தமிழீழத்தில் இலங்கை ராணுவம் குண்டு மழை பொழிந்து போர் உக்கிரமாக தமிழீழ ராணுவமான விடுதலை புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்குமிடையே நடந்துகொண்டிருந்த வேளையில், போர நிறுத்தம் வேண்டும், தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டுமென்று தனது உடலை தீயிட்டாலாவது இந்தியா போர் நிறுத்தம் செய்யும், தமிழ்நாட்டு திமுக ஆட்சி அழுத்தம் கொடுக்கும் என நினைத்து தன்து உடலை பொசுக்கினான் முத்து குமார்.
அவன் மடிந்த பொழுது எழுதிய வாக்கு மூலத்தில் "ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளிக்கின்றேன்" என்று குறிப்பிட்டிருந்தும் "காதல் தோல்வியால் தற்கொலை" செய்துகொண்டான் என ஆட்சியில் இருந்த திமுக அரசு அறிவித்தது.
அந்த தியாகி தன் உயிரை தமிழீழ மக்களை காக்க கொடையளித்து நாளையுடன் 8 ஆம் ஆண்டு 2009 ஆம் வருடம் ஜனவரி 29 ஆம் நாள் முத்து குமார் இறந்த நாள்,
மதிமுக நினைவேந்தல் நிகழ்வாக தலைமை அலுவலகமான தாயகத்தில் நாளை 29-01-2017 மாலை நடத்துகிறது.
தமிழீழ உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் கலந்துகொள்கிறார். தமிழீழத்திற்காக குரலெழுப்பிக்கொண்டிருக்கும் திருமுருகன் காந்தி, புகழேந்தி தங்கராஜ் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
வைகோ தலைமையில் நடக்கும் நிகழ்விற்கு, கழக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்துமாறு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் வேண்டுகிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment