். அதை அண்ணன் ஜெபராஜ் அவர்கள் மறுத்து, இப்படிப்பட்ட உங்களை போன்ற ஒரு தலைவனின் செய்திகளை நான் எப்படி போடாமலிருப்பது என்று கூறி ஒளிபரப்பத் தொடங்கினார். இன்றளவும் மதிமுக செய்திகளையும், தலைவர் வைகோவின் செய்திகளையும் ஒளிபரப்பிவருகிறார்.
இப்படிபட்ட சேவையை செய்து வரும் இமயம் தொலைக்காட்சி நிறுவனம் தினசரி பத்திரிகையும் வருகிற மே மாதம் முதல் தொடங்க இருக்கிறது. அதன் வருட சந்தா சேர்ப்பு பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. இமயம் தொலைக்காட்சிக்கு ஆதரவளித்ததுபோல தினசரி பத்திரிகைக்கும் தமிழக மக்கள் ஆதரவளிக்க வேண்டுமென கேட்டுகொள்வதோடு இமயம் தொலைக்காட்சியின் 10 ஆவது ஆண்டு வளமிக்கதாக அமைந்து பல்வேறு சேவைகளை இன்று போல் என்றும் தொடர வேண்டுமென கூறி ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment