என் அருமை பெரியவர் திராவிடத்தின் இசை முரசு நாகூர் EM ஹனிபா அவர்கள், தமிழ் திராவிட சொந்தங்களை விட்டு இறைவனில் பயணமானார்.
என் ஆதங்கத்தை நான் எப்படி வெளிப்படுத்துவேன்!
நீவிர் உயிரோடிருக்கும்போது உம் புகழ் பதிவிட இயலவில்லை...
நீவிர் பிரிந்த நாளிலோ பதிவிட வேண்டிய கட்டாயம் எனக்கு!
இதுதான் விதி செய்கின்ற வீர விளையாட்டு என்பார்களோ?
உம் புகைப்படத்தை ஒரு மாதத்திற்கு முன் தரவிறக்கினேன்,
கடந்த ஒரு வாரமாகவே எதோ உம் நினவாகவே இருந்தேன்...
என் எண்ண ஓட்டங்களெல்லாம் தாயகம் திரும்பும்போது,
தாங்களை சந்தித்து ஒரு புகைப்படம் எடுக்கவேண்டுமென...
உம்மீது ஏன் அந்த பிரியமோ உம்மை காண வேண்டுமென,
பின்னாளிலோ புரிந்தது, அதற்கு தலைவர் வைகோ தான் காரணமென...
திரவிடத்தையே உமது குரலால் கட்டி போட்டீரே!
கட்டிய கைகள் அவிழ்படும் முன்பே நீவிர் சென்றது ஏனோ?
இறைவனிடம் கையேந்த சொல்லிவிட்டீர்!
இப்போது நாங்கள் ஏந்துகிறோம் நீவிர் எமக்கு வேண்டி...
8ஆம் தேதி 8 மணிக்கு எங்களை கைவிட்டீரே!
எண்ணி பார்த்தீரா உம் உறவான எங்களை பற்றி...
எல்லோரிடத்தும் அளவிலா அன்பு காட்டினீரே!
அன்புக்கு அடிமையான நாங்கள் உமை எங்கே தேடுவதோ!
உமது காந்த குரலால் கார்மேகமும் கண்ணீர் விட்டதே!
கடவுளாக வந்தாவது எம் கண்ணீரை துடைக்கமாட்டீரோ?
2016 மறுமலர்ச்சி ஆண்டில் உமை மகுடம் ஏற்ற நினைத்தோமே!
ஆனால் உமை மலர் பல்லக்கில் வைக்க வேண்டியதாயிற்றே...
திராவிடத்தின் இசை முரசே! எங்கள் குரல்வளமே!
திரைகடல் ஓடியும் கிட்டா திரவியமே!
உம் ஆன்மா இறைவனடி சேரட்டும்,
உம் ஆசி எங்களுக்கு எப்போதும் உண்டாகட்டும்...
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment