நியூட்ரினோ எதிர்ப்பு விளக்க நடைபயணம் அம்பரப்பர் மலையின் அடிவாரத்திலிருந்து 7 வது நாளாக இன்று 07-04-2018 காலையில் தொடங்கியது.
செல்லும் வழியில் தேவாரத்தில் உள்ள இமேஜ் மனவளர்ச்சி குன்றியோர் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். மதிய உணவுக்கான அரிசி மளிகை சாமான் உட்பட அனைத்து பொருட்களும் வழங்குவதாக உறுதி அளித்தார்.
புதிதாக அவர்கள் பகுதியில் திறக்கவிருக்கும் டாஸ்மாக் கடையை தடுக்க சொல்லி தலைவர் வைகோ அவர்களிடம் கிராமத்து பெண்கள் கோரிக்கை வைத்தார்கள். தலைவரும் இன்றே தேனி மாவட்டம் கலெக்ட்ரிடம் பேசுவதாக உறுதி தந்தார்கள்.
தமிழ்நாட்டு நலனுக்கு முதல் விரோதி தமிழக கவர்னர் என வைகோ குற்றஞ்சாட்டினார். பல்கலை கழகங்களுக்கு தமிழ்நாட்டில் பேராசிரியர்கள் இல்லையா?
குட் ஷெப்பர்ட் பள்ளியை சேர்ந்த குழந்தைகள் தலைவர் வைகோ அவர்களை அன்புடன் வரவேற்றார்கள்
நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்கும் துணிவு உங்களுக்கு மட்டுமே உள்ளது. இந்த விஷயத்தில் நாங்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்போம். உங்களை மட்டுமே நம்புகிறோம். என தலைவர் வைகோ இன்று நடைபயணம் மேற்கொண்ட ஒவ்வொரு ஊரிலும் உள்ள பெரியவர்கள். தலைவர் வைகோ அவர்களை வாழ்த்தி வரவேற்றார்கள்.
காலை நடைபயண உணவு இடைவேளையின் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில செயலாளர் திரு.முத்தரசன் அவர்கள் தலைவர் வைகோ அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள். அதே நேரம் மீண்டும் தமிழ் மாநில செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கு திரு.முத்தரசன் அவர்களுக்கு தலைவர் வைகோவும் வாழ்த்து தெரிவித்தார்கள்கள்.
திரு.நல்லக்கண்ணு அவர்கள் வரும் 9ஆம் தேதி நடைபயணத்தில் கலந்து கொள்வதாக தலைவர் வைகோ அவர்கள் தெரிவித்தார்கள்.
மக்களின் உள்ளமே கோயில். அதில் ஒரு இடம் கிடைத்தால் அதைவிட பெரிய பாக்கியம் ஏதுமில்லை. நான் விஞ்ஞானி இல்லை. ஆனால், இந்த மண்ணை காக்கும் போராளி என தலைவர் வைகோ உரையாற்றினார்.
செய்திகள், படங்கள்: இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன்
No comments:
Post a Comment