நெஞ்சை விட்டு நீங்கா பாடல்களுக்கு சொந்தகாரரான எங்கள் இதயம் போற்றும் உத்தமர் நாகூர் EM ஹனிபா அவர்கள் இறந்த செய்தி கேட்டு தலைவர் வைகோவுடன், அவர்களின் தொண்டர்களும் சொல்லொண்ணா துயரத்திற்குள்ளானோம். வைகோ அவர்கள், ஹனிபா அவர்கள் இறந்த செய்தியை கேட்ட மாத்திரத்திலே நெல்லையில் இருந்து புறப்பட்டு மதுரை விமான நிலையத்தை சென்றடைந்தார். அடுத்த விமானத்திலே சென்னை பறந்தார். நடு இரவிலே திராவிட இசை முரசின் வீட்டை வந்தடைந்தார். தலைவர் வைகோ அவர்கள் ஹனிபா அவர்கள் மீது அளவற்ற அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார். அதையே ஹனிபா அவர்கள் இறந்தபொழுதும் அவருக்கான இறுதி வீரவணக்க மரியாதையை செலுத்தினார் கண்ணீரோடு...
ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாகவும் நாகூர் EM ஹனிபா அவர்களுக்கு வீர வணக்கம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment