நேற்று 05-01-2017 சென்னையில் நடந்த கடல் குதிரைகள் திரைப்படம் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த திரைபடத்தில், உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தல் அவர்களின் பாடல்களுக்கு, தேவா இசையமைத்திருந்தார்.
அதில் பேட்டியளித்த வைகோ அவர்கள், குண்டு பாய்ந்த செதில்கள் உள்ளே இருப்பதினால், வலியினால் நீந்த முடியாமல் நீந்தி வெற்றி பெற்று தருகிற உச்சகட்ட காட்சி வருகிற அதே கணத்திலே, குண்டு பாய்ந்து மரணத்தோடு போராடும் காட்சியும் இரண்டையும் இணைத்துகொண்டு வந்து, குருதியோட்டத்தோடு கலந்திருக்கிற உணர்வுகளை, தமிழ் இனத்தின் வேதனைகளை வெம்பல்களை, கடல் அலைகளின் ஓசைகளோடு காவியமாக தந்திருக்கிற புகழேந்தி தங்கராஜ் அவர்கள் படைத்திருக்கிற கடல் குதிரைகள் தமிழக மக்களால் வரவேற்க்கப்படவேண்டிய ஒன்று என வைகோ குறிப்பிட்டார்.
இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்களின் இந்த கடல்குதிரைகள் திரைப்படம் வெளியிடப்பட்டதை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திரு.உதயகுமார் திரு.வேல்முருகன் திரு.தனியரசு திரு.வெள்ளையன் ஆகியோர் கண்டுகளித்தனர். உடன் மதிமுக முன்னணி நிர்வாகிகள், ஏராளமான தமிழ் ஆர்வலகள் கலந்துகொண்டனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment