மதிமுக இணையதள நண்பர்களால் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிங்கப்பூர் சிற்பியின் புகழஞ்சலி நிகழ்சியானது தோழர்களின் ஒத்துழைப்பால் சீரிய முறையில் நடந்தேறியது. அண்ணன் அம்மாபேட்டை கருணாகரன் முன் மொழிய கவிங்கர் ரவிசந்திரன் அவர்கள் தலைமையேற்றார். முன்னுரை ஆற்றி சிங்கப்பூர் தந்தை லீகுவான் யூ அவர்களின் மறைவுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிறகு நம் தோழர்களை ஒவ்வொருவருக்கும் முன்னுரை அளித்து பேச அழைத்தார். அதன் படி தோழர்கள் ராஜ்மோகன், தீபன் பழனிசாமி, நாமக்கல் ஈஸ்வரன், ஆனந்த்ராஜ், முதன் முதலாக நம் நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் திருப்பதி சாய், கிரி கிரினாமதேவ், புகழஞ்சலி கூட்டத்தை ஏற்பாடு செய்த நல்லு ஆர்.லிங்கம் உரையாற்ற அண்ணன் அம்மாபேட்டை கருணாகரன் அவர்களும் சிற்றுரை நிகழ்த்தி மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர் மெழுகுவர்த்தி ஏற்றி சமீபத்தில் மறைந்த திராவிட முரசு, எழுச்சி பாடகர் நாகூர் ஹனிபா, இலக்கியவாதி ஜெயகாந்தன், கூடலூர் மு.கரிகாலன் அவர்களின் தங்கை கணவர் சிங்கப்பூர் செல்வராஜ் ஆகியோருக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தபட்டது.
கலந்து கொண்டவர்ளின் விவரம் :
முகனூல் வழியாக கேள்வி பட்டு சாத்தூரில் இருந்து வந்திருந்த தோழர் திரு.அபிராம், குடும்பத்துடன் நிகழ்வில் கலந்து கொண்ட திருப்பதி சாய் அவர்களின் மனைவியார், மகன் லிங்கேஸ்வரன், கவிங்கர் ரவிச்சந்திரன் அவர்களின் மகன் சாம், வைகோ கார்த்திக், கண்ணன் சாத்தூரப்பன், லயன் பாஸ்கர் சீத்தாபதி, முத்துக்குமார், ஆனந்தன் மெய்யப்பன், வைகோ பிரபாகர், மூக்காண்டி அருணாசலம், நல்லு அவர்களின் துணைவியார் கவி நல்லு, நம் லட்டு நல்லு, வருகை வாழ்த்து தெரிவித்த ஆர்.கே.நகர் பகுதி செயலாளர் எஸ்.ஆர்.விசு, தொண்டர் அணி ஜானகிராமன், துறைமுக பகுதி எட்வின், குட்டி மணி, ப்ளக்ஸ் டிசைன் செய்த திரு.தாயகம் டிஜிட்டல் செங்குன்றம் சந்தோஷ் அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment