காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் புதிய அணை கட்ட முயல்வதைக் தடுக்கவும், மீத்தேனை முற்றிலும் விரட்டவும், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கண்டித்தும் தஞ்சையில், காவேரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மனித சங்கிலி அறப்போராட்டம் நடைபெற்றது. இதில் வைகோ உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இதற்கு முன்னர் காவிரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்கள் உமாமகேசுவரனார் சிலைக்கு மாலை அணிவித்து மனித சங்கிலி அறப்போராட்டத்தை முறைப்படுத்தினார். தலைவருடன் மதிமுக மாவட்ட நிா்வாகிகளும் சேர்ந்து முறைப்படுத்தினர்.
இந்த அறப்போராட்டத்தில் தலைவா் வைகோ, அய்யா மணியரசன், அண்ணன் இமயம் ஜெபராஜ் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், விவசாயிகள், இரத அமைப்புகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment