மறுமலர்ச்சி தி.மு.க சார்பில் இன்று 27-01-2017 திருச்சியில் இளைஞர் விழிப்புணர்வு பாசறை சட்டத்துறை நிகழ்வு நடந்தது.
இந்த நிகழ்வை கழக சட்டதுறை செயலாளர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் சீரமைக் கருவேல மரங்களை அழித்து நீர்நிலைகளை பாதுகாத்திட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வென்று செயல்படுத்திய மக்கள் தலைவர் வைகோ அவர்களுக்கு பசுமை நாயகன் என பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், மதிமுக தலைவர்களான துரை பாலகிருஷ்ணன், சின்னப்பா, மருத்துவர் ரோஹையா ஷேக், சேரன்.வந்தயதேவன், கபினி சிதம்பரம், வெல்லமண்டி சோமு, மருத்துவர் சந்திரசேகரன், ஆவடி அந்தரிதாஸ், அழகுசுந்தரம், தி.மு.ராசேந்திரன், உதயகுமார், செந்திலதிபன் மற்றும் முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மேலும் ஏராளமான இளைஞர்கள் பயிற்ச்சி பாசறையில் கலந்துகொண்டு சிறப்பு பெற்றார்கள்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார்.
No comments:
Post a Comment