நியூட்ரினோ நாசகார திட்டத்தை எதிர்த்து மதிமுக சார்பில் விழிப்புணர்வு நடைபயணத்தை மதிரையில் 31-03-2018 அன்று தொடங்கினார் வைகோ தனது சகாக்களுடன்.மேலும் 2 ஆம் நாள் நடைபயணமாக, வெயிலையும் பொருட்படுத்தாது நடைபயணம் மேற்கொண்ட வைகோ தன்னுடன் பயணிக்கும் தோழர்களுடனே சாலையோரத்திலே சாப்பிட்டு சாலையோரத்திலே கடும் வெயிலையும் பொருட்படுத்தாது கிடைக்கின்ற இடத்தில் ஓய்வெடுத்தார் வைகோ.
இந்த நாசகார நியூட்ரினோ திட்டத்தை தடுக்க நடக்கும் நடைபயண கூட்டத்தினர், பகலில் சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து கிடைத்த இடத்தில் ஓய்வெடுக்கிறார்கள். அடிமட்ட தொண்டன் முதல் மாவட்ட செயலாளர்கள் மாநில நிர்வாகிகளும் சாலையிலே ஓய்வெடுத்தார்கள்.
அன்று பேட்டியளித்த வைகோ அவர்கள், மேற்கு தொடர்ச்சி மலையை உடைத்தால் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. உடைக்க தேவையான நீரை முல்லைப் பெரியாரில்தான் எடுப்பார்கள். இதனால் குடி நீருக்கும், விவசாயத்திற்கும் பாதிப்பு ஏற்படும். அணு சக்தி விஞ்ஞானி திரு.பத்ம நாபன் அவர்களிடம் விவாதித்து இருக்கிறேன். இது ஆபத்தான் திட்டமே என தலைவர் வைகோ பேட்டியளித்தார்.
No comments:
Post a Comment