மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் வைகோ மலர் மரியாதை!
வடசென்னை கிழக்கு மாவட்டம் இராயபுரம் பகுதியில் உள்ள மூலக்கொத்தளம் இடுகாட்டில் இன்று 25-01-2017 காலையில் 10 மணியளவில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளையொட்டி தாளமுத்து நடராசன் தர்மாம்பாள் ஆகியோர் நினைவிடங்களில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார். உடன் மதிமுக முன்னணி தலைவர்கள் இருந்தனர்.
தியாகிகளுக்கு மரியாதை செய்த வைகோவை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது பேசிய வைகோ அவர்கள், மெரீனா வன்முறையில் ஈடுபட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.அவர்களுக்கு பின்னால் இருிந்த சக்திகளும் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.
நடந்த வன்முறைகளுக்கு மாணவர்கள் ஒருபோதும் காரணமல்ல. ஜல்லிக்கட்டு தடை நீங்க முழுக் காரணமும் மாணவர் போராட்டமே,,
No comments:
Post a Comment