Saturday, January 7, 2017

தலைமைக் கழக அறிவிப்பு! மதிமுக உயர்நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

உயர்நிலைக் குழுக் கூட்டம்:
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு கூட்டம் வருகிற 25.02.2017 சனிக்கிழமை, காலை 10.00 மணிக்கு கோவையில் கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும்.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்:
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 25.02.2017 சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் கோவையில் நடைபெறும் என மதிமுக தலைமை கழக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமன் மதிமுக இணையதள அணி

Friday, January 6, 2017

காசி ஆனந்தனின் "தம்பி ஜெயத்துக்கு" நூலை வெளியிட்டார் வைகோ!

சென்னை சைதாபேட்டையில் அமைந்துள்ள, சந்திரசேகர் திருமண மண்டபத்தில், (சீனிவாசா திரையரங்கு அருகில்) கவிஞர் காசிஆனந்தன் அவர்கள் எழுதிய "தம்பி ஜெயத்துக்கு"- (கடிதம் இரண்டு) நூல் வெளியீட்டு விழா 4.1.2017 புதன் மாலை 5 மணியளவில் நடந்தது.

இந்த நூல் வெளியீட்டு விழாவில், தமிழின முதல்வர் வைகோ அவர்கள் நூலை வெளியிட, புதியபார்வை ஆசிரியர் நடராஜன் பெற்றுக்கொண்டார்.

இதில் பழ நெடுமாறன் தலைமை தாங்கினார். வைகோ சிறப்புரையாற்றினார். ஓவியர் வீர சந்தனம், இயக்குனர் கவுதமன், மதிமுக நிர்வாகிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

கடல் குதிரைகள் திரைப்படத்தை கண்டுகளித்த தமிழ் ஆர்வலர்கள்!

நேற்று 05-01-2017 சென்னையில் நடந்த கடல் குதிரைகள் திரைப்படம் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த திரைபடத்தில், உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தல் அவர்களின் பாடல்களுக்கு, தேவா இசையமைத்திருந்தார்.

அதில் பேட்டியளித்த வைகோ அவர்கள், குண்டு பாய்ந்த செதில்கள் உள்ளே இருப்பதினால், வலியினால் நீந்த முடியாமல் நீந்தி வெற்றி பெற்று தருகிற உச்சகட்ட காட்சி வருகிற அதே கணத்திலே, குண்டு பாய்ந்து மரணத்தோடு போராடும் காட்சியும் இரண்டையும் இணைத்துகொண்டு வந்து, குருதியோட்டத்தோடு கலந்திருக்கிற உணர்வுகளை, தமிழ் இனத்தின் வேதனைகளை வெம்பல்களை, கடல் அலைகளின் ஓசைகளோடு காவியமாக தந்திருக்கிற புகழேந்தி தங்கராஜ் அவர்கள் படைத்திருக்கிற கடல் குதிரைகள் தமிழக மக்களால் வரவேற்க்கப்படவேண்டிய ஒன்று என வைகோ குறிப்பிட்டார்.

இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்களின் இந்த கடல்குதிரைகள் திரைப்படம் வெளியிடப்பட்டதை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திரு.உதயகுமார் திரு.வேல்முருகன் திரு.தனியரசு திரு.வெள்ளையன் ஆகியோர் கண்டுகளித்தனர். உடன் மதிமுக முன்னணி நிர்வாகிகள், ஏராளமான தமிழ் ஆர்வலகள் கலந்துகொண்டனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க மதிமுக ஆர்ப்பாட்டம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் இன்று 06-01-2017 மதுரையில், தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரியும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு 25 லட்சரூபாய் வழங்க கோரியும், விவசாயிகளுக்கு நிவாரண தொகையாக ஏக்கருக்கு ரூபாய் 30000 வழங்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மதிமுக பொதுச் செயலாளர், தமிழின முதல்வர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு பேருரையாற்றி விவசாயிகளின் துயரங்களை பட்டியலிட்டார். அதற்கு முன் மதிமுக விவசாய அணி செயலாளர் ஆடுதுறை முருகன் அவர்கள் விவசாயிகளின் துயரங்களை எடுத்துரைத்தார்.

இதில், மதுரை மாவட்ட செயலாளர்கள், மற்றும் கழக முன்னணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தொண்டர்களும், ஏராளமான விவசாயிகளும் கலந்துகொண்டார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி