ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டது குறித்த ஆலோசனைக் கூட்டம், இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இதில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், எஸ்.டி.பி. தஹ்லான் பாகவி, பெ.மணியரசன், வெள்ளையன், பிரிசில்லா பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் வைகோ, திருமாவளவன், வேல்முருகன் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கூட்டாக பத்திரிகையாளர்களிடத்தில் பேட்டி அளித்தனர்.
இதில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தமைழக வாழ்வுரிமை கட்சி மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் சேர்ந்து ஏப்ரல் 28ல் சென்னை பனகல் மாளிகையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
எனவே மதிமுக தொண்டர்கள் மற்றும் அனைத்து தமிழ் அமைப்புகளும் லட்சகணக்கில் கலந்துகொண்டு எதிர்ப்பை தெரிவிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment