தஞ்சை முழுவதும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க அறப்போர் பிரச்சார பயணம் இன்று 29-04-2018 அன்று தஞ்சை செங்கிப்பட்டியில், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்கள் தொடக்கி வைத்து உரையாற்றினார்.
திருக்காட்டுபள்ளி வழியாக சென்ற இந்த வாகன பிரச்சார பயணத்தில் வைகோ அவர்கள் பேசும்போது, ராணுவத்தை கொண்டு வந்து மிரட்டாதீர்கள், இந்த ராணுவத்தை எல்லாம் மொழிப் போரிலேயே பார்த்தவர்கள் தமிழர்கள். சித்ரா பவுர்ணமி நாளில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளில் , இந்த தஞ்சை மண்ணில் காவிரி அறப்போர் பிரச்சாரம் துவங்கி இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment