இன்று 14-01-2017 கலிங்கப்பட்டியில் பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் மதிமுக பொதுச் செயலாளரும், கலிங்கப்பட்டியாருமான வைகோ அவர்கள் ஊர் மக்களின் பொங்கல் வாழ்த்தை அனைத்து தெருவிற்கும் சென்று பெற்றுக்கொண்டார். மேலும் அவர்களது மரியாதையையும் பெற்றுக்கொண்டார். கழக கொடிகளையும் ஏற்றினார்கள்.
மேலும் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஓவியர் வீரசந்தனம், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பொங்கலை சிறப்பித்தார்கள்.
ஏராளமான மதிமுக தொண்டர்கள் தமிழகம் முழுதும் இருந்து வந்து கலந்துகொண்டது சிறப்பு பெற்றது. மட்டுமல்லாது அனைத்து ஊர் மக்களும் ஒரே இடத்தில் கூடி பொங்கலை கொண்டாடியதே கலிங்கப்பட்டியின் சிறப்பாகவும் பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment