நியூட்ரினோ நாசகார திட்டத்தை எதிர்த்து நடைபயணம் மேற்க்கொள்ளும் மதிமுகவினர் இன்று 03-04-2018 4ஆம் நாளாக ஆண்டிப்பட்டியிலிருந்து நடைபயணத்தை தொடங்கினார்கள்.
இன்றைய நடைபயணத்தில் மனித உரிமை காவலர் ஹென்றி திபேன் அவர்கள் தலைவர் வைகோ அவர்களுடன் கலந்துகொண்டு நடந்தார்.
மேலும் தலைவர் வைகோ அவர்கள் நடந்து வந்துகொண்டிருந்த போது மாணவர்கள் சந்தித்து நடைபயணத்தை வாழ்த்தும் வகையில் நாங்களும் இந்த நடைபயண எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்கிறோம் என்று சொல்லி வைகோ அவர்களுடன் நடந்து சிறுது தூரம் சென்றார்கள்.
மேலும் தேனியில் இறுதி பொதுக்கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களும் கலந்துகொண்டு நடைபயணத்தை வாழ்த்தியும் விளக்கியும் பேசினார்கள்.
நடைபயணங்களுக்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய வைகோ அவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து நாளை அனைத்து கட்சிகள் நடத்தும் வேலை நிறுத்ததிற்கு திரு.வெள்ளையன் மற்றும் திரு. விக்கிரமராஜா தலைமையிலான வணிக சங்கங்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.
மேலும் ஐந்தாம் தேதி நடைபெறும் முழு அடைப்புக்கு ஆதரவு தரும் வகையில், அன்று நடைபெறும் நியூட்ரினோ எதிர்ப்பு நடைபயணம் நடைபெறாது எனவும் முழு அடைப்பில் பங்கேற்குமாறும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment