மதிமுக சார்பில் தாயகத்தில் 29-01-2017 அன்று ஈழத் தமிழர்களுக்காக இன்னுயிர் ஈந்த வீரதியாகி முத்துக்குமார் உள்ளிட்டோருக்கு 8ம் ஆண்டு புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், உரையாற்றுகையில், மருது பாண்டியர்கள் போல எங்களை நம்பியவர்களுக்காக எங்களையே தருவோம்.
மதிமுக இயக்கம் தொடங்கிய காரணமே விடுதலை புலிகளின் இயக்கத்தை அடிப்படையாக கொண்டதே. ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவலை காரணம் காட்டித்தானே என்னை திமுக கட்சியிலிருந்து நீக்கினார்கள் என வைகோ பேசினார்.
இளைஞர்கள் பாடுபட்டு போராடும் போது, அவர்களுக்கு பின்னால் துணையாக என்றுமே மதிமுக நிற்கும் எனவும் பேசினார் வைகோ. மெரினா புரட்சிக்கு அடிப்படை முத்துகுமாரின் தியாகம் எனவும் கூறினார்.
தமிழீழத்திற்காகவும் உதவிய, ஆந்திர முன்னாள் முதல்வர் திரு.என்.டி.ஆர். அவர்கள் தலைவர் வைகோ அவர்களை பிரதர் என்றுதான் அழைப்பாராம். ஈழ்த்தில் நடந்த தமிழர்களுக்கான வன்முறை குறித்து அனைத்துக் கட்சி தலைவர்களிடமும் திலீபன் உண்ணாவிரத சிடியை போட்டு காண்பித்து ஆதரவு திரட்டிய போது. திரு.என்.டி.ஆர். அவர்கள் விடியற்காலை 3 மணிக்கு வரச் சொன்னாராம். தலைவர் வைகோ அவர்களுக்கு ஆச்சரியமாக போய் விட்டதாம். அதற்கு அவரது உதவியாளர், ஐயா அவர் மாலை 7 மணிக்கு படுத்து இரவு 2 மணிக்கு எல்லாம் எழுந்து காலை 5 மணிக்கெல்லாம் அதிகாரிகளை சந்திப்பார் என்றாராம்.
திரு.என்.டி.ஆர் சொன்னது போல தலைவரும் விடியற்காலை 3 மணிக்கெல்லாம் கேசட்டுடன் செல்ல, அங்கே தயாராக இருந்தாராம் என்.டி.ஆர். மேலும் தன் தெலுகுதேச எம்பிக்கள் அனைவரையும் காலை 4 மணிகெல்லாம் வரச்சொல்லி அந்த வீடியோவை பார்க்க வைத்தாராம்.
பிறகு அவர்களிடம். பிரதர் என்ன சொல்கிறாரோ, அதன்படியே மேலவையிலும். மாநிலங்களவையிலும் நடக்க வேண்டும் என்று அவர்களுக்கு கட்டளையிட்டாராம்.
தகவல்: இணையதள நேரலை அம்மாபேட் கருணாகரன்
No comments:
Post a Comment