Sunday, January 15, 2017

நாவலாசிரியர் திரு. பொன்னீலன் பாராட்டு விழா-நாகர்கோயிலில் வைகோ பங்கேற்க்கிறார்!

தமிழ் இலக்கியத்திற்கு கருவூலங்களை தந்த சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலாசிரியர் திரு. பொன்னீலன் அவர்களுக்கு குமரி மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பாராட்டுவிழா நடைபெற இருக்கிறது.

மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் வெற்றிவேல் அவர்கள் தலைமை வகிக்க, நகரச்செயலாளர் கிறிஸ்.ஜெரால்டு ஹெக்டர் அவர்கள் வரவேற்புரையாற்ற, கழகப் பொதுச்செயலாளர், தலைவர் வைகோ அவர்கள் நாவலாசிரியர் திரு. பொன்னீலன் அவர்களை கௌரவித்து சிறப்புரையாற்றுகிறார்கள்.

நாள் : 20.01.2017 வெள்ளிக்கிழமை
இடம் : P.D.பிள்ளை திருமண மண்டபம்
இராமவர்மபுரம்,
நாகர்கோவில்.
நேரம்: மாலை 5 : 00 மணி

மானுடம் வெல்லும் இலக்கியச்சோலையில் வைகோவின் இன்ப உலாவினை காண மறுமலர்ச்சி வேங்கைகள்,பொதுமக்கள், நண்பர்கள், இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் வருக வருக என குமரி மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வரவேற்க்கப்படுகிறார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment