Monday, April 2, 2018

ரவி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு 3 ஆம் நாள் நியூட்ரினோ எதிர்ப்பு நடைபயணத்தில் வைகோ!

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வைகோவின் நியூட்ரினோ எதிர்ப்பு விளக்க நடைபயணத்திற்கு வலு சேர்க்கவும் , வைகோ மதுரையில் இருந்து கம்பம் வரையில் ஒன்பது நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட துவக்க கூட்டத்தில் தன்மேனியில் பெட்ரோல் ஊற்றி கொண்டு தன் உடலை தனலுக்கு தந்த சிவகாசி இரவி சிகிச்சை பலனின்றி இன்று 02-03-2018 அதிகாலை இயற்கை எய்தினார்.

இந்த துயரச் செய்தி கேட்டு துடி துடித்து போன வைகோ பூச்சிப்பட்டி அருகே நடைபயணம் சென்ற போது, அங்கிருந்து கிளம்பி மதுரை அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று சிவகாசி இரவியின் உடலுக்கு மாலை வைத்து செலுத்தினார். பின் இரவியின் உடலை ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு சிவகாசிக்கு கொண்டு சென்றார். அங்கு இறுதி சடங்கில் கலந்து கொண்டு பின் மாலையில் நடைபயணத்தை தொடர்ந்தார்.

இன்றைய 3ஆம் நாள் நடைபயணம் நிறைவு நாளில் ஆண்டிப்பட்டியில் உரையில், துரும்பை தூக்கி விட்டு அதை தூணாக காட்டுபவர்க்ள் இங்கே அதிகம். எல்லாவற்றையும் விளம்பர படுத்தி கொள்பவர்கள் தான் இங்கே உண்டு. இந்த நியூட்ரினோ திட்டத்தை தன்னந்தனியாக போராடி மூன்று ஆண்டுகள் நிறுத்தி வைத்திருப்பவன் இந்த வைகோ என்று எத்தனை பேருக்கு தெரியும்?  என கேள்வி எழுப்பினார் வைகோ.

நியூட்ரினோ பிரச்சினையில் தமிழக மார்க்சிஸ்ட்கள் நிலைப்பாட்டை குற்றம் சாட்டுகிறேன் என கூறினார்.

இந்த கரங்கள் மக்களுக்காக, கறை படியாத கரங்களாக இருக்கிறது என்பது எதிரிக்கும் தெரியும். உணர்ச்சியுள்ள இளைஞர்கள் உங்களை அழித்துக் கொள்ளாதீர்கள்.ஆனால் போராட வாருங்கள். கை கூப்பி அழைக்றேன். வாருங்கள் என இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார் வைகோ.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Sunday, April 1, 2018

நியூட்ரினோ எதிர்ப்பு 2 ஆம் நாள் நடை பயணம்!

நியூட்ரினோ நாசகார திட்டத்தை எதிர்த்து மதிமுக சார்பில் விழிப்புணர்வு நடைபயணத்தை மதிரையில் 31-03-2018 அன்று தொடங்கினார் வைகோ தனது சகாக்களுடன்.மேலும் 2 ஆம் நாள் நடைபயணமாக, வெயிலையும் பொருட்படுத்தாது நடைபயணம் மேற்கொண்ட வைகோ  தன்னுடன் பயணிக்கும் தோழர்களுடனே சாலையோரத்திலே சாப்பிட்டு சாலையோரத்திலே கடும் வெயிலையும் பொருட்படுத்தாது கிடைக்கின்ற இடத்தில் ஓய்வெடுத்தார் வைகோ.

இந்த நாசகார நியூட்ரினோ திட்டத்தை தடுக்க நடக்கும் நடைபயண கூட்டத்தினர், பகலில் சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து கிடைத்த இடத்தில் ஓய்வெடுக்கிறார்கள். அடிமட்ட தொண்டன் முதல் மாவட்ட செயலாளர்கள் மாநில நிர்வாகிகளும் சாலையிலே ஓய்வெடுத்தார்கள்.

அன்று பேட்டியளித்த வைகோ அவர்கள், மேற்கு தொடர்ச்சி மலையை உடைத்தால் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. உடைக்க தேவையான நீரை முல்லைப் பெரியாரில்தான் எடுப்பார்கள். இதனால்  குடி நீருக்கும், விவசாயத்திற்கும் பாதிப்பு ஏற்படும். அணு சக்தி விஞ்ஞானி திரு.பத்ம நாபன் அவர்களிடம் விவாதித்து இருக்கிறேன். இது ஆபத்தான் திட்டமே என தலைவர் வைகோ பேட்டியளித்தார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை