தமிழ்ப் பத்திரிகை உலகில் புரட்சி படைத்த தமிழர் தந்தை அய்யா ஆதித்தனார் அவர்களது கனவுகளை நனவாக்கி, தினத்தந்தி நாளிதழை நடத்துவதில் விண்முட்டும் வெற்றியைக் கண்டவர் அய்யா சிவந்தி ஆதித்தனார் ஆவார்.
தமிழ்நாட்டின் இளைய தலைமுறை ஏற்றமும் கீர்த்தியும் பெற, விளையாட்டுத் துறையை ஊக்குவித்தார். இந்திய கைப்பந்து ஆட்டக் குழு உலகப் புகழ் எய்துவதற்கு அடித்தளம் அமைத்துத் தந்தார்.
தென்காசி விசுவநாதர் ஆலயத்தில் கோபுரம் எழுப்பினார்; எண்ணற்ற ஆலயங்களில் திருப்பணியைச் சிறப்பாகச் செய்து கோடானுகோடி பக்தர்களின் உள்ளங்களில் நிறைந்தார்.
கலைக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைத்துக் கல்வித்துறையில் சாதனை கண்டார்.
துயர்ப்படும் மக்களுக்கு வள்ளன்மையோடு வாரி வழங்கிய மனிதநேயர் அய்யா சிவந்தி ஆதித்தனார் அவர்கள் 2013 ஏப்ரல் 19 ஆம் நாளன்று மறைந்தார். இம்மண்ணை விட்டு மறைந்தாலும், மக்கள் நெஞ்சில் நிறைந்து இருக்கிறார்.
தமிழ் பேசும் தமிழக மக்கள் உலகில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை நமக்கு செய்திதாள் மூலமாக அறியும் படி செய்தார். பின்னர் ஊடகம் வாயிலாகவும் செய்திகளை உடனே மக்கள் அறிந்துகொள்ள வசதியாக தந்தி தொலைக்காட்சியையும் தொடங்கி சேவை புரிந்தார். இவரின் சேவையை மக்கள் மறக்க மாட்டார்கள்.
அந்த பெருமகனார் மறைந்த இரண்டாம் ஆண்டு நினைவு நாளில், ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அவருக்குப் புகழ் அஞ்சலி செலுத்துகிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment