நாகை மாவட்டத்தில் மீத்தேன் எதிர்ப்பு பிரசார பயணத்தில் வேதாரண்யம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாய்மேடு என்ற ஊரில் இருந்து தாணிகோட்டம் செல்லும் வழியில் நயினார்குளம் என்ற இடத்தில் சாலை ஓரத்தில் ஒரு பெரியவர் நிறைய ஆடுகளை வைத்து மேய்த்து கொண்டு இருந்தார்.
சாலையின் குறுக்கே கடக்க முயன்ற ஆடு ஒன்று தலைவர் வைகோ அவர்களின் வாகனம் முன்பு சென்று கொண்டிருந்த நம் தோழர் ஒருவரின் காரில் அடிபட்டு கால் முறிந்து விட்டது. வாகனத்தில் இருந்து கவனித்து கொண்டு இருந்த தலைவர் வைகோ அவர்கள் வாகனத்தை விட்டு இறங்கி, அடிபட்ட ஆட்டை பார்த்துவிட்டு, அங்கே ஆடு மேய்த்து கொண்டிருந்த பெரியவரிடம் அருகில் வந்து, என்ன தொழில் செய்கிறீர்கள்? என்று கேட்க, பெரியவர், ஆடு வளர்த்து தொழில் செய்கிறேன் என்று கூற, இந்த அடிபட்ட ஆடு எவ்வளவு விலை போகும் என தலைவர் வினவ, ஆடு மேய்க்கும் பெரியவர், ரூ.4000 ஆயிரம் என்றவுடன். ரூ 5000 ஆயிரத்தை ஆடு மேய்க்கும் பெரியவரிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து விடை பெற்றார் தலைவர்.
No comments:
Post a Comment