வைகோ அவர்களின் மிக நெருங்கிய நண்பரும், அதிக அளவில் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்தவருமான சிறுநீரகவியல் நிபுணர் மருத்துவர் சந்திரசேகரன் (குமரன் மருத்துவமனை) அவர்கள் 28.01.2017 இன்று இயற்கை எய்தினார்.
இதை கேள்விபட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் திருச்சியிலிருந்து சென்னை வந்து மருத்துவர் சந்திரசேகர் அவர்களின் திருவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
எப்போதும் சுறுசுறுப்பாக, நல்ல உடல் நலத்துடன் இருந்தவர், ஒரு வாரப் படுக்கை காரணமாக, நேற்று இரவு திடீர் மாரடைப்பால் உயிர் நீத்தார். அவரது உடல் இன்று மாலை உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது திரு உடலை வைகோ உள்ளிட்டவர்கள் சுமந்து சென்று அடக்கம் செய்தார்கள்.
மருத்துவர் குடும்பத்திற்கு ஓமன் இணையதள அணி சார்பில் இரங்கலையும், குடும்பத்தாருக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment