தமிழ் இலக்கியத்திற்கு கருவூலங்களை தந்த சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலாசிரியர் திரு. பொன்னீலன் அவர்களுக்கு குமரி மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பாராட்டு விழா நேற்று 20-01-2017 மாலை 6 மணி அளவில் நாகர்கோயியிலில் குற்றாலம் பிள்ளை மருத்தவமனை எதிரில் அமைந்துள்ள பி. டி.பிள்ளை மண்டபத்தில் வைத்து நடந்தது.
இந்த விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு நாவலாசிரியர் திரு. பொன்னீலன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினார். பின்னர் தனது உரையில் அவர் தமிழுக்கு தொண்டாற்றியதை எடுத்துரைத்து வாழ்த்தி பேசினார்.
மாவட்டச் செயலாளர் வெற்றிவேல் அவர்கள் தலைமை வகித்தார். இந்த நிகழ்வில் நகர, ஒன்றிய, மாவட்ட, பேரூர், பகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment