நியூட்ரினோ எதிர்ப்பு விளக்க நடைபயணம் 6 வது நாளாக போடிநாயக்கனூரிலிருந்து புறப்பட்டது. வழிநெடுகிலும் மக்கள் வரவேற்று இந்த திட்டத்தை அகற்ற வலியுறுத்தினார்கள். அப்போது எதிரில் வந்த துப்பரவு தொழிலாளர்கள் இந்த நியூட்ரினோ எதிர்ப்பு விளக்க நடைபயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.
நியூட்ரினோ எதிர்ப்பு விளக்க நடைபயணம் போடிநாயக்கனூரிலிருந்து நரசிங்கபுரம் நுழையும் போது ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு வரவேற்றார்கள் தாய்மார்கள். தலைவர் வைகோ அவர்களுக்கும், உடன் வரும் வீரர்களுக்கும் இளநீர், மோர் கொடுத்து மகிழ்ந்தார்கள்.
மாலையில் நியூட்ரினோ எதிர்ப்பு விளக்க நடைபயணம் விளக்க பொதுக்கூட்டம் புதுக்கோட்டையில் நடந்தது.
No comments:
Post a Comment